சபை ஒழுங்கு
Jeffersonville, Indiana, USA
63-1226
1சகோதரரே, ஜீவனுள்ள தேவனுடைய சபையை எவ்விதம் இயக்குவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்துக்காக இன்றிரவு இக்கூட்டத்தை நாம் கூட்டியுள்ளோம். இந்த சபை அதன் ஒரு பாகம் என்பதை நாம் விசுவாசிக்கிறோம்.
முதலாவதாக இதைக் கூற விரும்புகிறேன். நான் உலகம் முழுவதும் செய்த பயணங்களில், எனக்குத் தெரிந்தமட்டில், இது மிகச் சிறந்த ஆவிக்குரிய இடங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. எனக்குத் தெரிந்த மற்றெல்லா இடங்களைக் காட்டிலும் இங்கு தேவனுடைய ஆவியை நீங்கள் அதிகமாக உணரலாம். இதைப் போன்றிருந்த இரண்டு இடங்கள் என் நினைவுக்கு வருகிறது. ஆனால் இப்பொழுது இந்த இடங்களை நாம் காண்பதில்லை. அவைகளில் ஒன்று ஸ்தாபனமாகிவிட்டது. மற்றது ஒருவகையில் விழுந்துவிட்டது.
எனவே நேற்று என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, இந்த சபையில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்த இந்த கேள்விகளை என்னிடம் கேட்பதற்காக ஒரு கூட்டத்தை நீங்கள் விரும்புவதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் .... அதற்காகவே இன்றிரவு நான் இங்குள்ளேன். அதாவது சபையை ஒழுங்குபடுத்துவதற்காக, அல்லது இந்த சபையை தொடர்ந்து நடத்த அவசியமானவை என்று நான் கருதும் உண்மைகளை உங்களுக்கு எடுத்துரைக்க.
2சகோதரரே, இது ஆவிக்குரிய இடம்என்று நான் குறிப்பிட்டதன் அர்த்தத்தை நீங்கள் உணருகிறீர்கள் என்னும் உறுதி கொண்டவனாயிருக்கிறேன். இது உலகில் மிகப் பெரிய இடம் அல்ல, அல்லது இங்கு அதிகமான பாடல்கள் பாடுவதோ, அதிகமாக கூச்சலிடுவதோ, அதிகமாக சத்தம் போடுவதோ அதிகமாக பாஷைகள் பேசப்படுவதோ கிடையாது. அதுவல்ல, ஆனால் இந்த கூடாரத்தில் இயங்கும் ஆவியின் தரமே முக்கியம் வாய்ந்தது. நான் சகோ. நெவிலுக்கும் இங்குள்ள சகோதரராகிய உங்களுக்கும், தர்மகர்த்தாக்களுக்கும், டீக்கன்மார்களுக்கும், ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளருக்கும், இவ்விதமாக நடப்பதற்கு நீங்கள் செய்த உதவிக்காக, என் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் இளைஞனாயிருந்த முதற்கொண்டு, இந்த சபை ஒழுங்குபடுத்தப்பட்டு, அந்த ஒழுங்கில் வைக்கப்பட்டுள்ளதை காண வேண்டுமெனும் ஆவல் என் இருதயத்தில் குடிகொண்டுள்ளது, என் நீண்ட நாள் ஜெபமும் அதுவே.
3இந்த சபையை நாம் பிரதிஷ்டை செய்தபோது, ''சில நாட்கள் கழித்து உங்களிடம் சிலவற்றை கூற விரும்புகிறேன்'' என்று நான் உங்களிடம் கூறினேன் - அதாவது, இதை எவ்வாறு ஒழுங்குபடுத்த வேண்டுமென்றும், இதை எப்படி நடத்த வேண்டுமென்றும். அதன் பிறகு.... நீங்கள் தொடங்கி நடத்தினீர்கள் - நமக்கு போதகர்களும் மற்றவர்களும் இருந்தனர். இப்பொழுது, சகோ. நெவில், நமது மத்தியில் வந்து, இளமை பருவம் கொண்டிருந்ததால், நான் இப்பொழுது கூறப்போகின்ற இந்தக் காரியங்கள் கூறப்படுவதற்கு முன்பாக சகோதரன் நெவில் விசுவாசத்தில் ஸ்திரப்படுவது அவருக்கு நலமானதாயிருக்கும் என்று நான் எண்ணினேன். தற்பொழுது அவர் விசுவாசத்தில் மிகவும் ஸ்திரப்பட்டுள்ளதையும், உபதேசம் என்னவென்று அவர் விளங்கிக் கொண்டு, கிறிஸ்துவுக்கு உண்மையுள்ள சாட்சி என்னும் பாகத்தை அவர் வகித்து, நாம் சத்தியம் என்று விசுவாசிப்பதை அவர் பற்றிக் கொண்டிருப்பதால், இந்த ஒழுங்குகளை அவரும், மூப்பர்களும் சபையிலுள்ள மற்றோரும் கடைபிடித்து நினைவு கூருவதற்கு அதை அளிக்க இதுவே ஏற்ற மணி நேரம் என்று கருதுகிறேன். என் அறிவுக்கு எட்டினமட்டில், தேவனுக்கு முன்பாக இவைகளே அந்த ஒழுங்குகள். நான் கூறின விதமாகவே நீங்கள் இவைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறேன். ஏனெனில் யாராகிலும் ஒருவர் இங்கு தலைவராக இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு....
4இப்பொழுது, நான் அதிகாரத்தைக் கைப்பற்றவோ, அவ்விதம் ஏதாவதொன்றை செய்யவோ நினைக்கவில்லை. ஆனால், பாருங்கள், இரண்டு தலைவர்களுடைய மனிதனுக்கு எந்த பக்கம் போவதென்று தெரியாது. தேவன் தமது சபைக்கு இரண்டு தலைவர்களை எக்காலத்தும் வைக்கவில்லை. அவர் அவ்விதம் செய்ததேயில்லை, ஒரே தலைவன் தான். நாம் வேதாகமத்தை ஆராய்ந்த போது கண்டது போல், ஒவ்வொரு சந்ததியிலும் அவர் ஒரு நபருடன் மாத்திரமே ஈடுபட்டு வந்துள்ளார். ஏனெனில், இரு மனிதர் இருந்தால், இரு கருத்துக்கள் இருக்கும், அது முடிவான முற்றிலுமான ஒன்றுக்கு வரவேண்டும். என்னுடைய முற்றிலுமானது (absolute) வார்த்தையே, வேதாகமமே. இந்த சபையின் போதகர் என்னும் முறையில், எனக்கு முற்றிலுமானது வார்த்தையே. நான் விரும்புவது... சகோதரராகிய நீங்கள் என்னை உங்கள் முற்றிலுமானவனாக (absolute) கருதுகிறீர்கள் என்பதை அறிவேன். நான் தேவனைப் பின்பற்றும் வரைக்கும் பவுல் வேதத்தில் கூறியுள்ளது போல், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல், நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்''
5சகோதரரே, நான் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது என்னவெனில், இந்த வேத சத்தியத்திலிருந்து நான் எப்பொழுதாவது விலகிப் போய் விட்டதை நீங்கள் காண்பீர்களானால், நீங்கள் என்னிடம் தனியாக வந்து நான் எங்கு தவறு செய்து விட்டேன் என்பதை என்னிடம் கூற வேண்டுகிறேன். நீங்கள் தர்மகர்த்தாக்களில் ஒருவராயிருந்தாலும் அல்லது நீங்கள் வாயிற்காப்போனாயிருந்தாலும், யாராயிருந்தாலும் பரவாயில்லை. நான் கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு ஒரு சகோதரன் என்னும் முறையில், வேதப் பிரகாரமாக நான் எங்கு தவறாயிருக்கிறேன் என்பதை என்னிடம் எடுத்துரைக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். எதாகிலும் கேள்வி இருக்குமானால், நாம் ஒருமித்து உட்கார்ந்து அதற்கு விடை காணுவோம்.
இன்றிரவு நீங்கள் என்னிடமாக வந்துள்ள காரணம். அந்த காரணத்திற்காகவே நீங்கள் என்னை இங்கு அழைத்து வந்தீர்கள். இங்கு என்னிடம் நீங்கள் எழுதி வைத்துள்ள கேள்விகள் உங்கள் மனதில் எழும்பிய கேள்விகளே. இப்பொழுது சகோதரரே, இதை நினைவில் கொள்ளுங்கள். எனக்குத் தெரியாது... இவைகளில் பெயர்கள் எதுவும் கையொப்பமிடப்படவில்லை. ஆனால்... கேள்விகள் மட்டுமே எழுதி வைக்கப்பட்டுள்ளன. இவைகளை யார் எழுதினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இவை உங்கள் மனதில் எழுந்த கேள்விகள். என் அறிவுக்கு எட்டின வரைக்கும், இவைகளுக்கு விடையளிக்க நான் இங்குள்ளேன்.
6ஞாபகம் கொள்ளுங்கள், நான் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டுமென்று தேவன் என்னை எதிர்ப்பார்க்கிறார். நீங்கள் இந்த சபையில் வார்த்தையைக் கடைபிடிக்க வேண்டுமென்று நான் உங்களை எதிர்ப்பார்க்கிறேன், பாருங்கள், பாருங்கள். இதை ஆவிக்குரியதாக நீங்கள் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் கர்த்தரில் வளரத் தொடங்கும் போது, சாத்தானின் அந்தகார ராஜ்யத்தின் சக்திகள் உங்களுக்கு கெதிராக திருப்பி விடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பயிற்சி பெற்ற போர் வீரர்களாக இருக்க வேண்டும், புதிதாக சேர்ந்தவர்களாய் அல்ல. நீங்கள் இப்பொழுது அனுபவம் வாய்ந்த போர் வீரர்கள். சண்டையிட நீங்கள் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள். சாத்தான் உங்கள் நடுவில் வந்து, கூடுமானால் ஒருவருக்கொருவர் சச்சரவை உண்டாக்க முனைவான். அவனை உடனே விரட்டுங்கள். நீங்கள் சகோதரர், அவனோ சத்துரு. உலகம் இருளடைந்து சபை இராஜ்யம் முழுவதுமே உலக சபைகளின் ஆலோசனை சங்கத்துக்குள் சென்று கொண்டிருக்கும் இந்த சாயங்கால வெளிச்ச நேரத்தில், நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கவே இங்குள்ளோம். வெகு விரைவில் அவர்கள் இந்த கதவின் மேல் ''மூடப்பட்டது'' என்று எழுதப்பட்டுள்ள அட்டையை தொங்க விடுவார்கள். அப்பொழுது நாம் வேறு இடங்களில் கூட வேண்டியதாயிருக்கும். ஏனெனில், நாம் மிருகத்தின் முத்திரையை தரிக்காமல் போனால், இந்நாட்களில் ஒன்றில் அவர்கள் நிச்சயமாக இந்த சபைகளை மூடி விடுவார்கள். மரணம் நம்மை விடுவிக்கும் வரைக்கும், நாம் தேவனுக்கு உண்மையாய் நிலைத்திருந்து அவர் பேரில் சார்ந்திருக்கிறோம். அதைத்தான் நாம் செய்யத் தீர்மானித்துள்ளோம்.
7இப்பொழுது நேரடியாக எந்த நேரத்திலாவது இவைகளைக் குறித்து கேள்வி எழுமானால், உங்கள் கூட்டங்களில், அல்லது கூட்டத்துக்கு முன்னால், கூட்டம் தொடங்குவதற்கு முன்னால், இந்த சபை அங்கத்தினர்களுக்கு இந்த ஒலிநாடாவை போடுங்கள்! இந்த மனிதர் இந்த கொள்கைகளைக் கடைபிடிக்க, அவர்கள் இந்த சபையில் அளித்த உறுதி மொழியின்படி தேவனுக்கு கடமைப்பட்டவராயிருக்கின்றனர் என்பதை இங்குள்ள சபையோர் அறிந்து கொள்ளட்டும். ஒருவேளை நீங்கள் அவர்களுடன் இணங்காமல் போகலாம். ஆனால் நீங்கள் சபையை நடத்த நான் விட்டுக் கொடுத்தால், உங்களுடன் நான் இணங்காமல் இருப்பேன். நமக்கு எங்காவது முடிவான ஆதாரம் ஒன்று இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்தமட்டில், பரிசுத்தஆவி என் முடிவானவராக இருக்க நான் இடங்கொடுத்து, அவருடைய அபிஷேகத்தின் கீழ் இவைகளுக்கு விடையளிக்கிறேன். இந்த கேள்விகளுக்கு இந்த ஒலிநாடா உங்கள் முடிவாக இருப்பதாக!
8இப்பொழுது முதலாவது கேள்வி:
உணவுக்கும் துணிக்கும்... பொருளாதார உதவிக்கென வேண்டுகோள்கள் வரும்போது சபை எவ்விதம் செயல்பட வேண்டும்? என்ன - என்ன செயலை, சபை என்ன செய்ய வேண்டும்?
சபையானது தனக்கு சொந்தமானவர்களுக்கு உத்திரவாதமாயிருக்க வேண்டுமென்பதை நாம் உணருகிறோம். இங்குள்ள சபை அங்கத்தினர்களுக்கு ஏற்படும் தேவைகளை அளிப்பதற்கு நாம் முழுவதும் உத்திரவாதமுள்ளவர்களாயிருக்கிறோம். இந்த கூடாரத்துக்கு நிலையாக, எப்பொழுதும் வந்து நம்முடன் தொழுது கொள்ளும் அங்கத்தினர்களுக்கு - நாம் உத்திரவாதமுள்ளவர்களாயிருக்கிறோம். இங்கு கூடிவரும் நமது சபையின் அங்கத்தினர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, நமது சகோதரரும் சகோதரிகளும் என்னும் முறையில், அவர்களுக்கு உதவி செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
உண்ண உணவும் உடுக்க துணியும் இல்லாத கோடிக் கணக்கானோர் இன்றிரவு உள்ளனர் என்பதை நாம் உணருகிறோம். அவர்கள் அனைவருக்கும் உதவி செய்ய, நம்மால் முடிந்த அனைத்தும் செய்ய நமக்கு ஆவல் உள்ளது. ஆனால் அவ்விதம் நாம் செய்ய நமக்கு பணவசதி இல்லை; முழு உலகத்துக்கும் நம்மால் உதவி செய்ய முடியாது. ஆனால் நமக்கு சொந்தமானவர்களுக்கு உதவி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். அதன் பிறகு ஏதாகிலும் மீதமிருந்து இந்த சபையின் அங்கத்தினர் அல்லாதவர்க்கு நீங்கள் எதையாகிலும் கொடுக்க விரும்பினால் டீக்கன்மார் குழு அதற்கான தீர்மானம் எடுக்க வேண்டும் என்பது என் கருத்து.
9இந்த எதிர்ப்பு அல்லது இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டியவர் டீக்கன்மார்களே, ஏனெனில் வேதத்தில், அப்போஸ்தலருடைய நடபடிகளில், உணவு உடைகளைக் குறித்து வாக்குவாதம் உண்டானபோது, அவர்கள் அப்போஸ்தலர்களை வரவழைத்தனர். அவர்கள், “பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழு பேரை உங்களில் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் இந்த வேலையை கவனித்துக் கொள்வார்கள். நாங்களோ ஜெபம் பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்” என்றனர்.
எனவே உணவு போன்ற விஷயத்தை கவனித்துக் கொள்வது மேய்ப்பனின் வேலையல்ல. அது டீக்கன்மார்களின் வேலை. அது தர்மகர்த்தாக்களின் வேலையும் அல்ல. அதை செய்ய வேண்டியது டீக்கன்மார்களே, பிறகு இது.... வேதத்தில் அவர்கள் தங்கள் சொந்த தேவைகளுக்காக பணம் கொடுத்தார்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அப்பொழுது கிரேக்கர்களுக்கும், யூதர்களுக்குமிடையே, ஒருவருக்கு மற்றவை விட அதிகம் கிடைக்கிறது என்னும் விஷயத்தில், வாக்குவாதம் உண்டாயிற்று. ஆனால் ஜனங்கள் தங்களுக்குண்டான யாவற்றையும் விற்று சபைக்கு கொடுத்து அதை தாங்கினர். அது அவர்கள் நடுவே சமமாகப் பங்கிடப்பட வேண்டும். அப்பொழுது ஒரு சிறு சச்சரவு எழுந்தது. அங்கு தான் நாம் முதன் முதலாக டீக்கன்மார்களைப் பெற்றோம். அதை செய்வது அவர்களுடைய வேலைகளில் ஒன்றாகும்.
10என் கருத்து என்னவெனில் நமக்கு சொந்தமானவர்களை, நமது சொந்த ஜனங்களை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏதாகிலும் புகார் வரும் பட்சத்தில், அதை டீக்கன்மார் குழுவின் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதைக் குறித்து என்ன செய்ய வேண்டுமென்று டீக்கன்மார் குழு முடிவு எடுக்க வேண்டும். இவையனைத்தும் - துணிகள், உணவு, பண உதவி, அது என்னவானாலும் - டீக்கன்மார் மூலம் வரவேண்டும். இந்த டீக்கன்மார்கள், தாங்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தீர்மானம் எடுத்த பிறகு, இந்த பண உதவியைச் செய்ய அல்லது துணிகளை வாங்க, அல்லது வேறெதாவதை செய்ய பணம் கொடுக்க முடியுமா என்று அறிந்து கொள்ள, இதை பொருளாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் டீக்கன்மார் குழு மாத்திரமே கூடி இந்த விஷயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும். இதை தர்மகர்த்தாக்கள் அல்லது மேய்ப்பனிடம் கொண்டு போகக்கூடாது. இது முழுவதும் டீக்கன்மார்களைப் பொறுத்த விஷயம்.
11இப்பொழுது இரண்டாம் கேள்வி:
அந்நிய பாஷைகள் பேசுதலும் அர்த்தங்கள் உரைத்தலும் ஆராதனைக்கு முன்பு நடைபெறும் கூட்டத்தில் செய்யப்பட வேண்டும் என்று பிரசங்க பீடத்திலிருந்து பகிரங்கமாகக் கூறினால் போதுமா? இது என்னிடமுள்ள இந்த காகிதத்துண்டில் உள்ள இரண்டாம் கேள்வி, இது ஒரு சிறு அட்டை.
இது இங்குள்ள மேய்ப்பருக்கு சம்பந்தமானது, பாருங்கள். ஏனெனில் ஆவிக்குரிய பாகத்துக்கு அவரே தலைவர். ஒழுங்கை நிலைநாட்ட, ஏழைகளுக்கு உணவளிக்க, இத்தகைய காரியங்களை கவனித்துக்கொள்ள டீக்கன்மார்கள் சபையின் போலீஸ்காரராயுள்ளனர். தர்மகர்த்தாக்கள் பணம் சம்பந்தமான காரியங்களையும் கட்டிடத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஆவிக்குரிய பாகத்தை மேய்ப்பர் மேற்பார்வையிடுகின்றார். சகோ. நெவில், இது உங்களுடன் சம்பந்தப்பட்டது.
12இப்பொழுது, அங்கே.... சில நாட்களுக்கு முன்பு, சபையில் ஒழுங்கு நிலை நாட்டப்பட்ட போது, நான் அந்நிய பாஷைகள் பேசுவதிலும், அர்த்தம் உரைப்பதிலும், தேவன் சபைக்கு அளித்துள்ள எல்லா அருமையான ஆவிக்குரிய வரங்களிலும் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் நாம் வேதாகம காலத்துக்கு ஒத்த ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அங்கு சபைகள்... நீங்கள் பவுலைக் கவனிப்பீர்களானால், அவன் எபேசுவில் எபேசு சபையை நிறுவினான். அது நன்றாக நிறுவப்பட்ட ஒரு சபை. நீங்கள் கவனித்தீர்களா? பவுல் அநேக பாஷைகளை பேசினான் என்றும், அவன் பாஷைகள் பேசும் வரத்தைப் பெற்றிருந்தான் என்றும் நாமறிவோம். அதை பவுலே கூறியுள்ளான். அது அவன் கற்ற பாஷைகள் அல்ல, அது ஆவிக்குரிய பிரகாரமாய் அவனுக்கு அளிக்கப்பட்டவை. அதைக் குறித்து அவன் எவ்விதம் கொரிந்தியர் நிருபத்தில் கூறுகிறான் என்று பாருங்கள் நேரத்தை வீணாக்காமலிருக்க நான்.... வேதத்திலிருந்து அதை படிக்கப் போவதில்லை. ஏனெனில் அவ்விதம் செய்தால், இன்றிரவு நாம் அதிக நேரம் தங்க வேண்டியதாயிருக்கும். எனக்கு நேரம் அதிகமில்லை. இப்பொழுது.... நீங்கள் அதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக.
13இப்பொழுது, பவுல் ஒரு முறையாவது ஆவிக்குரிய வரங்களைக் குறித்தோ அல்லது அதை எவ்விதம் ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதைக் குறித்தோ எபேசு சபைக்கு, அல்லது ரோமர் சபைக்கு அல்லது வேறெந்த சபைகளுக்கும் கூறவில்லை. ஆனால் அதைக் குறித்து அவன் கொரிந்தியர்களுக்கு அடிக்கடி கூறி வந்தான், ஏனெனில் அவர்கள் அதை ஒரு பிரச்சனையாக எந்நேரமும் செய்துவிட்டனர். பவுல் அவர்களிடம் வந்த போது ஒருவனுக்கு அந்நிய பாஷை பேசும் வரமும், வேறொருவனுக்கு சங்கீதம் பாடும் வரமும் இருப்பதைக் கண்டு, அவர்களுடைய அருமையான வரங்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுத்ததாக கூறுகிறான். நீங்கள் கவனிப்பீர்களானால், கொரிந்தியர் முதலாம் அல்லது இரண்டாம் அதிகாரத்தில், கிறிஸ்துவில் அவர்களுடைய ஸ்தானம் என்னவென்பதை குறித்து பவுல் அவர்களிடம் கூறுகிறான், எவ்விதம் அவன் அவர்கள் எவ்விதம் கிறிஸ்துவில் ஸ்தானத்தை பெற்றுள்ளனர் என்பதைக் குறித்து.
அவர்களுக்கு இதை எடுத்துக் கூறின பிறகு, அவன் ஒரு தகப்பனைப் போல் அவர்களுக்கு சவுக்கடி கொடுத்து, ''உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன். கர்த்தருடைய பந்தியில் நீங்கள் குடித்து வெறிப்பதாக கேள்விப்படுகிறேன்'' என்கிறான். அவன் அவர்களை கிறிஸ்தவரல்லாதவர்களாக ஆக்கிவிடவில்லை. சகோதரராகிய நீங்கள் அவ்விதம் செய்ய வேண்டும், அவர்களை கிறிஸ்தவரல்லாதவர்களாக ஆக்கிவிட வேண்டாம். ஆனால் அவர்கள் தேவனுடைய வீட்டில் நடந்து கொண்ட விதம் அது. அங்கு தான் அது அடைகிறது.
14இதை நான் கூற விரும்புகிறேன். முந்தின காலத்து பவுல் கூறினது போல, “நீங்கள் கூடி வந்திருக்கிற போது, ஒருவன் அந்நிய பாஷையிலே பேசினால், ஒருவன் அர்த்தத்தைச் சொல்ல வேண்டும். அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், அமைதியாயிருங்கள். ஆனால் அர்த்தம் சொல்லுகிறவன் இருந்தால்...''
இப்பொழுது, இங்குள்ள சபையை நான் கவனித்து, நீங்கள் வளருவதைக் கண்டிருக்கிறேன். உங்கள் மத்தியில் அநேக ஆவிக்குரிய வரங்கள் கிரியை செய்வதை நான் கண்டிருக்கிறேன். வெளிப்படையாகக் கூறினால், ஒன்றைக் குறித்து நான் கர்த்தரிடமிருந்து வார்த்தையை பெற்று நான் சகோதரன் நெவிலிடம் வந்து அவர் செய்து கொண்டிருந்த ஒன்றின் பேரில் நான் திருத்துதலை செய்ய வேண்டியதாயிற்று.
நான்... கர்த்தர். என்னை... பரிசுத்த ஆவி என்னை இந்த மந்தைக்கு கண்காணியாக வைத்திருப்பாரானால், உங்களுக்கு சத்தியத்தை எடுத்துரைப்பது என் மேல் விழுந்த கடமையாகும். நான் சகோ. நெவிலுக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவர் சத்தியத்துக்கு செவி கொடுத்தார். தேவன் என்னிடம் கூறுவதை மாத்திரமே உங்களுக்கு நான் எடுத்துரைக்க முடியும்.
15இப்பொழுது... இந்த விஷயத்தில், உங்கள் சபை வளர்ந்து வருவதை நான் கவனித்துக் கொண்டு வந்தபோது, இதை கவனித்தேன். சபையில் இவ்விதம் தான் நாம் முதலில் செய்து கொண்டு வந்தோம். ஆனால் இப்பொழுது இவ்விதம் செய்ய விரும்புகிறோம்.
இப்பொழுது, நீங்கள் கவனிக்காமல் போனால், குழந்தைகள்... ஒரு குழந்தைக்கு பேச முடியாதபோது, அது பேசுவதற்கு முயற்சி செய்கிறது. பாருங்கள்? அது வாயில் அதின் நுரையை தள்ளிக்கொண்டு அதிக சத்தம் போட்டு... பிரசங்கியின் சத்தத்தை விட அதிக சத்தமிடலாம் என்று நினைத்துக் கொள்கிறது. நல்லது, அது இயற்கை வாழ்க்கையில் மாத்திரமல்ல. ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அவ்விதமே என்று நாம் காணலாம். அது சிறு பிள்ளை. அந்த குழந்தை 'கூ' என்று சத்தமிட்டு பேச முயற்சிப்பதால், அவனை அடித்து திருத்த முயன்றால், நீங்கள் பிள்ளையைப் பாழாக்கி விடுவீர்கள். பாருங்கள், அவனுக்கு தீங்கு விளைவிப்பீர்கள். அந்த குழந்தை தன் சொற்களை சரியாக பேசும் பருவம் வரைக்கும் அவனை வளர விட்டு, அதன் பிறகு, அப்பா, அம்மா பேசும் போது, அவன் குறுக்கே பேசக்கூடாதென்றும், குறித்த நேரம் வரும்போது, அவன் பேசலாம் என்றும் அவனுக்கு சொல்லிக் கொடுக்கலாம். நான் கூறுவது விளங்குகிறதா? அவன் பேசுவதற்கு நேரம் வரும்போது, அவன் பேசலாம்.
16வெளியில் நடக்கும் கூட்டங்களில், எனக்கு ஒன்று என் மாம்சத்தில் முள்ளாக இருந்திருக்குமானால், அது நான் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நிய பாஷை பேசி, ஆவியைக் கெடுத்து விடுதலே. நியூயார்க் பட்டினத்திலும் மற்றும் வெவ்வேறு இடங்களிலும் நடந்த கூட்டங்களில் நான் பங்கு கொண்டு இப்பொழுது தான் திரும்ப வந்தேன். அங்கு போதகர்கள் இதை பலமுறை அனுமதிக்கின்றனர். அது குழப்பத்தை விளைவிக்கிறதேயன்றி வேறல்ல. பாருங்கள், தேவன் ஒருவகையான கருத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்... அது... அவர் சபையோரின் மூலம் மற்றொரு வகையான கருத்தை நுழைத்து பீட அழைப்பை கொடுப்பாரானால், அவரே தமது நோக்கத்தை குலைத்து விடுவார்.
உதாரணமாக, அது இது போன்றது. நாம் மேசையில் உட்கார்ந்து கொண்டு கர்த்தரைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது மகன் மேசைக்கு வேகமாக ஓடி வந்து நம் கவனம் அனைத்தையும் கவர்ந்து, அப்பா அம்மா! என்னே! என்னே! 'பேஸ்பால்' விளையாட்டில் என் குழுவுக்கு நான் ஜெயிக்கும் ரன் எடுத்தேன். நாங்கள் இதை, அதை, மற்றதை செய்தோம்'' என்று உரக்க சத்தமிட்டால் நாம் புனிதமான பொருளின் மேல் உரையாடிக் கொண்டிருக்கும்போது, அவன் பேஸ்பால் விளையாட்டில் ஜெயிக்கும் 'ரன்' எடுப்பது நல்லது தான். ஆனால் நாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தில் குறுக்கே நுழைந்து இதை கூறுவது ஒழுங்கற்ற செயல். அவனுடைய நேரம் வரும் வரைக்கும் அவன் காத்திருந்து, 'பேஸ் பால்' விளையாட்டில் என்ன செய்தான் என்பதை நம்மிடம் கூறியிருக்க வேண்டும்.
17இன்றைக்கு வரங்களைக் குறித்த விஷயத்திலும் அதையே நாம் காண்கிறோம். அதன் காரணமாகத்தான் தேவன் அதிகமான ஆவிக்குரிய வரங்களை ஜனங்களுக்கு நம்பி கொடுப்பதில்லை. ஏனெனில் அவைகளை எவ்விதம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. இன்றுள்ள விஷயம் அதுவே, நாம் பெற்றிருப்பதை விட அதிகமாக பெறாமலிருக்கும் காரணம்.
பிறகு, ஆவிக்குரிய வரங்களில் நிறைய போலிகளை நாம் காண்கிறோம். நமது சபையில் அவ்வாறில்லை, அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவை போலிகள் அல்ல, நமக்கு உண்மையான வரங்கள் உள்ளன என்று நான் நம்புகிறேன். ஆனால் இவ்வரங்களை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பது நமக்குத் தெரிந்திருப்பது அவசியம்.
18நீங்கள் நன்மையான ஒன்றை செய்து கொண்டிருக்கும்போது.... நீங்கள் முதன் முறையாக ஒரு முதலாளியின் கீழே வேலைக்கு அமர்ந்து அவர் கொடுக்கும் கட்டளையை நிறைவேற்ற ஆயத்தமுள்ளவர்களாயிருந்தால், முதலாளிக்கு உங்கள் மேல் நம்பிக்கை பிறந்து உங்களுக்கு உத்தியோக உயர்வை அவ்வப்போது கொடுத்து கொண்டே வருகிறார்.
தேவன் நமக்கு அளித்துள்ள வரங்களை விட இன்னும் அதிகமான வரங்களை நமக்கு நம்பி அளிப்பதற்கு... பிரன்ஹாம் கூடாரத்திற்கு நேரம் வந்துவிட்டதென்று நம்புகிறேன். ஆனால் நாம் இப்படியே சென்று கொண்டிருக்கக்கூடாது. அதாவது ஒரு மனிதனுக்கு நாம் எப்பொழுதும் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் என்னும் நிலையில் இருக்கக்கூடாது. ''தீர்க்கதரிசிகளுடைய ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது'' என்று வேதம் உரைக்கிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஒரு மனிதன் அல்லது ஸ்திரீயை நீங்கள் வேதப் பிரகாரமான சத்தியத்தை உரைத்து திருத்தி, அந்த நபர் ஒழுங்கை மீறினால், அவர்கள் மேல் தங்கியுள்ளது தேவனுடைய ஆவி அல்லவென்பதை அது காண்பிக்கிறது. ஏனெனில் வேதம், ''தீர்க்கதரிசிகளுடைய ஆவி,'' அல்லது ''தீர்க்கதரிசனம் உரைப்பது,'' அதாவது சாட்சி கூறுதல், பிரசங்கம் செய்தல், அந்நியபாஷை பேசுதல் அல்லது எதுவாயிருந்தாலும் சரி. ஏனெனில் அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் தீர்க்கதரிசனமாகும். எனவே அது தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது. வார்த்தையே தீர்க்கதரிசி. ஒரு மனிதன் அல்லது ஸ்திரீ, பிரசங்கிட பிரசங்க பீடத்திலிருக்கும் போது, எழுந்து குதித்து தீர்க்கதரிசனமாக செய்தியை அளிப்பது ஒழுங்கை மீறும் செயல் என்பதை நாம் காண்கிறோம்.
19இதை நான் பிரன்ஹாம் கூடாரத்துக்கு ஆலோசனையாக கூறுகிறேன், நமக்குள்ள நமது வரங்கள்... இங்கு மிகவும் சிறந்த வரம் பெற்றவர் நமக்குள்ளனர். இந்த வரங்கள் ஒவ்வொன்றும் தன்னில் தானே ஊழியமாக அமைந்துள்ளன. அவை வரங்கள், உதாரணமாக பிரசங்கம் செய்தல் ஒரு வரம், சுகமளித்தல் ஒரு வரம். மற்றவை போலவே இவைகளும் வரங்கள். இவை தம்மில் தாமே ஊழியங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த ஊழியத்தில் நிலைத்திருக்க கட்டளை பெற்றிருக்கிறான்.
எனவே பிரன்ஹாம் கூடாரம் இவ்விதம் இயங்கட்டும், முக்கியமாக இந்நாளில் (இதை நான் கூற விரும்பவில்லை, ஆனால் நம்மிடமாக மிக அதிகமாக பாவனைகள் - நம்பிக்கை இருந்தது. நமக்கு பாவனைகள் வேண்டாம். எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு நேர்மையான நபரும் அதிகமாக பாவனைகளைப் பெற்றிருக்க விரும்பமாட்டார். நாம் நமக்கு உண்மையானது இல்லாமற்போனால், எதையுமே பெற்றுக் கொள்ளாமல் இருப்போம், உண்மையானதைப் பெறும் வரைக்கும் நாம் காத்திருப்போம். இப்பொழுது மனிதராகிய நீங்கள் நான் கூறுவதை ஒத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். பாவனை எதுவும் வேண்டாம். சகோதரரே, ஏதாவதொன்றை நாம் செய்து, இவ்வுலகை விட்டுச் செல்லக்கூடாது. நாம் உண்மையானதை மற்றும் நம்பத்தகுந்ததை பெற்றிருக்க வேண்டும். அது நமக்கு இல்லாமல் போனால், அதை நாம் பெறும் வரை காத்திருந்து, அதன் பிறகு அதைக் குறித்து பேசுவோம். பாருங்கள்?
20இதைக் கூற விரும்புகிறேன், அந்நிய பாஷை பேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, செய்திகளை அளிக்கும் மனிதரும் ஸ்திரீகளும்.... அவை உண்மையானவை என்று மனிதராகிய உங்களுடன் நானும் விசுவாசிக்கிறேன். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று வேதம் உரைக்கிறது. மேலும் ஏசாயாவின் புத்தகத்தில், ''பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன். இதுவே நீங்கள் பிரவேசிக்க வேண்டும் என்று நான் உரைத்த இளைப்பாறுதல்'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பிரகாரத்தில் (Sanctuary) ஒரு நேரத்தில் ஒரே வரம் கிரியை செய்ய வேண்டுமென்று நான் ஆலோசனை கூறுகிறேன். அப்பொழுது அது, நான் குறிப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த ஒழுங்குக்கு நம்மை மறுபடியும் கொண்டு வரும். ஒருவர் பேசிக் கொண்டிருந்தால், தீர்க்கதரிசிகளுடைய ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கட்டும். உங்களுக்கு புரிகிறதா? இப்பொழுது, கிறிஸ்துவின் சரீரத்துக்கு ஊழியத்தைப் பெற்றுள்ளார். இவ்வளவு நான் கூறி வந்தது இப்பொழுது செயல் முறைக்கு கொண்டு வரப்படட்டும். கிறிஸ்துவின் சரீரத்துக்கு ஊழியத்தைப் பெற்றுள்ளோர் தங்கள் ஊழியத்துக்கான தருணம் வரும் வரை காத்திருக்கட்டும். ஏனெனில் அது கிறிஸ்துவினிட மிருந்து சபைக்கு அளிக்கப்படும் ஊழியமாகும். நீங்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் ஊழியம் செய்ய முடியாது. ஒரு நேரத்தில் ஒருவர் என்பதாக அது இருக்க வேண்டும்.
21பிரன்ஹாம் கூடாரம் இவ்வாறு இருக்க வேண்டும். அந்நிய பாஷை பேசுவோர், பாஷைக்கு அர்த்தம் உரைப்போர், சபைக்கு அளிக்கப்படவிருக்கும் தீர்க்கதரிசனம் உரைப்போர், இவர்கள் அனைவரும் நேரத்தோடே... ஆராதனை துவங்குவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட அறையில் ஒன்றுகூடி, கர்த்தருடைய ஊழியத்துக்காக காத்திருக்க வேண்டும்.
மேய்ப்பர் சபையோரின் முன்னிலையில் வருவதற்கு முன்பு, தனிமையில் வேதத்தை எடுத்து, அமைதி நிலவும் அவருடைய அறையில் ஆவியில் படித்து, சபையோரிடம் பேசுவதற்கு வெளியே வருவதற்கு முன்பு அபிஷேகம் பண்ணப்பட வேண்டும். இல்லையென்றால், அவர் வெளியே வரும்போது குழப்பத்தில் இருப்பார் (ஆவியின் வரம் பெற்ற ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஸ்திரீயும் கர்த்தருக்கு முன்பாக வரக்கடவர்கள்). மேய்ப்பருக்கு ஒரே ஊழியம் மட்டும் இருப்பதால் - அவர் ஒரு தீர்க்கதரிசி. 'பிரசங்கி' (a preacher) என்னும் அர்த்தமுடைய ஆங்கிலச் சொல் “தீர்க்கதரிசி'' என்று பொருள்படும். அதாவது, வார்த்தையை எடுத்துரைப்பவர்.
22வேறொருவருடன் ஒரு பாகமாக ஊழியங்களைக் கொண்டிருப்பவர்கள் - உதாரணமாக ஒருவர் அந்நிய பாஷை பேசுதல், மற்றொருவர் அதற்கு அர்த்தம் உரைத்தல் - ஒருமித்து தங்கள் ஊழியத்திற்காக காத்திருப்பார்களாக. ஒருவர் தனியறையில் தங்கி அந்நிய பாஷை பேசி விட்டு, அதன் பிறகு வெளியே வந்து மற்றவரிடம் அதன் அர்த்தம் என்னவென்று உரைக்கக்கூடாது. அப்படி ஒருவர் செய்வாரானால், அவருக்கு அந்நிய பாஷை பேசும் வரம், அதற்கு அர்த்தம் உரைக்கும் வரம் இரண்டும் இருக்க வேண்டும். பாருங்கள்? அவருக்கு இருக்குமானால், மிகவும் நல்லது, அதை அவ்வாரே நாம் ஏற்றுக் கொள்வோம். நமது சபையிலுள்ள இந்த வரங்களினால் சபையோர் பயனடைய வேண்டுமென்று விரும்புகிறோம். தேவன் அவைகளை நமக்கு அனுப்பினார். அது... இந்த ஆவியின் வரங்களினால் நமது சபை பயனடைய வேண்டுமென்று விரும்புகிறோம். எனவே அந்நிய பாஷை பேசுபவரும், பாஷைக்கு அர்த்தம் உரைப்பவரும் தீர்க்கதரிசனம் உரைப்பவரும், சபை கூடுவதற்கு முன்பாக ஒன்று கூடட்டும். அவர்கள் மாத்திரம் ஒரு அறையில் கூடி, சபைக்கு கர்த்தருடைய ஊழியத்துக்காக காத்திருப்பார்களாக. இது புரிகிறதா?
23பிறகு, இது இப்படி சகோ. நெவில்..... நல்லது, இப்பொழுது இதை நான் .... மன்னியுங்கள், இதை கூற விரும்புகிறேன். சகோ. காலின்ஸ் அந்நிய பாஷை பேசி, சகோ. ஹிக்கர்ஸன் அதற்கு அர்த்தம் உரைப்பாரானால், இருவரும் ஒருமித்து சபைக்கு ஒரு ஊழியத்தைப் பெற்றுள்ளனர். அது சகோ. நெவிலின் ஊழியம் அல்ல, அது சபைக்கு உங்களுடைய ஊழியம். இதை ஒரு உதராணமாகக் கூறினேன். போதகர் தேவனுடைய வீட்டில் தன் ஊழியத்தைச் செய்ய எவ்வளவு சிரத்தை கொண்டுள்ளாரோ, உங்களுக்கும் உங்கள் ஊழியத்தை செய்ய அவ்வளவு சிரத்தை இருக்க வேண்டும். அதை நீங்கள் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் உங்கள் சொந்த அறையில் அதை நீங்கள் தனியாக செய்யக்கூடாது. ஒருவர் அந்நிய பாஷை பேசி மற்றவர் அர்த்தம் உரைத்தால், நீங்கள் இருவரும் ஒன்று கூட வேண்டும். நீங்கள் சபையிலுள்ள ஒரு அறையில் ஒன்று கூடுங்கள். ஏனெனில் இது தனியான ஊழியம், இது பகிரங்கமான ஊழியம் அல்ல. இது சபைக்கு உதவுவதற்காக பாருங்கள்? இது சபைக்கு உதவுவதற்காக, ஆனால் இதை சபையோரின் மத்தியில் செய்யக்கூடாது. நான் உங்களுக்கு சொல்லும் விதமாகவே அது செய்யப்பட வேண்டும். உதாரணமாக, சகோ. காலின்ஸ் அந்நிய பாஷை பேசி, அதற்கு சகோ. ஹிக்கர்ஸன் அர்த்தம் உரைப்பாரானால், வேறொரு சகோதரன் அதை எழுதிக் கொள்ளட்டும். அதன் பிறகு, அது...
24கர்த்தர் வரப்போகிறார் என்று நம்மெல்லாருக்கும் தெரியும், அது நாமனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு இரவும் சகோ. நெவில் எழுந்து நின்று, “இதோ, கர்த்தர் வருகிறார். இதோ, கர்த்தர் வருகிறார்!'' என்றுரைத்தால், அதில் தவறொன்றுமில்லை, பாருங்கள். அவர் போதகர் என்னும் முறையில் மேடையிலிருந்து அதை உரைக்கிறார். அதை ஆதரிக்க அவரிடம் வசனம் உள்ளது. அவர் சபைக்கு போதகராக, தீர்க்கதரிசியாக இல்லை, போதகராக இருப்பாரானால், அவர் கர்த்தருடைய வார்த்தையை நன்றாக படித்து, கர்த்தருடைய வருகையைக் குறித்து கர்த்தருடைய வார்த்தையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அதன் மூலம் நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். ஆனால் இதனுடன் அவர் சம்பந்தப்படாத சபையிலுள்ள மற்ற ஊழியம் என்னவென்றால் அந்நிய பாஷை பேசுதல் அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் (அது தீர்க்கதரிசனமாகும்) அல்லது ஒரு தீர்க்கதரிசி பேசுவது, அது வார்த்தையில் எழுதப்பட்டிராத ஒன்றாகவும் அது இருக்கும். போன்றவை - வார்த்தையில் எழுதியுள்ளதை போதகர் உங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்; ஆனால் வார்த்தையில் எழுதப்பட்டிராததை அவருக்கு நீங்கள் கூற வேண்டும். உதாரணமாக நீங்கள் ''சகோ. வீலரிடம் என்று கூறுங்கள், கர்த்தர் உரைக்கிறதாவது நாளை அவருடைய மண் நிலத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறுங்கள் ஏனெனில் அங்கு ஒரு லாரி கவிழ்ந்து விடும்,'' அப்படி ஏதோ ஒன்று. அது அப்படி செய்யப்பட வேண்டும். நீங்கள் அந்நிய பாஷை பேசினீர்கள், அவர் அதற்கு அர்த்தம் உரைத்தார். உங்கள் ஊழியம் முடிவடைந்தவுடன் அதை எழுதி மேடையின் மேல் வைத்து விடுங்கள். அன்றிரவு, சபை ஆராதனைக்கு பிறகு.... பாடல்கள் பாடத் தொடங்கிய பிறகு, உங்கள் ஊழியம் முடிவடைந்துவிட்டால், என்ன தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதென்று மற்றவர்கள் கூறட்டும்.
25நம்மிடம் அப்படிப்பட்டவர்கள் இல்லையென்று எண்ணுகிறேன். உங்கள் மத்தியில் இருப்பார்களானால், இதை அங்கு வைத்து விடுங்கள். இந்த ஜனங்கள் ஒன்று கூடும்போது, ஞானமுள்ளவன் முதலில் வரக்கடவன். ஏனெனில் வேதாகமத்தின்படி, ஒருவன் அந்நிய பாஷை பேசி, வேறொருவன் அதற்கு அர்த்தம் உரைத்தால், அது இரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் நிலை வரப்படாமல் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அது கர்த்தருடைய வார்த்தையென்று இரண்டு அல்லது மூன்று பேர்கள் (பாருங்கள்?) சாட்சியுரைக்க வேண்டும். மற்ற ஊழியங்களைப் போல் இந்த சிறுபான்மை ஊழியங்களில் தவறான ஆவிகள் நுழைந்து விடுகின்றன. பாருங்கள், அவை பறந்து அங்கு வந்து விடுகின்றன. அது நமக்கு வேண்டாம். இப்படிப்பட்ட ஊழியங்கள் தவறு என்று நாம் அம்பலப்படுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில் தேவனுடையதாயுள்ள எதுவும்... அதை அம்பலப்படுத்துவதில் கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் அது தேவனுடையதாயிருக்குமானால், அது பரீட்சைக்கு நிற்கும்.
போதகர் செய்வது போல், யாராகிலும் அவருக்கு வார்த்தையின் பேரில் சவால் விட்டால், அவர் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை. அவர் என்ன பேசுகிறார் என்பதை நன்கு அறிந்தவராய் சவால் விடுபவனிடம் “இங்கே வாருங்கள்'' என்பார். பாருங்கள்? அவ்வாறே இந்த மற்ற ஊழியங்களும் அதேவிதமாக அமைந்திருக்க வேண்டும்.
26இப்பொழுது, ஒருவன் அந்நிய பாஷை பேசி ஒரு செய்தியை அளித்தால்.... சிலர் தங்களுக்கு பக்திவிருத்தி உண்டாவதற்காக அந்நிய பாஷையில் பேசி நல்ல ஒரு தருணத்தை அனுபவிப்பதாக வேதம் கூறுகிறது. அவர்கள் உணர்ச்சியோடு அந்நிய பாஷை பேசுகின்றனர். அவர்கள் அந்நிய பாஷை பேசுவது உண்மையே, அவர்கள் உண்மையில் அந்நிய பாஷை பேசுகின்றனர், ஆவியானவரே அதை செய்கிறார். ஆனால் அவர்கள் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு தங்களுக்கு பக்தி விருத்தி உண்டாக அந்நிய பாஷை பேசுவார்களானால், அது சபைக்கு பிரயோஜனமற்றதாக இருக்கும். ஒரு மனிதன் அல்லது ஒரு ஸ்திரீ - யார் அந்நிய பாஷை பேசினாலும் - அவர்கள் தங்களுக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறார்கள். பாருங்கள்?
அந்நிய பாஷை பேசுதல் என்பது பக்திவிருத்தி உண்டாவதற்காக தேவனால் அளிக்கப்பட்ட வரம். பவுல் வேதாகமத்தில் கூறியுள்ளது போல், அது சபைக்கு பக்திவிருத்தி உண்டாவதற்காக அளிக்கப்பட்டது. எனவே அது, வேதாகமத்தில் எழுதப்பட்டதற்கு புறம்போயுள்ள, தேவனிடத்திலிருந்து சபைக்கு நேரடியாக வரும் ஒரு செய்தியாக இருக்க வேண்டும். அது ஏதோ ஒரு....
27நீங்கள் என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே, நான் எவ்வகையில் ஞானஸ்நானம் பெற வேண்டும்?'' என்று கேட்பீர்களானால், நான் உடனே உங்களுக்கு பதிலுரைக்க முடியும். நீங்கள் அந்நிய பாஷையில் பேசி அதை எனக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அதை எவ்விதம் பெற வேண்டுமென்று வேதாகமத்தில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. பாருங்கள்? எனக்கு அவசியமில்லை..... நீங்கள் என்னிடம் அந்த கேள்வி கேட்டு, வேறு யாராகிலும் அந்நிய பாஷை பேசி அதை உங்களுக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. பாருங்கள், அது ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீங்கள், ''சகோ. பிரன்ஹாமே, நான் என்ன செய்ய வேண்டும், நான் இந்த சபைக்கு செல்ல வேண்டுமா அல்லது வேறொரு சபைக்கு செல்ல வேண்டுமா என்னும் தீர்மானத்தை செய்ய வேண்டியவனாயிருக்கிறேன்,'' அப்படி ஏதோ ஒன்று, அல்லது, ''நான் இதை செய்ய வேண்டுமா, அதை செய்ய வேண்டுமா?'' என்று கேட்பீர்களானால், அதற்கான பதில் தேவனிடத்திலிருந்து வர வேண்டும். பாருங்கள், தேவன் அதை நமக்கு அறிவிக்க வேண்டும். ஆனால், அது வேறொரு ஊழியத்தின் வழியாக வரவேண்டும். ஏனெனில் வார்த்தை, ''ஆர்மன் நெவில் பிரன்ஹாம் கூடாரத்தை விட்டு விட்டு போர்ட் வேயின் காஸ்பல் கூடாரத்திற்கு செல்லட்டும்'' என்று கூறுவது கிடையாது. பாருங்கள், அது இந்த வார்த்தையில் கூறப்படவில்லை, பாருங்கள், அதற்காகத்தான் இந்த வரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
28உதாரணமாக, ஒரு மனிதன் இங்கு வந்து, ''உங்களுக்கு தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கையுண்டா?'' என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் பிரசங்கிக்கிறோம், அதை நாம் விசுவாசிக்கிறோம், நாம் எண்ணெய் பூசி ஜெபம் செய்வதில் விசுவாசம் கொண்டுள்ளோம்.
ஆனால் ஒருவர் வந்து, ''எனக்கு சுகம் கிடைக்கவில்லை, காரணம் என்ன?' என்று கேட்பாரானால், அந்நிய பாஷை, அர்த்தம் உரைத்தல், தீர்க்கதரிசனம் உரைத்தல் போன்ற ஏதாவதொன்றின் மூலம் தேவன் அவருடைய வாழ்க்கையை ஊடுருவி, அவர் செய்த காரியத்தை வெளியே கொண்டு வந்து அதை அவரிடம் கூறுகிறார். அந்த ஊழியம் போதகரைச் சேர்ந்ததல்ல, அது இந்த வரங்களைச் சேர்ந்தது. ஆனால் அவை கூட்டத்தில் செய்யப்படக் கூடாது. புரிகின்றதா?
29பவுலுக்கு ஒரு முறையாவது இதைக் குறித்து எபேசு சபைக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் ஒழுங்கைக் கடைபிடித்தனர். ரோமர் சபைக்கோ வேறெந்த சபைக்கோ அவன் இதைக் குறித்து கூறவில்லை, கொரிந்து சபைக்கு மாத்திரமே. அவர்களால் ஒழுங்கைக் கடைபிடிக்க முடியவில்லை.... அந்நிய பாஷை பேசுவதில் பவுல் நம்பிக்கை கொண்டிருந்தான். எபேசுசபை அந்நிய பாஷை பேசினது, அவ்வாறே கொரிந்து சபையும் (பாருங்கள்), ஆனால் அவனால் எபேசியர்களுக்கு, அந்நிய பாஷை பேசுதல், பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் போன்றவைகளை விடமேலான காரியங்களைப் போதிக்க முடிந்தது.
அந்நிய பாஷை பேசுதல், தீர்க்கதரிசனம் உரைத்தல் போன்றவைகளின் மூலம் அளிக்கப்பட்ட செய்தியை யாராகிலும் ஒருவர் எழுதி மேடையின் மேல் வைத்தால், இதை பேசி அர்த்தம் உரைத்த மக்களின் ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்னும் செய்தியை போதகர் பிரசங்கத்திற்கு முன்பு படிக்க வேண்டும். அர்த்தம் உரைக்கப்பட்ட விதமாகவே அது நடந்தேறினால், அவருடைய ஆவி நமது மத்தியில் இருப்பதற்காக நாம் கரங்களை உயர்த்தி தேவனுக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். அது நடக்காவிட்டால், அந்த பொல்லாத ஆவி உங்களை விட்டுப் போகும் வரைக்கும் அதை செய்யாதீர்கள். தேவன் பொய் சொல்லமாட்டார், அவர் எப்பொழுதுமே உண்மை பேசுகிறவர்.
பிறகு, பாருங்கள், நீங்கள் புருஷரைப்போல் நடந்து கொள்ள போதிய வயதுடையவர்களாயிருக்கின்றீர்கள். நீங்கள் ''கூ,கூ,கூ'' என்று சத்தமிடும் குழந்தைகள் அல்ல. நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அர்த்தம் இருக்க வேண்டும்.
30இப்பொழுது ஒழுங்குக்கு வந்து கொண்டிருக்கும் சபை, இந்த ஒழுங்கைக் கடைபிடிக்கட்டும். ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்தால்... கல்லாதவன் ஒருவன் உங்கள் மத்தியில் வந்திருக்கும் போது, நீங்கள் அந்நிய பாஷை பேசினால், அவனுக்கு நீங்கள் விளங்காத பாஷை பேசும் காட்டு மனிதனாக இருப்பீர்கள். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று அவனுக்கு விளங்காது. பாருங்கள்? இதைக் குறித்து இந்நாளில் அதிக குழப்பம் இருக்கும் போது, இது இடறலை விளைவிக்கிறது. ஒருவர் அந்நிய பாஷை பேசட்டும். வேறொருவர் அதற்கு அர்த்தம் உரைத்து செய்தியை அளிக்கட்டும். என்ன நடக்கப் போகிறதென்பதைக் குறித்து அது மேடையின் மேல் வாசிக்கப்படட்டும். அது நடக்கும்போது, என்ன நடக்கிறதென்று நீங்கள் காணலாம். ''நாளை குறிப்பிட்ட நேரத்தில் அல்லது அடுத்த வாரம் குறிப்பிட்ட நாளில் ஒருகுறிப்பிட்ட காரியம் நடக்கும்'' என்று அவர்களிடம் கூறுங்கள். அப்பொழுது அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் அவிசுவாசி, நடக்கப் போவதை முன்னறிவிப்பதைக் கேட்கட்டும். அப்பொழுது உங்கள் மத்தியில் என்ன விதமான ஆவி உள்ளதென்று அவர்கள் அறிந்து கொள்வார்கள், அது தேவனுடைய ஆவியாயிருக்கும். பவுல் அதைத்தான் கூறினான்: “ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்து இருதயத்தின் அந்தரங்கங்களை வெளிப்படுத்தினால், சபையோர் எல்லாரும் அல்லது அந்த அவிசுவாசி முகங்குப்புற விழுந்து, ''தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறார்'' என்று அறிக்கையிடுவான் அல்லவா?'' என்றான். அவன் பாருங்கள்? ஏனெனில் அது தவறாயிருக்க வழியில்லை....
31ஆனால் இப்பொழுது நமக்கு வேண்டாம்.... பவுல் கொரிந்தியர்களிடம், ''நான் குழந்தையாயிருந்த போது, குழந்தையைப் போல நடந்து கொண்டேன், குழந்தையைப் போலப் பேசினேன்.'' அவனுக்கு குழந்தையின் மனம் இருந்தது. “நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்து விட்டேன்'' என்றான்.
இப்பொழுது, உங்கள் எல்லோருக்கும் கூறுகிறேன். பாருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இந்த வரங்களையுடைய குழந்தைகளாய் இங்கும் அங்கும் விளையாடிக் கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் நீண்ட காலமாய் பள்ளிக் கூடத்தில் பயின்று வந்திருக்கிறீர்கள். நீங்கள் புருஷராகும் நேரம் இது, எனவே இவைகளை விளையாடுவதற்கென்று உபயோகிக்கக் கூடாது. இந்த வரங்கள் புனிதமானவை, இவை தேவனுடையவை, இவைகளைக் கொண்டு நீங்கள் விளையாடாதீர்கள். தேவன் இவைகளை உபயோகிக்க நாம் இடம் கொடுப்போம். அவ்வாறே உங்கள் ஊழியம் இருக்க வேண்டுமென்று விரும்புவோம், அந்த வழியில் தான் பிரன்ஹாம் கூடாரத்தை நாம் ஊழியத்தில் கொண்டுவர வேண்டும். இதைக் குறித்து எப்பொழுதாகிலும் கேள்வி எழும்பினால், இந்த விதமாகத்தான் பிரன்ஹாம் கூடாரத்தில் செய்யப்பட வேண்டும் என்பதற்கு இந்த ஒலிநாடா சாட்சியாக இருக்கட்டும்.
இங்கு அந்நியர் வருவார்களானால் இது சபை பாகுபாடற்ற கூடாரம் என்பதால் அந்நியர் எல்லா நேரத்திலும் இங்கு வருகின்றனர். இங்கு வருபவர்களுக்கு இதைக் குறித்த சரியான பயிற்சி அளிக்கப்படாமல் இருக்க வகையுண்டு. அவர்களுக்கு அதிகம் தெரியாது. அவர்களுடைய போதகரின் முன்னிலையில் அவர்கள் குதித்து அவருடைய செய்தியையும் பீட அழைப்பையும் பாழாக்கி, அந்நிய பாஷை பேசி எல்லாவற்றையும் செய்கின்றனர். அவர்களைக் காட்டிலும் நீங்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். பாருங்கள்? ஆராதனை தொடங்கின பிறகு அவர்கள் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டால், அவர்களிடம் செல்ல வேண்டியது டீக்கனின் கடமையாகும். உங்கள் போதகர் அதை செய்ய வேண்டாம். உங்கள் சபையில் டீக்கன்மார்கள் இல்லாமல் போனாலொழிய, இதை கவனித்துக் கொள்ள வேண்டியது ஒரு டீகனே. பாருங்கள்?
32இப்பொழுது, ஆராதனையின் போது.... ஒருவர் எழுந்து நின்று ஒரு செய்தியை அளித்தால், அதற்காக போதகர் ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டு அவரைப் பேச அனுமதிப்பாரானால், நல்லது, பாருங்கள், அது போதகரைப் பொறுத்தது. ஆனால் உடனே டீக்கன், அந்த நபர் கட்டிடத்தை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு, அவரை ஒரு புறம் அழைத்துச் சென்று இதைக் குறித்து சொல்ல வேண்டும். அவர் கேள்வி கேட்கத் தொடங்கினால், உடனே அவரை இந்த ஒலி நாடாவுக்கு அழைத்து சென்று, ''இப்படித்தான் இந்த சபையின் பேராயர் அல்லது கண் காணிப்பாளர்...'' கண்காணிப்பாளர் தான் பேராயர். பாருங்கள், அவ்வாறே வேதத்தில் கூறப்பட்டுள்ளது, ''கண்காணிப்பு'' (bishopric), பாருங்கள். எனவே அவர் சபையின் பொதுவான கண்காணிப்பாளர்...“ இதுவே ஒழுங்கு. இதைத் தான் சபை கடை பிடிக்கிறது. உங்கள் செய்தியை அளிக்க வேண்டுமென்பதே எங்கள் வாஞ்சையாயுள்ளது. நீங்கள் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியை பெற்றிருந்தால்.... அது அளிக்கப்பட்டு, மேடையின் மேல் எழுதிவைக்கப்படட்டும். எங்கள் போதகர் அந்த செய்தியை சபையோருக்கு படித்து காண்பிப்பார்'' என்று கூறுங்கள். ஆனால் அது வேத வசனங்களை மீண்டும் கூறுவதாய் அமைந்திருக்கலாகாது. அது ஏதோ ஒன்று நடக்கப்போவதைக் குறித்தோ, அல்லது அவர்கள் செய்ய வேண்டிய ஒன்றைக் குறித்தோ ஜனங்களுக்கு நேரடியாக வரும் செய்தியாக இருக்க வேண்டும். இதை புரிந்து கொண்டீர்களா? சரி.
33சபையில் ஒழுங்கைக் கடைபிடிக்க, டீக்கன்மார்கள் ஜனங்களை அதைக் குறித்து அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும் முறையைக் காட்டிலும் சிறந்தமுறை வேறெதாகிலும் உண்டா? இல்லை, இப்பொழுது தான் நான் விளக்கினேன். இது மூன்றாம் கேள்வி.
டீக்கன்மார்களே, சபையில் தயவாயும் நட்புத்தன்மையோடும் ஒழுங்கைக் காத்துக் கொள்வது உங்கள் கடமையாகும். சபையில் யாராகிலும் ஒழுங்கை மீறினால், அல்லது குடித்து விட்டு சபைக்கு வந்தால், நீங்கள் தான் அதை கவனிக்க வேண்டும்.
அன்று இரவு மேடையின் மேல் நின்று கொண்டிருந்த போதகர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த குடிகாரன் இரட்டை குழாய் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து அவனுடைய மனைவி எங்கே என்று அலறினான். அவன் போதகரிடம் சென்று அவன் மனைவி எங்கே என்று கேட்டான். போதகர் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அவனுடைய மனைவியைக் காண்பித்தார். போதகர் அவனுடன் ஈடுபடத் தொடங்கினார். அதற்கு பதிலாக துப்பாக்கியைவைத்திருந்த அந்த மனிதன் திரும்பி பிரசங்க பீடத்தில் நின்று கொணிருந்த போதகரை சுட்டு கொன்று விட்டு, தன் மனைவியையும் சுட்டுக் கொன்று விட்டு, தன்னையும் சுட்டுக் கொண்டான்.
அந்த மனிதன் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த போது ஒரு கூட்டம் டீக்கன்மார்கள் இருந்திருப்பார்களானால் அவர்கள் அவனை இறுகப்பிடித்து அவனுடைய கையிலிருந்து துப்பாக்கியை பிடுங்கியிருப்பார்கள். பாருங்கள்? அவர்களே ஒழுங்கை காக்கும் டீக்கன்மார்கள். இவை எல்லை மீறி நடந்து கொண்டிருப்பதால், நீங்கள் எதையும் எதிர்ப்பார்க்கலாம். ஆனால், ஞாபகம் கொள்ளுங்கள், யார் என்ன நினைத்தாலும், தேவனுடைய சபையில் தேவனுடைய போலீஸ்காரர்கள் டீக்கன்மார்களே. சில நேரங்களில், ஒரு போலீஸ்காரன் தன் நண்பரில் ஒருவனை கைது செய்ய விருப்பங் கொள்ள மாட்டான். ஆனால் அவன் தன் உத்தியோகக் கடமையை நிறைவேற்றுவதாக ஆணையிட்டுள்ளபடியால், அதை எப்படியும் செய்தாக வேண்டும். அது அவன் தன் நகரத்துக்காக நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். பாருங்கள்?
34அவ்வாறே ஒரு டீக்கனும் தன் சபையில் செய்ய வேண்டிய கடமையுண்டு. போதகர் செய்தியை அளித்துக் கொண்டிருக்கும் போது, யாராகிலும் குதிக்கவோ அல்லது அப்படிப்பட்ட வேறொதாவதையோ செய்து போதகரைத் தடை செய்தால், இரண்டு அல்லது மூன்று டீக்கன்மார்கள் அவரிடம் நடந்து சென்று, “சகோதரனே, உம்மிடம் சிறிது பேசலாமா?'' என்று கூறி, பாருங்கள், அவரை சபையிலிருந்து வெளியே இங்குள்ள அலுவலகத்துக்கு, அல்லது வேறொதாவது அலுவலகத்துக்கு, அழைத்து வந்து, ''நீங்கள் தடை செய்யக்கூடாது'' என்று ஆலோசனை கூற வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, ஆராதனை நடப்பதற்கு தடையாயிருந்தால் நாட்டின் சட்டபடி அதற்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். பாருங்கள்? சிலர், உதாரணமாக குற்றம் புரிந்தவர்கள், உங்கள் மத்தியில் வரும்போது, அல்லது மூடமதாபிமானம் கொண்டவர்கள் வந்து இவ்வாறு நடந்து கொள்ளும் போது, டீக்கன்மார்கள்.... டீக்கன்மார்களால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், தர்மகர்த்தாக்களில் ஒருவர் அல்லது சபையிலுள்ள வேறு யாராகிலும் சென்று அவர்களுக்கு உதவி செய்யலாம். அது உங்களுக்குத் தெரியும்.
35இந்த கேள்வியை நான் மறுபடியும் படிக்கிறேன்.
சபையில் ஒழுங்கைக் கடைபிடிக்க, மக்கன்மார்கள் ஜனங்களை அதைக் குறித்து அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும் முறையைக் காட்டிலும் சிறந்தமுறை வேறெதாகிலும் உண்டா?
இப்பொழுது, எப்பொழுதாகிலும், நான் நினைக்கிறேன். போதகர் அடிக்கடி.... அல்லது இந்த ஒலிநாடாவைப் போடுங்கள். இது சாட்சியாக நிற்கட்டும். டீக்கன்மார்கள் போலீஸ்காரர்கள். அவர்களுடைய சொற்கள் சட்டமும் ஒழுங்குமாம். பாருங்கள்? தேவனுடைய வீட்டை சரியான முறையில் வைத்திருக்க அவர்கள் சபையிலிருந்தும் நாட்டின் சட்டங்களின் மூலமாகவும் அதிகாரம் பெற்றுள்ளனர். டீக்கனின் சொல்லுக்கு முரணாக நடப்பவர் எவருமே இரண்டு ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வகையுண்டு. டீக்கன்மார்கள் அவர்களைப் போகச் சொல்லி அவர்கள் போகாமல் ஒழுங்கற்ற விதத்தில் நடந்து கொண்டால், அவர்களுக்கு என்ன நடக்குமென்று அவர்கள் அறியாமலிருக்கின்றனர்.... அப்படிப்பட்டவருக்கு எல்லா விதமான அபராதமும் விதிக்கப்பட வகையுண்டு.
இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படுமானால்... உதாரணமாக யாராகிலும் குதித்து ஒழுங்கை மீறினால் அல்லது அந்நியபாஷை பேசினால், அவர்களை நான் ஒன்றும் செய்யமாட்டேன். பாருங்கள், அவர்கள் செய்யட்டும், ஏனெனில் அவர்கள் அந்நியர். ஆனால் அவர்கள் நமது சொந்த ஜனங்களாயிருந்தால், அப்பொழுது.... அடுத்த நாள் இரவு டீக்கன் மார்களாகிய நீங்கள் இந்த ஒலிநாடாவை வெளியே எடுத்து, ''ஆராதனை தொடங்குவதற்கு முன்பு, சபையின் ஒழுங்கைக் குறித்த ஒலிநாடாவை நாங்கள் போடப்போகிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் அதை புரிந்து கொள்ள வேண்டும்,'' என்று கூறுங்கள். போதகர்களும் நீங்கள் அனைவரும் இவ்வாறு ஒத்துழைக்கலாம்.
36இப்பொழுது, சகோ. பிரன்ஹாமே, ஞாயிறு பள்ளியைக் குறித்தென்ன? சகோ. பிரன்ஹாமே, ஞாயிறு பள்ளியைக் குறித்தென்ன? (சரி), அது பிரசங்க ஆராதனைக்கு முன்பு நடத்தப்பட வேண்டுமா?
ஆம், அவ்விதம் தான் நாம் எப்பொழுதும் செய்து வருகிறோம். ஞாயிறு பள்ளியை பிரசங்க ஆராதனைக்கு முன்பு நடத்துங்கள். அப்பொழுத ஞாயிறு பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு, அவர்களுக்கு விருப்பமானால், வகுப்பு முடிவு பெற்று, தருணம் உண்டாயிருக்கும்... சிறுவர்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை. அவர்கள் பிரசங்க ஆராதனை முழுவதிலும் உட்கார்ந்து விட்டு அதன் பிறகு ஞாயிறு பள்ளிக்கு வருவார்களானால் களைத்து விடுவார்கள். ஞாயிறு பள்ளி முதலில் நடக்கட்டும். அதற்கென்று ஒரு நேரத்தை குறித்து விடுங்கள். ஞாயிறு பள்ளி நடப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அது குறிப்பிட்ட நேரத்தில் நடக்கிறதா என்று ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளர் கவனித்துக் கொள்ள வேண்டும். அது குறிப்பிட்ட நேரத்தில் முடிவு பெற வேண்டும். ஞாயிறு பள்ளிக்கென்று இவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டு, அதன் பின்பு முடிவு பெற வேண்டும்.
37வயது வந்தவர் வகுப்பிற்கான (adult class) ஆசிரியராக, போதகரைத் தவிர வேறு யாராகிலும் இருக்க வேண்டுமா?
அவ்வாறு ஒப்புக் கொள்ளப்பட்டால், போதகர் ஞாயிறு பள்ளியில் கற்றுத் தந்து அதன் பிறகு செய்தியை அளிக்க விரும்பினால், அது அருமையானது - அவர் இரண்டு சேவையும் செய்ய விரும்பினால், அவருக்கு விருப்பம் இல்லாவிட்டால், வயது வந்தவர் வகுப்பிற்கு வேறொரு ஞாயிறு பள்ளி ஆசிரியரை நியமியுங்கள் (பாருங்கள்?) போதகருக்கு யாராகிலும் மனதில் இருந்தால், அந்த நபர் ஆசிரியராக இருக்க விரும்பினால், அந்த பள்ளிக்கு முப்பது நிமிடங்கள் அளியுங்கள், அல்லது நீங்கள் அனுமதிக்க விரும்பும் அவ்வளவு நேரம் - முப்பது, அல்லது முப்பத்தைந்து, நாற்பது நிமிடங்கள், அது எவ்வளவானாலும்.
அங்கு ஒரு மணி வைக்கப்பட வேண்டும். அந்த மணி அடிக்கப்படும்போது, அதன் அர்த்தம் என்னவென்றால்.... அல்லது சபை மணி அடிக்கப்படும்போது, ஞாயிறு பள்ளியை முடித்து விட வேண்டும். அந்த மணி அடிக்கப்படும்போது, எல்லாமே அங்கு ஒழுங்குக்கு வந்து விட்டதென்று அர்த்தம்.
ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் பாட உங்களுக்கு போதிய நேரம் இருக்கும் - நீங்கள் பாட விரும்பும் பாடல்கள் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள். ஜனங்களை நீண்ட நேரம் வைத்துக் கொண்டால் அவர்கள் களைத்து விடுவார்கள். பாருங்கள். மணியை அடித்து, ஒரு பாடலைப் பாடி, அல்லது நீங்கள் செய்யப் போவதை செய்து, பிள்ளைகளை அவர்களுடைய வகுப்புகளுக்கு அனுப்பிவிடுங்கள். நேரம் முடிந்தவுடன் - பத்து, பத்தரை அல்லது பத்தே கால் மணி ஆனவுடன் - மணியை அடியுங்கள். அப்பொழுது ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் வகுப்புகளை முடித்துக் கொண்டு, இங்குள்ள கூட்டத்துக்கு வந்து விடுகின்றனர். அதன் பிறகு... அறிக்கையை கொடுங்கள், ஞாயிறு பள்ளி அறிக்கையை. அதன் பிறகு வகுப்பை முடித்துக் கொள்ளுங்கள். பிரசங்க ஆராதனைக்கு தங்க விரும்புவோர் அனைவரும் அடுத்தபடியாக தங்கட்டும். பாருங்கள். அப்பொழுது அது ஒழுங்கில் அமைந்திருக்கும்.
38கேள்வி? எத்தனை... (யாரோ ஒருவர் சகோ. பிரன்ஹாமிடம், ''அப்படியானால் வெவ்வேறு வகுப்புகள் இருக்க வேண்டும், அப்படித் தானே?'' என்று கேட்கிறார் - ஆசி).
ஓ, ஆமாம். வெவ்வேறு வகுப்புகள் இருந்தாக வேண்டும். பதினான்கு வயது பையன் புரிந்து கொள்ளும் அளவுக்கு மூன்று வயது சிறுவன் புரிந்து கொள்ள முடியாது. அடுத்த கேள்வி அது தான் என்று நினைக்கிறேன்.
39எத்தனை வகுப்புகள் இருக்க வேண்டும்?
உங்கள் வகுப்புகளை வெவ்வேறாகப் பிரிக்க வேண்டும்.... உதாரணமாக வரைபடம் மூலம் (flannel graph) விளக்க வேண்டுமென்று விரும்பும் சிறு பிள்ளைகள் வகுப்பு. அதை பதினான்கு வயது பையன் அல்லது பெண் விரும்ப மாட்டார்கள். பாருங்கள்? இந்த சிறு குழந்தைகளுக்கு கற்றுத்தர ஒரு வயதான தாயை அல்லது அவர்களை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அறிந்திருக்கும் யாராகிலும் ஒருவரை அமர்த்த வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு வார்த்தையை எடுத்துரைக்க வல்ல ஒருவரை நியமிக்க வேண்டும். பாருங்கள்? வெவ்வேறு வகுப்புகள் இருக்க வேண்டும். இப்பொழுது கூறப்போனால்.... குறைந்தது மூன்று வகுப்புகளாவது இருக்க வேண்டும்.
சிறு பிள்ளைகள் வகுப்பு ஒன்று இருக்க வேண்டும், ஏறக்குறைய ஐந்துக்கும் அதற்கு மேற்பட்ட வயதுக்கும். அதற்கு கீழுள்ள குழைந்தைகள் தாயுடன் வைக்கப்பட்டு, அவசியமானால், பிரசங்கத்தின் போது, பாலூட்டும் அறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் - அவர்கள் அழ நேரிட்டால். அதற்காகத்தான் பாலூட்டும் அறை உள்ளது.
வகுப்புகள் இவ்வாறு ஒழுங்கு செய்யப்பட வேண்டுமென்று எண்ணுகிறேன்: ஐந்து அல்லது ஆறு வயது முதல் எட்டு, ஒன்பது அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு வகுப்பு. பிறகு பத்து வயது முதல் பதினைந்து வயதுடையவர்களுக்கு - வாலிபப் பருவத்தினருக்கான வகுப்பு. பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வயது வந்தவர்களின் வகுப்பு. ஏனெனில் அவர்கள். இப்பொழுதெல்லாம் அவ்வயதில் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. மேலும் அந்த வயதில் அவர்கள் வாக்குகள் அளிக்க (Vote, வோட்டு) விரும்புகின்றனர், ஆகவே அவர்கள் வார்த்தையை கேட்க முடிந்தவர்களாக உள்ளனர், அவர்கள் சபை கட்டிடத்துக்கு வந்து அதை பெற வேண்டும்.
40யார் ஆசிரியர்களாக இருக்க வேண்டும்?
பார்த்தீர்களா, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் உங்களைப் பொறுத்தது. நீங்கள் அதை செய்ய வேண்டும். அவர்களை அங்கு ஒன்று கூட்டி, யாரையாகிலும் தேர்ந்தெடுக்க வேண்டும். சபையை சந்தித்து, ''யார். இங்குள்ள யார் கர்த்தரால் ஏவப்படுகிறீர்கள்?'' என்று கேளுங்கள். அதன் பிறகு தகுதி பெற்ற ஒரு ஆசிரியரை தெரிந்து கொள்ளுங்கள். அது அவ்வாறு செய்யப்படட்டும். சகோதரரே, அது கிரமமாக செய்யப்பட வேண்டும். ஆசிரியருக்கு அதற்கான தகுதி இல்லாமல் போனால், அவரை மாற்றி விடுங்கள்.
ஆர்மன் நெவில் இங்கு போதகராக இனிமேல் இருக்கத் தகுதியில்லை என்று நான் நினைக்கும் நேரம் ஒன்று, தேவனுக்கு கீழ், வருமானால், அதை நான் சபைக்கு அறிவிப்பேன். டீக்கன் மார்களாகிய நீங்கள் டீக்கன்மார்களாக இருக்கத் தகுதியில்லை என்று என்னை நினைக்கத் தூண்டும் ஒரு காரியத்தை இங்கு நான் காண நேர்ந்தால், “இந்த டீக்கன் செய்யத்தகாத ஒன்றை இங்கு செய்து வருவதாகக் காண்கிறேன். அவருடைய கடமையில் அவர் சரியாக இல்லை'' என்று சபைக்கு அறிவிப்பேன். ஒரு தர்மகர்த்தாவையும் அல்லது வேறு யாரையும் நான் அவ்வாறு செய்வேன். அவர்களை நான் தேர்ந்தெடுக்கவோ அல்லது நீக்கம் செய்யவோ கூடாது, சபை அதை செய்ய வேண்டும். ஆனால் அதை நான் நிச்சயம் சபைக்கு அறிவிப்பேன். பாருங்கள், ஏனெனில் அதைத்தான் நாம் செய்ய வேண்டும். அதற்காகத் தான் நான் கண்காணிப்பாளனாக இருக்கிறேன், என்ன நடக்கிறதென்பதை நான் கண்டு அறிந்து கொள்ள வேண்டும். நாம் பரலோகத்துக்கு செல்லப் போகிறோம், இங்கு ஒரு கூட்டத்துக்கு சென்று, ஒருவரையொருவர் கேலி செய்து, கேளிக்கையில் கலந்து கொண்டு, 'பேஸ் பந்து' விளையாட்டு ஆடுவதற்கு அல்ல. பூமியிலேயே மிகவும் கிருபையுள்ள பொக்கிஷமாகிய தேவனுடைய வார்த்தையை நாம் பெற்றிருக்கிறோம். அதை தேவ பக்தியுள்ள ஒழுங்குடன் கடைபிடிக்க வேண்டும்.
41யார் ஆசிரியார்களாக இருக்க வேண்டும்?
அவர்களைத் தெரிந்து கொள்வது உங்களைப் பொறுத்தது. ஆனால் நான் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு திறம்பட கற்றுத்தரக் கூடிய ஒரு வயோதிப ஸ்திரீயை தெரிந்து கொள்வேன். இளைஞர்களுக்கு ஒழுக்கமுள்ள ஒரு ஆசிரியரை தெரிந்து கொள்வேன் - இங்கு வந்து வீரர் ரோஸ்ட் புசிக்கும் ஒருவரை அல்ல. அவர்கள் மனதை அதிலே செலுத்துவதென்பது... வார்த்தையில் மனதை செலுத்தி, வார்த்தையை உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஒருவரை இந்த சபை எதற்கு உறுதியாய் நிற்கிறதென்றால்... 'வீனர் ரோஸ்ட்' நல்லது தான், நீங்கள் வனபோஜனத்துகாக (Picnics) ஒன்று கூடி ஐக்கியம் கொள்ள விரும்பும்போது, அது நல்லது, சிறு பிள்ளைகளை மகிழ்விக்க நீங்கள் அதை செய்ய வேண்டும். ஆனால் இந்த இடத்தில், தேவனுடைய வார்த்தை மட்டுமே. நீங்கள் வேறெங்காவது ஒன்று கூடும்போது 'வீனர் ரோஸ்ட்' புசிக்கலாம், ஆனால் தேவனுடைய வீட்டில் அல்ல. இங்குள்ள நமக்கு, நம்மைச் சுற்றும் நடைபெறும் விருந்துகளிலும் மற்ற கேளிக்கைகளிலும் நம்பிக்கையில்லை, அதை மூடத்தனமாகக் கருதுகிறோம். அதைக் குறித்து நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள்.
42ஞாயிறு பள்ளியை ஒழுங்காக நடத்த அதற்கு யார் அதிகாரியாக இருக்க வேண்டும்?
ஞாயிறு பள்ளி மேற் பார்வையாளர் (Sunday School Superintendent). அதுதான் அவருடைய வேலை. அவருக்கு டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், போதகர்கள், மற்றவர்களின் ஊழியத்தில் யாதொரு சம்பந்தமும் இருக்கக் கூடாது. அது அவருடைய தனிப்பட்ட உத்தியோகம். உங்கள் ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளர், எல்லா வகுப்புகளும் ஒழுங்காக நடக்கிறதா என்றும், எல்லா ஆசிரியர்களும் வந்திருக்கிறார்களா என்றும் கவனித்து, ஒரு நாள் ஒரு ஆசிரியர் வராமல்போனால், அவருக்கு பதிலாக வேறொரு ஆசிரியரை அந்த வகுப்புக்கு அனுப்ப வேண்டும்.
ஞாயிறு பள்ளி முடிவடைவதற்கு முன்பு.... பாடங்கள் நடத்தப்படும்போது, ஞாயிறு பள்ளி மேற் பார்வையாளர் அங்கு சென்று எடுக்கப்பட்ட காணிக்கைகளை (ஞாயிறு பள்ளி காணிக்கைகளை கொண்டு வந்து, எத்தனை பேர் பள்ளிக்கு வந்திருந்தனர், வகுப்பில் எத்தனை வேதாகமங்கள் இருந்தன போன்ற விவரங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை தயார் செய்து, பிரசங்க ஆராதனைக்கு முன்பாக நின்று, ஞாயிறு பள்ளி அறிக்கையை படித்து, எத்தனை ஆசிரியர்கள் வந்திருந்தனர், எத்தனை பேர் வகுப்புக்கு வந்திருந்தனர், அவர்களுடைய மொத்த எண்ணிக்கை எவ்வளவு, காணிக்கை தொகை எவ்வளவு போன்ற விபரங்களை அறிவிக்க வேண்டும். டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், போதகர்கள் அதை செய்யக் கூடாது. அவர்களுக்கு இதனுடன் யாதொரு சம்பந்தமுமில்லை. அது ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளரின் வேலை.
ஞாயிறு பள்ளிக்கு சில தேவைகள் உள்ளன என்று மேற்பார்வையாளர் கண்டால், அதை அவர் தர்மகர்த்தாக்களின் குழுவுக்கு தெரியப்படுத்த வேண்டும். முதலில் தர்மகர்த்தாக்கள் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்து இதைக்குறித்து பேச வேண்டும். அதன் பிறகு இதற்கு போதுமான பணம் உள்ளதா என்று பொருளாளர் மூலம் அவர்கள் அறிந்து கொண்டால், இவைகளை வாங்கிக் கொள்ளலாம். ஞாயிறு பள்ளிக்கு சில புத்தகங்கள் அல்லது வேறொதாவது வேண்டு மென்று மேற்பார்வையாளர் நினைத்தால், அல்லது வேதாகமங்கள் தேவைப்பட்டால்: வேதாகமத்திலிருந்து நிறைய வசனங்களை மனப்பாடம் செய்து உரைத்த ஒரு சிறுவனுக்கு வேதாகமத்தை பரிசாக வழங்க வேண்டுமென்று எண்ணி அதை சபையின் மூலம் வாங்க நினைத்தால், அதை அவர்கள் டீக்கன்மார்களிடம் தெரியப்படுத்த வேண்டும்..... அதன் பிறகு பணம் உள்ளதா என்று அவர்கள் அறிந்து கொள்ளட்டும். பாருங்கள்?
அந்த ஐந்து கேள்விகளுக்கும் பதில் கூறப்பட்டுவிட்டதென்று நினைக்கிறேன்.
43இப்பொழுது, அடுத்த கேள்வி:
சகோ. பிரன்ஹாமே, சபை ஒழுங்கு விஷயத்தில், புது பிரதிஷ்டை பண்ணப்பட்டபோது எங்களுக்கு அளிக்கப்பட்ட ஒழுங்கைக் கடைபிடிக்க நாங்கள் முயன்று வருகிறோம். அவ்விதம் செய்ததனால் சிலர் கோபங்கொண்டு சபையை விட்டு விலகிச் சென்றனர். வேறு சிலர், முக்கியமாக பிள்ளைகள், நாங்கள் கூறுவதற்கு செவி கொடுக்க மறுக்கின்றனர். பிள்ளைகளைக் குறித்து அவர்களுடைய பெற்றோரிடம் நாங்கள் பேசினோம், அவர்களோ அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை. நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டோமா? அல்லது அதை தவறான விதத்தில் கடை பிடிக்கிறோமா? நன்றி.
44இதற்கு ஒன்றன் பின் ஒன்றாக பதிலளிப்போம்.
சபை ஒழுங்கு விஷயத்தில், புது சபை பிரதிஷ்டை பண்ணப்பட்டபோது எங்களுக்கு அளிக்கப்பட்ட ஒழுங்கைக் கடைபிடிக்க நாங்கள் முயன்று வருகிறோம்.
இப்பொழுது, அது சரி. நீங்கள் சரியாக செய்கிறீர்கள். இது டீக்கன்மார்களின் கேள்வி என்று நினைக்கிறேன். ஏனெனில் இது டீக்கன்மார்களின் வேலை. சரி.
45அவ்விதம் செய்ததனால் நாங்கள் அடிக்கடி... ஜனங்கள் எங்கள் மேல் அடிக்கடி கோபங்கொண்டனர்.
அவர்கள் என் மீதும் கோபங்கொள்கின்றனர். அவர்கள் எந்த மனிதனின் மீதும் கோபங்கொள்வார்கள். பாருங்கள்? ஒருவர் அவ்விதம் செய்வாரானால், அவரிடம் ஏதோ தவறுள்ளது, அவர்கள் தேவனுடன் சரியாக இல்லை. ஏனெனில் கிறிஸ்துவின் ஆவி கிறிஸ்துவின் போதனைக்கு, கிறிஸ்துவின் வீட்டுக்கு, கிறிஸ்துவின் ஒழுங்குக்கு கீழ்ப்பட்டுள்ளது. பாருங்கள்? எந்த மனிதனும் ஆலோசனை கூறும் தேவ பக்தியுள்ள டீக்கன் ஒருவரிடம் கோபங்கொள்ளும் எந்த மனிதனும், எந்த ஸ்தரீயும், பிள்ளைகளும்.... டீக்கனிடம் கோபங்கொள்ளும் பெற்றோர் எவரும்.... உண்மையில், எல்லோரும் இந்த சபைக்கு வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அது எங்காவது தொல்லையை விளைவிக்குமானால், 'மரக்குவியலில் நுழைந்த முயல்' என்று நாம் கூறுவது போல், அந்த நபர் செய்வது சரியல்ல.
அவர்கள் சபையை விட்டு விலகினால் செய்ய வேண்டியது ஒன்று மாத்திரமே. நீங்கள் சென்று அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். டீக்கன் மார்களில் சிலர் அவர்களுடைய சபைக்கு அவர்களுடைய வீட்டிற்கு எப்பொழுதாவது சென்று, அவர் சபையை விட்டுச் சென்ற காரணம் என்னவென்றும், என்ன தவறு நடந்துவிட்டதென்றும் அவர்களிடம் கேட்கலாம். அப்பொழுது அவர்களை... ஒப்புரவாக்க முடியுமா என்று பாருங்கள். உங்களால் முடியாமல் போனால், இரண்டு மூன்று சாட்சிகளை உங்களுடன் கொண்டு சென்று அவர்களுக்கு விளக்கித் தாருங்கள். அவர்கள் விளங்கிக் கொள்ளாமல் போனால், அவர்கள் இந்த சபையின் அங்கத்தினராயிருந்தால், அதை சபையோர் முன்னால் அறிவித்து விடுங்கள். அப்பொழுது அவர்கள்....
46அவர்கள் சபையின் அங்கத்தினராயிராமல் போனால் - இந்த நமது சபையின் அங்கத்தினராயிராமல் போனால் அவர்கள் ஒழுங்காக இருக்கும்படி செய்ய வேண்டும். பாருங்கள், இங்குள்ள ஒழுங்குக்கு அவர்கள் செவி கொடுத்து கீழ்ப்படிய வேண்டும். ஏனெனில் இது இந்த சபையின் ஒழுங்கு. சில காரியங்களை செய்ய நாம் விரும்புவதில்லை, நான் செய்ய விரும்பாத சில காரியங்கள் இருக்கக் கூடும். ஆனால் இந்த காரியங்கள் செய்யப்பட வேண்டும். இதை நான் கூறுகிறேன் என்று இந்த ஒலிநாடாவின் மூலம் கூறி என்னை அம்பலப்படுத்துகிறேன். அப்பொழுது நான் பேசுவதைக் கேட்பவர்கள், இதை கூறினது நீங்கள் அல்ல, நான் என்பதை அறிந்து கொள்வார்கள். நீங்கள் இந்த கேள்வியை என்னிடம் கேட்டீர்கள். எனக்குத் தெரிந்தமட்டில் தேவனுடைய வார்த்தையிலிருந்து நான் சிறப்பாக பதிலுரைக்கிறேன்.
“சகோ. பிரன்ஹாமே, இந்த ஜனங்கள் கோபங்கொண்டு நம்மை விட்டுச் சென்றால், வேதம் இவர்களைக் குறித்து என்ன உரைக்கிறது?''
''அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை. ஆகவே அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள். அதுதான் அதன் முடிவு. ''சபையை விட்டுப் போனார்கள், அதைத்தான் அவர்கள் செய்தார்கள்.''
47வேறு சிலர், முக்கியமாக பிள்ளைகள், நாங்கள் கூறுவதற்கு செவி கொடுக்க மறுக்கின்றனர்.
பிள்ளைகள் ஒழுக்கம் அறிந்தவர்களாயிருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் அதைப் படிக்க வேண்டும். என் பிள்ளைகளும் கூட இங்கு வரும்போது ஒழுங்கற்றவர்களாகி விடுகின்றனர். நீங்கள் பட்சபாதம் காண்பிக்க வேண்டாம். அது சாராள், ரெபேக்கா, ஜோசப், பில்லி, யாராயிருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களால் ஒழுங்காக நடந்து கொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் ஒழுக்கம் கற்றுக் கொள்ளும் வரைக்கும் சபைக்கு வரக்கூடாது. இது ஒரு விளையாட்டு அரங்கமல்ல. இது தேவனுடைய வீடு. இது விளையாடுவதற்கோ, ஹாஸ்ய துணுக்குகள் எழுதி, சிரித்து விளையாடுவதற்கோ சறுக்கிக் கொண்டு ஓடுவதற்கோ இடமல்ல. இது தேவனுடைய வீடு, இங்கு தேவ பக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் தொழுது கொள்ள இங்கு வருகின்றீர்கள், ஒருவரையொருவர் சந்திக்க அல்ல. இது திறந்தவெளி இன்பப்பயண (picnic) இடமோ, சந்திக்கும் இடமோ அல்ல. இது பரிசுத்த ஆவி உங்களை சந்திக்கும் இடம்: அவர் என்ன கூறுகிறாரோ அதற்கு செவிகொடுங்கள். ஒருவருக்கொருவர் கூறுவதை அல்ல. இங்கு நாம் ஒருவரோடாருவர் ஜக்கியம் கொள்ளவரவில்லை, கிறிஸ்துவுடன் ஐக்கியங்கொள்ளவே வந்திருக்கிறோம். இது தேவனை தொழுது கொள்ளும் வீடு. பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாய் செய்ய வேண்டும்.... அவருடைய பெற்றோர்கள் செய்ய வேண்டும். இதை அறிந்து கொள்ளுங்கள் இந்த டீக்கன்மார்கள்... பிள்ளைகளின் பெற்றோர் டீக்கன்மார்கள் கூறுவதைக் கேட்காமல் போனால், பெற்றோர்களே திருத்தப்பட வேண்டும்.
48பிள்ளைகளைக் குறித்து அவர்களுடைய பெற்றோரிடம் நாங்கள் பேசினோம், அவர்கள் அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை.
அவர்கள் இந்த சபையின் அங்கத்தினராய் இருப்பார்களானால், நீங்கள் இரண்டு அல்லது மூன்று பேர்களை உங்களுடன் கூட்டிக்கொண்டு, அந்த பெற்றோரை அலுவலகம் ஒன்றிற்கு தனியே அழைத்துக் கொண்டு வந்து அவரிடம் பேச வேண்டும். அது யாராயிருந்தாலும் எனக்கு கவலையில்லை, அது நானோ, சகோ. நெவிலோ, அது பில்லிபாலும் அவனுடைய சிறுபையனும், அது சகோ. காலின்ஸும் அவருடைய பிள்ளைகளில் ஒருவனும், மற்றுமுள்ள உங்களில் யாராயிருந்தாலும் சரி. நாம்... நாம் ஒருவரிலொருவர் அன்பு கூருகிறோம், ஆனால் நாம் தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும் கடமைப்பட்டிருக்கிறோம். அது 'டாக்'காயிருந்தாலும், அது யாராயிருந்தாலும், நாம் ஒருவரையொருவர் உள்ளே அழைத்து, ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் நேர்மையாயிராமல் போனால், தேவன் எவ்விதம் நம்முடன் ஈடுபட முடியும்? நாம் எவ்விதம் அவருடன் நேர்மையாக இருக்க முடியும்? பாருங்கள்?
இந்த ஒழுங்கை நாம் தேவனுடைய வீட்டில் கடைபிடிக்க வேண்டும். அதை எவ்விதம் காக்க வேண்டுமென்று டீக்கன்மார்கள் அறிந்திருக்க வேண்டும். பாருங்கள்? ஆகையால் தான் இவைகளை நீங்கள் சீராக வைத்திருக்க வேண்டுமென்று இப்பொழுது கூறுகிறேன். நீங்கள் பெற்றோரிடம் கூறி அவர்கள் அதற்கு செவிகொடுக்காமல் போனால், நீங்கள் வேறொரு டீக்கனை, அல்லது தர்மகர்த்தாக்களில் ஒருவரை, அல்லது சபையிலுள்ள ஒரு நல்ல மனிதரை அழைத்துச் சென்று சந்தியுங்கள். உங்கள் தர்மகர்த்தா... உங்கள் டீக்கன்மார் குழுவிலுள்ள அனைவரையும் அழைத்து அவர்களிடம், ''சகோ. ஜோன்ஸ், சகோ. ஹெண்டர்ஸன், சகோ. ஜாக்ஸன்'' அது யாராயிருந்தாலும்,'' என்பவர்களுடைய பிள்ளைகள் தவறாக நடந்து கொள்கின்றனர். அவர்களிடம் இரண்டு மூன்று முறை அவர்களுடைய பிள்ளைகளைக் குறித்து சொல்லிப் பார்த்து விட்டோம். அவர்கள் கேட்க மறுக்கின்றனர் என்று சொல்லுங்கள்.
அதன் பிறகு சகோ. ஜோன்ஸ் அல்லது சகோதரன்: அது யாராயிருந்தாலும், அவரை தனியே அழைத்து, ''சகோ. ஜோன்ஸ், உங்களிடம் பேசுவதற்காக இங்கு அழைத்து வந்தோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம். நாங்கள்... நீங்கள் எங்களுடைய ஒரு பாகமாக.... எங்களில் ஒருவராக இருக்கிறீர்கள். இந்த ஒலிநாடாவை நான் போடுகிறேன். இதைக் குறித்து சகோ. பிரன்ஹாம் கூறியுள்ளதை உன்னிப்பாக கேளுங்கள். பாருங்கள். உங்கள் பிள்ளைகள் சரிவர நடந்து கொள்ள நீங்கள் செய்யும்படி உங்களை நாங்கள் கேட்டுக் கொண்டோம். பாருங்கள்? அவர்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் சரியாக நடந்து கொள்ளச் செய்ய உங்களால் முடியவில்லை என்றால், தேவனுடைய வீட்டில் எவ்விதம் சரியாக நடந்து கொள்வது என்று அவர்கள் கற்றுக்கொள்ளும் வரைக்கும், நீங்கள் சபைக்கு வரும்போது அவர்களை யாரிடமாவது விட்டு விட்டு வாருங்கள்'' என்று சொல்லுங்கள். பாருங்கள்? இது ஒரு ஒழுங்கு. இதை கடைபிடித்தாக வேண்டும். பாருங்கள்?
49மற்ற கேள்வி இவ்விதம் உள்ளது:
நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டோமா?
இல்லை, ஐயா. நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை. அது சரியானது. இதை நான் மறுபடியும் கூறுகிறேன், இந்த கட்டளைகள். இராணுவத்தில் உங்களை, “இதை நீங்கள் செய்வீர்களா?'' என்று கேட்பதில்லை. நீங்கள் இராணுவத்தில் இருந்தால், அதை செய்ய பலவந்தம் பண்ணப்படுகிறீர்கள். பாருங்கள்? அப்படித்தான் இந்த... நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க பலவந்தம் பண்ணப்படுகிறேன். மற்ற மனிதர் அல்லது சகோதரர் இதைக்குறித்து என்ன கூறினாலும், இதற்காக நிற்க நான் பலவந்தம் பண்ணப்படுகிறேன். நான் மனதுகளை நோகப்பண்ணவும், மனிதரை துண்டுகளாக வெட்டவும் வேண்டியதாயுள்ளது.
நீங்கள் ஆஸ்வால்டைப் போல் ஆக விரும்பமாட்டீர்கள். பாருங்கள்? உங்களால் ஒரு மனிதனுடன் பகிரகங்மாக இணங்க முடியாமல், அவனுடன் கைகுலுக்கி, அப்பொழுதும் அவன் பேரில் வெறுப்பு கொண்டிருப்பீர்களானால், உங்களில் ஏதோ தவறுண்டு. ஒரு மனிதனுடன் நான் இணங்காமல், அவன் மீது கசப்புத்தன்மை கொண்டு, கிறிஸ்து அவனைக் கருதுவது போல் நான் கருதாமல் இருந்தால், என் ஆவியில் ஏதோ தவறுண்டு. எனக்கு கிறிஸ்துவின் ஆவி கிடையாது. பாருங்கள்?
அவர், ''நல்லது, சகோ. பிரன்ஹாம், உங்கள் போதனை இப்படி, அப்படி உள்ளது'' என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
'சரி, சகோதரனே, நீங்களும் நானும் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு விவாதிப்போம். நாம் தனிமையில் இதை விவாதிப்போம். அவர் என்னை துண்டம் துண்டமாக வெட்டுகிறார். நானும் திரும்ப அவரிடம் ஏதாவது கடுமையாக உரைக்க வேண்டியதாயுள்ளது. ஆனால் என் இருதயத்தில் அவன் என் சகோதரன், அவருக்கு உதவி செய்ய முயல்கிறேன்'' என்னும் அவரைக் குறித்து முன்பு கொண்டிருந்த அதே நல்லுணர்வைக் கொண்டிராமல் இருந்தால், அவருக்கு நான் உதவி செய்யவே முடியாது. அவருக்கு உதவி செய்ய எனக்கு ஒரு வழியும் இருக்காது. அவரை நான் நேசிக்காமல் இருந்தால், அங்கு போவதனால் என்ன பயன்? அவரிடம், ''சகோதரனே, முதற்கண் உம்மை நான் நேசிக்கவேயில்லை. அங்கு நாம் செல்வதற்கு முன்பாக, இந்த வெறுப்புணர்வை என் இருதயத்தை விட்டு இந்த இடத்திலேயே நான் எடுத்துப் போடட்டும். உம்மை நான் நேசிக்காமல் போனால், என்னால் உமக்கு உதவி செய்யவே முடியாது'' என்று கூறுங்கள்.
நீங்கள் செய்வது சரி. அது தான் செய்ய வேண்டிய முறை. பாருங்கள், அதை தொடர்ந்து செய்யுங்கள். அப்படித்தான் அது இருக்க வேண்டும். நீங்கள் அதை தவறாகப் புரிந்து கொள்ளவில்லை.
50அதை தவறான விதத்தில் கடைபிடிக்கிறோமா?
இல்லை, நீங்கள் சரியான விதத்தில் தான் அதை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒழுங்கு கடைபிடிக்கப்படட்டும். ஏனெனில் அது தொடர்ச்சியாக.... இப்பொழுது, சிறு பிள்ளைகளும் தாய்மார்களும், சிறு குழந்தைகள் அழுவார்கள், அவர்கள் அதிகமாக அழுது உங்கள் போதகரை தொந்தரவு செய்தால், நீங்கள் தான் அவருடைய மெய்க்காவலர் (body guards) என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் சுவிசேஷத்தில் அவருடைய மெய்க்காவலர். பாருங்கள்? அது கர்த்தருடைய செய்திக்கு தடங்கலை விளைத்தால், டீக்கன்மார்களாயிருக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அந்நிய பாஷை பேசுகிறவன் தன் கடமையை நிறைவேற்ற வேண்டியவனாயுள்ளது போல அவ்வாறே பிரசங்கம் செய்கிறவன் வார்த்தைக்கு கடமைப்பட்டிருக்கிறான், இவைகளுக்கு கடமைப்பட்டிருக்கிறான். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு உத்தியோகத்தை செய்ய கடமைப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு உத்தியோகத்தை செய்ய கடமைப்பட்டிருக்கிறீர்கள். அதை செய்யத்தான் நாம் இங்கிருக்கிறோம்.
இதில் நீண்ட நேரம் நிலைத்திருக்க விரும்பவில்லை. இன்னும் சில நிமிடங்களில் நான் ஒருவரைச் சந்திக்க வேண்டும். எனவே என்னால் முடிந்த வரையில் வேகமாக முடிக்க முயல்கிறேன்.
51சகோ. பிரன்ஹாமே... இந்த அட்டையில் மூன்று, இரண்டு கேள்விகள் உள்ளன. சகோ. பிரன்ஹாமே, ஜனங்களுக்காக சபையில் காணிக்கை எடுக்கும் விஷயத்தில் கைக் கொள்ளப்பட வேண்டிய கொள்கை என்ன? இதை எவ்விதம் செய்ய வேண்டும்?
உங்கள் போதகருக்காக தவிர வேறு யாருக்காகவும் காணிக்கை எடுக்கக் கூடாது என்பது என் கருத்து. யாராகிலும் நன்கொடைக்காக வந்தால், அல்லது அப்படி ஏதாவதொன்று... அல்லது யாருக்காகிலும் அதிக தேவை இருக்கும் பட்சத்தில், உதாரணமாக, இங்குள்ள இந்த சபையின் ஒரு அங்கத்தினருக்கு; நமது சகோதரரில் ஒருவருக்கு தொல்லை ஏற்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அது மேடையிலிருந்து அறிவிக்கப்பட வேண்டும். போதகர் அதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டியது அவருடைய கடமை. ஏதாகிலும் தேவைப்படும் சகோதரர், சபை அதை தீர்த்து வைக்க வேண்டுமென்று விரும்பினால், அதை சபைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
யாருக்காகிலும் தேவையிருந்தால், தேவையுள்ள அந்த சகோதரனுக்கு நீங்கள் காணிக்கை எடுக்காதிருந்தால், அப்பொழுது குழுக்கள் ஒன்று கூடி ஆலோசித்து, சபை நிதியிலிருந்து அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க தீர்மானம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் சபை நிதியில் குறைவான பணம் இருந்து அவர்களால் உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அந்த விஷயத்தை விவாதித்து... குழு அதற்கான முடிவு எடுத்து போதகருக்கு அறிவிக்க வேண்டும். போதகர் தேவையைச் சந்திக்க சபையோரிடம் முறையிட வேண்டும். உதாரணமாக, ''நமது சகோ. ஜோன்ஸுக்கு பயங்கரமான விபத்து ஏற்பட்டு, அவருடைய வீடு தீக்கிரையானது. இன்றிரவு, கிறிஸ்தவர் என்னும் முறையில், சகோ. ஜோன்ஸ் தங்குவதற்கு வீட்டை மீண்டும் பெற நாம் ஒவ்வொருவரும் அவருக்கு எவ்வளவு தொகை அளிக்கப் போகிறோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்'' என்று கூற வேண்டும். பாருங்கள், அது வேறென்ன விஷயமாயிருந்தாலும், பாருங்கள், அவ்வாறு நாம் செய்வோம். அது மேடையிலிருந்து அறிவிக்கப்படட்டும். அப்படித் தான் அதை செய்ய வேண்டும். அதன் பிறகு உறுதிப் பணம் சபையின் பொருளாளரிடம் கொடுக்கப்பட்டு, அவர் மொத்த தொகையை அந்த நபரிடம் கொடுப்பார். அந்த நபருக்கு ஒரு ரசீதைத் தாருங்கள். இதற்கு வருமான வரிவிலக்கு உண்டா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒன்றுக்கு வரிவிலக்கு உண்டென்று நினைக்கிறேன்.
52ஆனால் ஒரு அந்நியர் உள்ளே வந்து.... ஒரு மனிதன் உள்ளே வந்து, ''என்ன நடந்தது தெரியுமா? நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது, டயர் வெடித்து விட்டது. எனக்கு ஒரு புது டயர் தேவை. அதற்காக இன்றிரவு காணிக்கை எடுங்கள்'' என்று சொன்னால், அதை செய்யக்கூடாது. உதவி செய்ய அது தகுதி வாய்ந்தது என்று காணப்பட்டால், குழு ஒன்று கூடி ஆலோசித்து, அந்த மனிதன் டயர் வாங்க ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க பொருளாளரிடம் சிபாரிசு செய்ய வேண்டும். ஆனால் சபை நிதியில் பணம் குறைவாக இருந்து, அவருக்கு உதவி செய்ய வேண்டுமென்று குழு தீர்மானம் செய்தால் போதகர் இதனுடன் சம்பந்தம் கொள்ளக்கூடாது. டீக்கன்மார்கள் தான் இதை செய்ய வேண்டும், பாருங்கள், அல்லது குழுக்கள். இப்பொழுது இது... உதவி செய்ய வேண்டுமென்று தீர்மானம் எடுக்கப்பட்டால், அதை போதகரிடம் அறிவியுங்கள். அப்பொழுது போதகர் காணிக்கை எடுக்கலாம். ஆனால் கவனியுங்கள், அவர் ஒரு அந்நியராயிருந்து, அது ஒரு அவசர காரியமாயிருந்து, அவருக்கு சிறிது பணம் தேவைப்பட்டு, அது நியாயமான காரியம் என்று உங்களுக்கு தோன்றினால் (இது என் கருத்து), அது ஒரு நியாயமான காரியமாயிருந்தால், அது நியாயமான காரியம் என்று நீங்கள் அறிந்திருந்தால் மட்டுமே...
53நீங்கள் என் வீட்டிற்கு சென்று அங்குள்ள என் கணக்குப் புத்தகங்களை புரட்டிப் பார்ப்பீர்களானால்; ஜனங்கள் என்னிடம் வந்து, ''நான் இன்னின்ன சபையைச் சேர்ந்த சங்கை இன்னார் இன்னார். வழியில் எனக்குத் தொல்லை ஏற்பட்டது. எனக்கு புது டயர்கள் வேண்டும்,'' என்று கேட்கின்றனர். நான் அப்பொழுது தான் கூட்டங்களை முடித்துவிட்டு காணிக்கையுடன் திரும்பி வந்துள்ளேன் என்று அவர்கள் அறிந்து கொண்டுள்ளனர். டயர் வாங்குவதற்கு அவர் கேட்கும் பணத்தை நான் கொடுத்து விடுவேன். ஆனால் பார்க்கப்போனால், அப்படிப்பட்ட ஒரு போதகர் அந்த இடத்தில் இருந்திருக்கவேமாட்டார். இவ்வாறு இத்தனை ஆண்டுகளாக பத்தாயிரம் இருபதாயிரம் டாலர்களை நான், அவர்கள் யாரென்று எங்கிருந்து வருகிறார்கள் என்று அறியாமலேயே கொடுத்திருக்கிறேன். ஆனால் பிறகு பார்க்கும்போது மற்ற போதகர்களும், அவர் என்னையும் கூட வெவ்வேறு காரணத்துக்கு பணம் கேட்டு ஏமாற்றிவிட்டார்'' என்கின்றனர். சபை அந்நியர்களுக்கு பொறுப்பாளிகள் அல்ல. தங்கள் சொந்த அங்கத்தினருக்கு மாத்திரமே. அது உண்மை. அவர்கள் தங்கள் சொந்தமானவர்களுக்கு மாத்திரமே பொறுப்பாளிகள்.
54ஆனால் தகுதியுள்ள காரணம் இருக்குமானால், உங்கள் தர்மகர்த்தாக்கள், ''நல்லது, ஒரு நிமிடம் பொறுங்கள். அங்குள்ள கார் இந்த மனிதனுடையதே. அது நடந்ததென்பது உண்மையே. அவர் நமது சபையைச் சேர்ந்தவர் அல்ல. பாருங்கள், ஆனாலும் அது நடந்துள்ளது'' என்று வெளி மனிதரைப் பற்றி விசேஷமாக சிபாரிசு செய்ய விரும்பினால்....
நமக்கு சொந்தமானவர்கள் அல்ல, பாருங்கள், நமக்கு சொந்தமான ஜனங்கள் அல்ல. நமக்கு சொந்தமான ஜனங்களின் தேவைகள், அவர்களுடைய சகோதரரின் மத்தியில் அறிவிக்கப்படலாம்.
ஆனால் வெளியிலிருந்து ஒருவர் வந்து அவர் பசியாயிருப்பதாகக் கூறினால்... உங்களில் யாராகிலும் பாக்கெட்டில் கைபோட்டு அவருக்கு பண உதவி செய்ய விரும்பினால் அது உங்களைப் பொறுத்தது. ஆனால் நான் சபையிலுள்ளவர்களைக் குறித்துக் கூறுகிறேன். சபையிலுள்ளவர்கள் நன்கொடை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டால்....
55இங்கு பிரசங்கிக்க ஒரு சுவிசேஷகர் வந்தால், அப்பொழுது நீங்கள் எடுக்கலாம். நீங்கள்.... அவர் வருவதற்கு முன்பே அவருக்கு நீங்கள் காணிக்கை அளிப்பீர்கள். அல்லது சம்பளம் அளிப்பீர்கள், அல்லது அவர் எதை விரும்புகிறோரோ அதை செய்வீர்கள் என்று முன்கூட்டியே தீர்மானம் செய்து விடுகிறீர்கள்.
ஆனால் வெளியிலிருந்து வந்த ஒரு நபர் இங்கிருந்து, அது ஒரு நியாயமான காரணமாயிருந்தால் போதகர் குழுவும் உதவி செய்ய இணங்கி அதை போதகருக்கு தெரிவித்தால், போதகர், ''ஒரு குறிப்பிட்ட நபர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவரை நமக்குத் தெரியாது, அவர் இங்கு வந்து நம்மிடம் உதவி கேட்டிருக்கிறார். அவருடைய பிள்ளைகள் பசியால் வாடுவதாக அவர் கூறுகிறார். நமக்கு நேரமில்லை.... அவர் கூறுவதை விசாரித்து நோக்க நமக்கு நேரம் இருக்கவில்லை'' என்று கூற வேண்டும். பாருங்கள்?
56அப்படி ஏதாவது இருக்குமானால், அப்பொழுது நமது... நம்மைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு ஏதாவதொன்று எழுந்தால், நமது டீக்கன்மார்கள் சென்று விசாரிக்கலாம். பாருங்கள்? அது உதவிபெற தகுதி பெற்றிருந்தால், உதவி செய்யுங்கள். தகுதி இல்லாமல்போனால், உதவி செய்யாதீர்கள். நீங்கள் உதவி செய்ய வேண்டியதில்லை. ஆனால் அது வெளியிலிருந்து இங்கு வந்துள்ள ஒரு மனிதராயிருந்தால், போதகர் சபையோரிடம், “தர்மகர்த்தாக்கள் குழு இந்த நபரைத் தெரியாதென்று என்னிடம் கூறினார். அந்த மனிதன் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவருடைய பெயர் ஜிம் ஜோன்ஸ் என்பதாக அவர் கூறுகிறார். ''அல்லது அது வேறென்ன பெயரோ அது. அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். திரு. ஜோன்ஸ் அவர்களே, எழுந்து நிற்பீர்களா? திரு. ஜொன்ஸ், ஆராதனையின் முடிவில் நீங்கள் வெளியே செல்லும்போது, அங்கு பின்பக்க வாசலில் நில்லுங்கள். இந்த மனிதனுக்கு ஏதாவதொன்று செய்ய உங்கள் இருதயங்களில் ஏவப்பட்டால், நீங்கள் வெளியே செல்லும்போது அதை செய்யுங்கள்'' என்று கூறவேண்டும். இப்பொழுது புரிந்துவிட்டதா?
இதை உங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டீர்களா... ஒலிப்பதிவு செய்பவர். ஒருவர். சகோ. காலின்ஸ் ஒலிப்பதிவு செய்யவில்லை. இதை மறுபடியும் கூறவிரும்புகிறேன். ஏனெனில் அவர் டீக்கன்மார்களில் ஒருவர்.
57வெளியிலிருந்து யாராகிலும் ஒருவர் வந்து..... அவருக்கு அவசர உதவி தேவைப்பட்டு, சபையிலிருந்து காணிக்கை பெற விரும்பினால், தர்மகர்த்தாக்கள் அல்லது டீக்கன்மார்கள் ஒன்று கூடி ஆலோசித்து... தீர்மானம் எடுத்து, அதை இந்த விதமாக செய்யலாம் என்று போதகரிடம் கூறக்கடவர்கள். அவர்கள்.... அப்பொழுது போதகர் அந்த மனிதனின் பெயரைச் சொல்லி, ''இவரை நமக்குத் தெரியாது. நம்மைச் சேர்ந்தவர்களுக்கு காணிக்கை எடுப்பதற்கு முன்பாக, அதை நாம் விசாரித்து அறிவது நமது கொள்கையாகும். ஆனால் இங்குள்ள மனிதர் பணமில்லாமல் கஷ்டப்படுவதாகவும், அவருக்கு ஒரு அவசரநிலை இருப்பதாகவும், பிள்ளைகள் வியாதிப்பட்டிருப்பதால் அவர்களுக்கு மருந்து வாங்க எதுவாயிருப்பினும், இவர் இங்கு இருக்கிறார். ''ஐயா, நீங்கள் நிற்பீர்களா?'' பாருங்கள், அவர் நிற்க பார்த்துக் கொள்ளுங்கள். ஆராதனை முடிந்தவுடன், இவர் முன் வாசலில் நிற்பார். நீங்கள் வெளியே செல்லும்போது, அவருக்கு உதவி செய்ய ஏவப்பட்டால், செய்யலாம். நாங்கள் சபையில் இதை அறிவிக்க மாத்திரம் செய்கிறாம்'' என்று கூறவேண்டும். நீங்கள் அதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை, நீங்கள் அதை அறிவிக்க மாத்திரம் செய்கிறீர்கள். பாருங்கள், அது அந்நியருக்கு அளிக்கப்படும் உபச்சாரம். பாருங்கள்? இப்பொழுது புரிகிறதா? சரி. அந்த கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டு விட்டதென்று நினைக்கிறேன்.
58ஒலிநாடாக்களைக் குறித்தென்ன? அது இப்படி: ஒலிநாடாக்களைக் குறித்தென்ன? (அது கேள்விக்குறியைக் கொண்டுள்ளது). ஏனெனில் அநேகர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி, ஒலிநாடாக்களின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் குறித்து உங்களைக் குறை கூறுகின்றனர். மேலும் திரு. மக்கையர் ஒலிநாடாக்களின் விற்பனைக்கு உரிமை தொகை வழங்கிக் கொண்டிருக்கையில், மற்றவர்கள் சபையில் ஒலிநாடாக்களை விற்கின்றனர்.
சரி. ஒலிநாடாக்களின் பதிவு ஒரு ஒப்பந்தத்தின் பேரில். நான்.... அந்த ஒப்பந்தம் எப்பொழுது முடிவடைகிறது என்று எனக்குத் தெரியாது. அது தர்மகர்த்தாக்களின் பொறுப்பு; டீக்கன்மார்கள் அல்ல, தர்மகர்த்தாக்கள்; போதகர் அல்ல, தர்மகர்த்தாக்கள். நான் கேள்விப்பட்டபடி, தர்மகர்த்தாக்களே இந்த ஒப்பந்தத்தை எழுதுகின்றனர். நான் தவறாயிருந்தால், தர்மகர்த்தாக்களே என்னைத் திருத்துங்கள். ஒலிநாடா பதிவு செய்பவருடன் இந்த தர்மகர்த்தாக்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். ஒரு உரிமையின் (franchise) பேரில் ஒலிநாடாக்கள் பதிவு செய்யப்படுகின்றன.
உரிமை பெற்றவரின் அனுமதியின்றி யாரும் ஒலிநாடாக்களைப் பதிவு செய்யவோ அவைகளை விற்கவோ கூடாது. ஏனெனில் சட்டம் அப்படித்தான் கூறுகிறது - அதாவது அது உரிமை பெற்றவரின் உரிமையென்று பாருங்கள்? உரிமை.... உரிமை பெற்றவர் இன்னார் இன்னாரை ஒலி பதிவு செய்ய அனுமதிப்பது அவரைப் பொறுத்த விஷயம். எல்லோரும் பொறுத்தது. ஒலிநாடாக்களை பதிவு செய்து விற்க, உரிமை பெற்றவர் அப்படிப்பட்டவர்களுக்கு கையொப்பமிட்ட அதிகாரம் எழுத்தில் வழங்க வேண்டும். அது சட்டப்படி சரியானது. அந்த மனிதன் அதிகாரம் பெறாமலிருந்தால், உரிமை பெற்றவர் அவரைத் தண்டனைக்குள்ளாக்க முடியும். அவர் தொல்லை விளைவிக்கக் கூடிய தீய மனிதராயிருந்தால், அவரால் அப்படி செய்ய முடியும். அந்த உரிமை பத்திரத்தை நீங்கள் படித்துப் பாருங்கள்... அது பதிப்புரிமை 'காப்பிரைட்' (copyright) போன்றது, பாருங்கள், அதே காரியம் தான். உங்களுக்கு அதை செய்ய அனுமதி கிடையாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
59ஒலிப்பதிவு செய்யும் மற்றவர்கள் ஒருக்கால் திரு. மக்கையருடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கக் கூடும். அவர் தான் ஒலிநாடாக்கள் பதிவு செய்வதற்கு உரிமைத் தொகை வழங்குபவர். இப்பொழுது.... இதைக் குறித்து எனக்குத் தெரியாது, ஏனெனில் இவை என்னவென்றும், இது யாரைக் குறிப்பிடுகிறதென்றும் அறிந்து கொள்ள நான் போதிய நாட்கள் உங்களுடன் தங்கியிருப்பதில்லை. திரு. மக்கையருக்கு இப்பொழுதும் அந்த உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் வசிக்கும் அரிசோனாவில் அவர்கள் இப்பொழுதும் கலிபோர்னியாவிலிருந்து இந்த ஒலிநாடாக்களை வாங்குவதாக கேள்விப்படுகிறேன். சகோ. சாத்மன் என்பவர் திரு. மக்கையரின் மாமனார், இங்குள்ள சபையின் நமது சகோதரர். திரு. மக்கையர் இப்பொழுதும் ஒலிப்பதிவுக்கான உரிமை பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
இப்பொழுது, ஒலிநாடாக்கள் தயார் செய்யும் விஷயத்தில் சிலகாலமாக புகார்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த சபையின் பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஏதாகிலும் புகார் வருமானால், அதை சரிபடுத்த தர்மகர்த்தாக்கள் கடமைப்பட்டிருக்கின்றனர். பாருங்கள்? எக்காரணத்தைக் கொண்டும் எதுவுமே இருக்கக்கூடாது.
60நீங்கள் காணலாம், இந்த அட்டையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்றால்:
அவர்கள் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி உங்களைக் குறை கூறுகின்றனர்.
வெளிப்படையாக கூறினால், இதைக் குறித்து எனக்கு பல கடிதங்கள் வந்துள்ளன. அவர்களால் ஏன் ஒலிநாடாக்களைப் பெற முடியவில்லை என்று நான் அறிய விரும்புகிறேன். அதற்காக உரிமை அளிக்கப்பட்டவருடன் நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிவேன், அதைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் அதனுடன் சம்பந்தம் கொள்ள நான் விரும்பவில்லை. சுவிசேஷத்தை மேலும் அறிவிக்க யாராகிலும் இந்த ஒலிநாடாக்களை உபயோகப்படுத்தக் கூடுமானால், “ஆமென்.''
முதலில், சகோ. ராபர்ஸனும் மற்றவர்களும் ஒலிநாடாக்களை பதிவு செய்தனர். பிறகு சகோ. பீலரும் இன்னும் அநேகரும் அவைகளைப் பதிவு செய்தனர். அதன் பிறகு அநேக ஆண்டுகளாய் இரண்டு பையன்கள், சகோ. மெர்ஸியரும் சகோ. கோடும் பதிவு செய்து வந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் புகார்கள் வந்துள்ளன. ஆனால் அண்மையில் ஒலிநாடாக்களைப் பெற முடியவில்லை என்று அதிகமான புகார்கள் வருவதாகத் தோன்றுகிறது. இதைக் குறித்து ஜனங்கள் நாடு முழுவதிலுமிருந்து தொலைபேசியின் மூலம் என்னிடம் புகார் செய்துள்ளனர். வேறொரு காரியம் என்ன வெனில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாவின் மீது பதிவு செய்தல். அவைகளைக் கேட்கும் போது, ஒரு நிமிடம் ஒன்றும் மற்றொரு நிமிடம் வேறொன்றும் உள்ளது. அதன் விளைவாக உங்களால் ஒன்றுமே புரிந்து கொள்ள முடிவதில்லை.
61இந்த ஒலிநாடாக்களை விலை கொடுத்து வாங்குபவர்கள் தரமான ஒலிநாடாக்களை பெறுதல் அவசியம். அதை அவர்கள் பெற்றுக்கொள்ள, ஒலிநாடாக்களை பதிவு செய்து விநியோகம் செய்வோர் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் நமது வாடிக்கையாளர்களும் நமது சகோதரரும் (நமது சகோதரரே நமது வாடிக்கையாளர்கள்) முதல் தரமான ஒலிநாடாக்களைப் பெறுகிறார்களா என்பதில் நாம் கவனமாயிருக்க வேண்டும். ஜனங்களுக்கு திருப்தியா என்று தர்மகர்த்தாக்களாகிய நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு திருப்தி இல்லாமல் போனால், அவர்களுடைய பணம் உடனே திரும்ப செலுத்தப்பட வேண்டும்.
ஒருவர் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, இந்த ஒலிநாடாக்களுக்காக பல மாதங்களாக காத்திருப்பதாகக் கூறினார். இதற்கு திரு. மக்கையர் என்ன சொல்லுவார் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இதைக்குறித்து ஒன்றுமே தெரியாது. நான்.... இதைக்குறித்து அறிந்திருப்பது என்னுடைய வேலையில்லை. அது ஒலிநாடா விநியோகம் செய்பவரின் வேலையும் தர்மகர்த்தாக்களின் வேலையுமாம். இதில் நான் தலையிட முயலவில்லை, ஆனால் இதைக் குறித்த சட்டம் என்னவென்று உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். அதற்காக விண்ணப்பம் செய்யும் அன்றைய தினத்திலிருந்து இரண்டு, மூன்று, அல்லது நான்கு, ஐந்து நாட்களுக்குள் அவை தபாலில் அனுப்பப்பட வேண்டும். இந்த ஆர்டர்களை அதற்குள் நிறைவேற்றாமல் போனால், அளிக்கப்பட்ட உரிமையை எந்த நேரத்திலும் ரத்து செய்து விடலாம். பாருங்கள்?
62ஆறு மாதங்களுக்கு அல்லது ஓராண்டுக்கு ஒருமுறை இந்த உரிமை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் எப்பொழுது புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதோ, அந்த குறிப்பிட்ட தேதியில் அது புதுப்பிக்கப்பட வேண்டும். உரிமை பெற விண்ணப்பித்தவர்களுக்கு அந்த தேதியை முன் கூட்டியே அறிவித்து, அவர்களை வரும்படி செய்து, அவர்களுடன் பேசி முடிவெடுத்து உரிமை ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்.
இப்பொழுது, இந்த ஆர்டர்கள் நிறைவேற்றப்பட வேண்டும். பாருங்கள் புகார்கள் வந்துள்ளதால், அவை சரியான விதத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்கள் லியோவையும் ஜீனையும் குறித்து புகார் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் குறித்து புகார் செய்தனர், இப்பொழுது அவர்கள் சகோ. மக்கையரைக் குறித்து புகார் செய்கின்றனர். வேறோருவரையும் குறித்து அவர்கள் புகார் செய்யக்கூடும். அவர்கள் புகார் செய்யக் காரணம் என்னவென்பதை நாம் கண்டு பிடிப்போம்.
ஒலிநாடாக்களைக் கேட்டு டஜன் கணக்கில் கடிதங்கள் வந்து, அனுப்ப வேண்டிய ஒலிநாடாக்கள் பெட்டிகள் பெட்டிகளாய் குவிந்து போனால்... பாருங்கள், அதற்கான பழிச்சொல் ஒலி நாடாவைத் தயாரிப்பவர் மேல் அல்ல. அது என் மேல் விழுகிறது. இப்பொழுது, கிறிஸ்தவன் என்னும் முறையில், விலை கொடுக்கும் ஜனங்கள் அதைப் பெற்றுக் கொள்கின்றனரா என்று கவனிப்பது என் மேல் விழுந்த கடமையாகும். அதை தர்மகர்த்தாக்களாகிய நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஒலிநாடாக்களின் விலையை உயர்த்தி, தரமான ஒலிநாடாக்களையும், தரமான இயந்திரங்களையும் வாங்கினால் பரவாயில்லை. ஆனால் சரியான விதத்தில் ஒலிநாடாவை தயார் செய்யும் ஒருவர் நமக்கு அவசியம். அதுதான் நமது சிரத்தை. ஒலிநாடா சரியான விதத்தில் தயார் செய்யப்பட வேண்டும். வாடிக்கையாளர் திருப்தியடைய வேண்டும். இல்லையென்றால் முழுவதையும் நிறுத்தி விடுங்கள். நாம் ஒலிநாடாக்களை தயார் செய்ய வேண்டாம், விருப்பமுள்ளவர் எவரும் வந்து பதிவு செய்து கொள்ளட்டும். ஆனால் அவர்கள் அதற்காக ஒரு விலையைக் குறித்திருப்பார்களானால், அவர்கள் கொடுத்த விலைக்கு ஒலிநாடாக்களை பெறுகின்றனரா என்று கவனித்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் அதுவே கிறிஸ்தவ மார்க்கம். அதைக் காட்டிலும் நீங்கள்...
63அவர்கள் சுவிசேஷத்தைக் கேட்க இங்கு வரும்போது, எனக்குத் தெரிந்த மட்டில் சிறந்ததை அவர்களுக்கு அளிக்க விரும்புகிறேன். (பாருங்கள்?). அவர்கள் இங்கு வரும்போது, நீங்கள் எல்லோரும் எல்லாவற்றையும் சரிவர செய்ய வேண்டும்மென்று விரும்புகிறேன். ஆகையால் தான் டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், போதகர்களாகிய உங்களிடம் இன்றிரவு, இதன் ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்ற வேண்டுமென்று அறிவுரை கூறுகிறேன். ஏனெனில் தேவனைக் கண்டு கொள்ள ஜனங்கள் இங்கு வருகின்றனர். இவையனைத்தையும் நாம் ஒழுங்கின்படி வைத்திருக்க வேண்டும்.
மேலும் இந்த ஒலிநாடாக்களின் விவகாரத்தை சரிபடுத்த வேண்டும். அவர்கள் விலையை உயர்த்த வேண்டுமானால், இப்பொழுது இரண்டாம் தரம் ஒலிநாடாக்களில் பதிவு செய்து கொண்டிருந்தால், தரமான ஒலிநாடாக்களை வாங்குங்கள். அதற்காக விலையையுயர்த்தினாலும் பரவாயில்லை. அவர்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்றதை பெற்றுக் கொள்ளட்டும்.
உரிமை தொகையில் எனக்கு ஒரு பைசா பெற வேண்டுமென்று விருப்பமில்லை. அவ்வாறே இந்த கூடாரமும் விருப்பம் கொண்டிருக்கவில்லை. நீங்கள் விருப்பம் கொள்ளக்கூடாது. இந்த உரிமை தொகையில் விருப்பம் கொள்ளக்கூடாது. இந்த உரிமை தொகையில் விருப்பம் கொண்டிராதிருங்கள். அவர்கள் ஒலி நாடாக்களை இங்கு பதிவு செய்வதன் காரணமாக ஒரு சிறு உரிமை தொகையை வழங்கினால் அதை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். சட்டப்பிரகாரம், ஒரு குறிப்பிட்ட உரிமை தொகையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர் திரு. பில்லருக்கும் மற்றவர்களுக்கும் விளக்கினார். அதை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.... நீங்கள் கலந்தாலோசித்து இதை கவனித்துக் கொள்ளுங்கள். அது அனைத்தையும் என்னால் கவனித்துக்கொள்ள முடியாது. அதை நடத்தவேண்டிய முறையை உங்களுக்கு அறிவிக்கிறேன். ''நடத்தவேண்டிய முறை'' என்று நான் கூறினதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். அதை நாம் சரியான விதத்தில் நடத்த விரும்புகிறோம்.
64ஒலிநாடாக்களை தயாரிக்க இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் நல்ல இயந்திரம் தேவைப்பட்டால், அதை வாங்குங்கள். அது.... நான் அவர்களிடம், ''நான் சுவிசேஷ ஊழியத்துக்கு வெளியே செல்வதற்கு முன்பாக, நான் என் பிரசங்கங்களை அங்கு பிரசங்கிக்கப் போகிறேன் என்று முன்கூட்டியே அறிவித்து விடுகிறேன். அவை ஏற்கனவே இங்கு...'' என்றேன். உங்கள் அனைவருக்கும் நான் வாக்களித்தேன், அதை நான் மறுபடியும் ஞாயிறு இரவு ஒலிப்பதிவு செய்யப் போகிறேன். அதாவது, “ஒரு புது செய்தியை நான் முதலில் இந்த கூடாரத்தில் தான் பிரசங்கிப்பேன். ஏனெனில் இங்கு அவர்கள் மற்ற இடங்களைக் காட்டிலும் சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்கின்றனர்'' என்றேன். உங்களுக்கு ஞாபக முள்ளதா? இங்கு நான் என் செய்திகளைப் பிரசங்கிக்க வரும் போது, ஒலிநாடா பதிவு செய்பவரிடம் எந்த ஆராதனைகளில் எதை பிரசங்கிப்பேன் என்பதை அறிவித்து விடுகிறேன். அவர்கள் என்னிடம், ''எவைகளை? நீங்கள் எவைகளை பிரசங்கம் செய்யப் போகின்றீர்கள்?'' என்று கேட்கின்றனர். நான் அவரிடம், ”இந்த இரவு இன்னின்னதின் பேரில் பிரசங்கம் செய்வேன்; இந்த இரவு இன்னின்னதின் பேரில்'' என்று கூறி விடுகிறேன். எனவே அவர்கள் ஆயத்தமாகி அதை தயார் செய்து, வெளியே நடக்கும் கூட்டங்களில் பதிவு செய்வதைக் காட்டிலும் சிறந்த முறையில் பதிவு செய்து, வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகின்றனர். இந்த கூடாரத்தில் ஒலி அமைப்பு நன்றாயுள்ளதால், இவை சிறந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன.
65ஆனால் இந்த பெரிய சுவிசேஷ ஊழியங்களுக்கு நான் செல்லும்போது, வெளிநாடுகளில் என்ன பிரசங்கம் செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து நான் திட்டவட்டமாக கூற முடியாது. இதுவே நான் பிரசங்கிக்கும் முதலாம் செய்தியாயிருக்கும் என்று என்னால் கூற இயலாது. ஏனெனில் நீங்கள் செய்திகளைப் பிரசங்கித்துக் கொண்டு வரும்போது, உங்களுக்கு சில... அது உங்களுக்கு பழையதாகி விடுகிறது, அதை கேட்பவர்களுக்கும் அது பழையதாகி விடுகிறது. எனவே நீங்கள் வித்தியாசமான ஒன்றை செய்து, அந்த இடத்துக்கு தேவையான செய்தியை அளிக்க வேண்டியதாயுள்ளது. அவர்கள் வெளிநாட்டு ஊழியத்திலும் இந்த கருவியை உபயோகித்தால், ஒலிநாடாக்கள் நன்றாக வரும்.
நீங்கள் நல்ல ஒலிநாடாக்களை தயாரித்து, அனுப்புவதற்கு முன்பு, அவைகளைப் போட்டு சரிபார்த்து அனுப்புங்கள். இல்லையென்றால் முழுவதையுமே நிறுத்தி விடுங்கள். நமக்கு அதனுடன் யாதொரு தொடர்பும் வேண்டாம். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த ஒலிநாடாக்களை பதிவு செய்து கொள்ளட்டும். பாருங்கள்? தொடர்ந்து செய்ய விரும்பினால், புகார் எதுவுமே இல்லாதபடி இதை சரிவர செய்யுங்கள், பாருங்கள். நமக்கு புகார்கள் எதுவும் இருக்கக்கூடாது. ஒரு புகார் இருக்குமானால், அதை கவனித்து, சரிபடுத்துவோம்.
நான் கூடுமான வரைக்கும் வேகமாக முடிக்கிறேன். பில்லியிடம் இரண்டு, இல்லை மூன்று கேள்விகள் உள்ளன. அதன் பிறகு நாம் முடித்து விடுவோம்.
66சகோ. பிரன்ஹாமே, சபையில் ஒழுங்கை நிலை நாட்ட ஒரு டீக்கன் எவ்வளவு தூரம் செல்லலாம்? நாங்கள் ஒழுங்கை நிலை நாட்டலாமா? அல்லது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று சகோ. நெவில் எங்களிடம் கூறும் வரைக்கும் காத்திருக்க வேண்டுமா?
அது சகோ. நெவிலின் வேலையல்ல. அது உங்களுடைய வேலை பாருங்கள்? நீங்கள் சகோ. நெவிலிடம், அவர் என்ன பிரசங்கிக்க வேண்டும், எப்படி பிரசங்கிக்க வேண்டும் என்று கூறுவது கிடையாது. பாருங்கள், அது உங்களுடைய வேலை. டீக்கன்மார்களாகிய நீங்கள் அதைச் செய்ய வேண்டும், அதை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். அது சகோ. நெவிலுடன் சம்பந்தப்பட்டதல்ல. அது உங்களுடைய வேலை. பாருங்கள்?
தெருவிலுள்ள ஒரு போலீஸ்காரன், காரின் பின் பக்கத்திலுள்ள பொருளைத் திருடும் ஒரு மனிதனைக் காணும்போது, அவன் நகராண்மைக் கழகத் தலைவரை அழைத்து, ''நகராண்மைக் கழகத் தலைவரே, மதிப்பிற்குரியவரே, ஐயா, இந்த காவற்படையில் நான் உமக்காக வேலை செய்கிறேன். தெருவில் ஒரு மனிதன் நேற்றிரவு காலின் டயர்களைத் திருடுவதைக் கண்டேன். நான் என்ன செய்ய வேண்டுமென்று வியக்கிறேன், அதைக் குறித்து உம்முடைய கருத்து என்ன?'' என்று கேட்க வேண்டுமா என்ன? ஊ! பாருங்கள்? பாருங்கள், அது புத்திசாலித்தனம் அல்ல. அது அவ்வாறு இருக்குமா? இருக்காது, ஐயா! அவன் தவறு செய்தால், அவனைக் கைது செய்ய வேண்டும்.
அவ்வாறே சபையில் யாராகிலும் தவறு செய்வதை நீங்கள் காணும்போது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் நல்லவிதமாக பேசுங்கள், அதிகாரத் தோரணையில் பேச வேண்டாம். அவர்கள் செவி கொடுக்க மறுத்தால், நீங்கள் சொல்வதை அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் சொல்லுங்கள். பாருங்கள்? உதாரணமாக, ஒரு பிள்ளை தவறாக நடந்து கொள்வதைக் காணும்போது, ''நடந்து உன் இடத்துக்கு போ'' என்று சொல்லுங்கள். டீக்கன்மார்களே, உங்கள் இடத்தில் இருங்கள்! வையுங்கள். நீங்கள் நான்கு பேர். இரண்டு பேர் முன் பாகத்திலும், அல்லது அப்படி எங்காவது ஓரிடத்தில் உன்னிப்பாக கவனியுங்கள். ஏனெனில் குற்றவாளிகள் போன்றவர்கள் உள்ளே நுழைய வழியுண்டு, பாருங்கள். நீங்கள் ஜாக்கிரதையாயிருந்து, உங்கள் இடத்துக்கு சென்று, அங்கேயே இருங்கள், அதுவே உங்கள் இருக்கை அல்லது ஒருசுவரின் பக்கம் நின்று கொண்டு, உள்ளே வரும் ஒவ்வொருவரையும் ஜாக்கிரதையாக கவனியுங்கள்.
67டீக்கன் தேவனுடைய வீட்டை பாதுகாக்கிறவர். யாராகிலும் உள்ளே வரும் போது, அவர்களுடன் பேசுங்கள். அவர்களை வரவேற்க அங்கு இருங்கள், அவர்களுடன் கை குலுக்குங்கள். நீங்கள் போலீஸ்காரர். ''உங்களுக்கு நாங்கள் கழியலறையை காண்பிக்கட்டுமா?'' அல்லது ''நீங்கள் தயவுசெய்து உட்காருவீர்களா? அல்லது ''நீங்கள் இங்கு கர்த்தருக்குள் களிகூர்ந்து ஜெபிக்க விரும்புகிறோம், நீங்கள் இன்றிரவு இங்கு வந்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ''அவர்களை 'உட்காரப் பிரியமா, அல்லது பின்னால் உட்கார்ந்து கொள்கிறீர்களா?'' அல்லது எங்காவது, அது உபச்சாரம்.
ஒரு போலீஸ்காரன் (அதாவது டீக்கன்) இராணுவத்தினருக்கு உள்ள மிலிடரி போலீஸ்காரன் போன்றவர், மரியாதையுடனும் அவசியப்பட்டால் அதிகாரத்துடனும் நடந்து கொள்வது. பாருங்கள்? மிலிடரி போலீஸ் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். அவன் தன் அதிகாரத்தை பயன்படுத்தினால்; அது ஒரு இராணுவ குருவானவரைப் போல் என்று நினைக்கிறேன். பாருங்கள்? அது மரியாதையுடன் நடந்து கொள்ளுதல், மற்றெல்லாமே. ஆனால் அவருக்கு அதிகாரம் உள்ளது. பாருங்கள், நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். பாருங்கள், அவர் இந்த சிப்பாய்கள் குடித்து விட்டு வரும்போது, இராணுவ போலீஸ்காரன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களுடன் ஈடுபடுகிறான். அப்படித்தான் டீக்கனும் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களுடன் ஈடுபட வேண்டும்.
இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், டீக்கன் ஒரு போலீஸ்காரன். டீக்கனின் உத்தியோகம் சபையிலுள்ள மற்றெல்லா உத்தியோகங்களைவிட மிக கண்டிப்பு வாய்ந்தது. டீக்கனின் உத்தியோகத்தைக் காட்டிலும் மிக கண்டிப்பான உத்தியோகத்தை நான் அறியேன். அது உண்மை, ஏனெனில் அவருடைய வேலை கடினமானது. அவர் தேவனுடைய மனிதன். போதகர் தேவனுடைய மனிதனாயிருப்பது போல், இவரும் தேவனுடைய மனிதன். நிச்சயமாக அவர் தேவனுடைய ஊழியக்காரன்.
68தர்மகர்த்தாக்கள், ஒரே காரியம் என்னவெனில், அவர்கள் பொருளாதாரத்தை கவனித்துக் கொள்ள தேவனால், அந்த வேலையில் அமர்த்தப்பட்டவர்கள். நான் ஒலிநாடாக்களை குறித்து உங்களிடம் கூறினேன், இன்னும் நடந்து கொண்டிருக்கும் மற்ற காரியங்கள், கட்டிடங்கள் பழுது பார்த்தல், இவைகளுக்குப் பணம் வழங்குதல் சொத்துக்கள், பணம் போன்றவைகளை கவனித்துக்கொள்ளவே தர்மகர்த்தாக்கள் உள்ளனர். டீக்கன்மார்கள் இதில் சம்பந்தப்படக்கூடாது. அவ்வாறே தர்மகர்த்தாக்களும் டீக்கன்மார் உத்தியோகத்தில் தலையிடக்கூடாது.
ஆனால் டீக்கன்மார்கள் வேண்டுமானால் தர்மகர்த்தாக்களின் உதவியை ஏதாவது ஒன்றில் நாடலாம், அவ்வாறே தர்மகர்த்தாக்களும் டீக்கன்மார்களின் உதவியை நாடலாம். நீங்கள் எல்லோரும் ஒருமித்து பணிபுரிகிறீர்கள், ஆனால் உங்களுக்கு தனித்தனியே உத்தியோகம் உண்டு. பாருங்கள்? சரி.
69இப்பொழுது, சகோ. நெவிலைக் கேட்காதீர்கள். சகோ. நெவில் ஏதாவதொன்றைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொண்டால், அவர் உங்கள் போதகர், நீங்கள் மரியாதையுடனும் அன்புடனும் அவர், ''சகோ. காலின்ஸ், சகோ. ஹிக்கர்ஸன், சகோ. டோனி, உங்களில் யாராகிலும் ஒருவர், பின்னால் மூலையில் என்ன நடக்கிறதென்று தயவு செய்து பார்ப்பீர்களா?'' என்று கேட்பாரானால், அவர் உண்மையான தேவனுடைய மனிதன் என்னும் முறையில் உங்கள் கடமையைச் செய்யுங்கள்.
நீங்கள் பிரன்ஹாம் கூடாரத்துக்கோ, அல்லது சகோ. நெவிலுக்கோ எனக்கோ ஊழியம் செய்யவில்லை. நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள்... நீங்கள் அவருக்கே ஊழியம் செய்கிறீர்கள். அவர் அந்த போதகரின் பற்றை மதிப்பது போல், ஊழியத்தில் நீங்கள் கொண்டுள்ள பற்றையும் மதிக்கிறார். அவர் உங்களிடமிருந்து அந்த பற்றை எதிர்பார்க்கிறார்! நமது பற்றை நாம் காண்பிப்போம்.
70இப்பொழுது, சில நேரங்களில் அது கடினமாகி விடுகிறது. நான் என் முழு இருதயத்தோடு நேசிக்கின்ற ஒரு போதகர் அப்படி இருக்கிறதை காண்பது சற்று கடினமாக இருக்கிறது, அங்கு உட்கார்ந்திருக்கும் அவரிடம் வெளிப்படையாக கூற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் அன்பின் வழியில், நான் கரம் கொடுத்து அவருக்கு உதவ வேண்டும். பாருங்கள்? அவர்கள் என்னிடம் வந்து, ''சகோ. பிரன்ஹாமே, நீர் மிகவும் அருமையானவர். நீர் ஏன் ஞானஸ்நானம், இந்த, அந்த விஷயத்தில், நித்திய பாதுகாப்பு, சர்ப்பத்தின் வித்து போன்ற உபதேசங்களில் விட்டுக் கொடுத்து ஒத்துப்போகக் கூடாது?'' என்கின்றனர்.
நான், ''சகோதரனே, உம்மை நான் நேசிக்கிறேன்... நாம் இப்பொழுது வேதாகமத்தை எடுத்துக்கொண்டு, யார் சரி யார் தவரென்று காணலாம். என்னால் அதை...'' என்று கூறினால்.
அவர், ''ஓ, இல்லை. சகோ. பிரன்ஹாமே, நீர் கூறுவது அனைத்தும் தவறு என்று என்னால் கூறமுடியும்,'' என்று சொல்லி, பாருங்கள், கோபம் கொள்கின்றனர்.
நான், “ஓ, ஒருக்கால் இருக்கலாம். அப்படி இருந்தால் நீர் நிச்சயம் எனக்கு காட்ட முடியும்... நான் எங்கு தவறாயிருக்கிறேன் என்று உமக்கு தெரியுமல்லவா, அப்படியானால் அதை எனக்குத் காண்பியுங்கள். நான் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்'' என்கிறேன்.
அதே காரியம் தான், “ஏய், அந்த குழந்தையை உட்காரச் சொல்ல உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது.'' டீக்கன் தேவனுடைய வீட்டின் பாதுகாவலர். பாருங்கள்? இப்பொழுது நீங்கள்.... அவர் தேவனுடைய வீட்டைப் பாதுகாத்து அதை ஒழுங்காக வைக்கிறார். அப்படித்தான் வேதம் கூறுகிறது. டீக்கன் செய்ய வேண்டியது வேறொதாவது இருந்தால், என்னிடம் வந்து கூறுங்கள். பாருங்கள், அதே காரியம், அதை செய்வது உங்கள் வேலை, மற்றவர் அதற்கு ஆதரவு கொடுங்கள்.
நீங்கள் யாரையும் கேட்கத் தேவையில்லை. அது உங்களுடைய வேலை. நீங்கள் சகோ. நெவிலையோ அல்லது வேறு யாரையும் கேட்காதீர்கள். சபையானது கேட்க... அதாவது கூடாரத்துக்கு கூறை போட வேண்டுமென்று சகோ. நெவில் விரும்புகிறாரா என்று தர்மகர்த்தாக்கள் கேட்கத் தேவையில்லை. பாருங்கள்? இல்லை. இல்லை. அது சகோ. நெவிலுடன் சம்பந்தப்பட்டதல்ல. இது என்னுடனும் சம்பந்தப்பட்டதல்ல, அது உங்களுடைய விவகாரம். டீக்கன்கள் கேட்கத் தேவையில்லை....
71அவ்வாறே நீங்கள் போதகரிடம், “நீங்கள் எதைக் குறித்து பிரசங்கம் பண்ணப் போக்கிறீர்கள்? நீங்கள் இதை செய்யக்கூடாது'' என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர் தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறார். பாருங்கள், உங்கள் போதகர். பிறகு நீங்கள்... தேவன் நமக்கு அளிக்கும் செய்தியை சகோ. நெவில் பிரசங்கிக்கிறார். நாம் அனைவரும் இதில் ஒன்றுபட்டிருக்கிறோம். நான் சகோ. நெவிலிடம் தவறான ஒன்றைக் கூறினால், அதற்கு தேவன் என்னைப் பொறுப்பாளியாக்குவார். அது உண்மை. பாருங்கள்? எனவே தேவனே இவையனைத்துக்கும் தலைவர். பாருங்கள்? நாம் அவருடைய ராஜ தூதர்களாக, பாருங்கள், இந்த உத்தியோகங்களில் ஈடுபட்டிருக்கிறோம்.
72தயவு கூர்ந்து... இது அடுத்த கேள்வி. இன்னும் ஒரு கேள்வி உண்டென்று நினைக்கிறேன். அதன் பிறகு நாம் முடித்து விடுவோம். தயவு கூர்ந்து அந்நிய பாஷை பேசும் வரங்கள் நமது சபையில் எவ்வாறு இயங்க வேண்டும் என்று தயவு கூர்ந்து விளக்குங்கள். அதை நான் ஏற்கனவே செய்துவிட்டேன். சபை எப்பொழுது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அல்லது எப்பொழுது வரங்கள் இயங்க வேண்டும்? இப்பொழு தான் நாம் அதை விவரித்தோம்.
73எத்தனை கி-றி-ஸ்-து-ம... உன்னால் இதை படிக்க முடிகிறதா? (பில்லிபால் ''வாத்தியக் கருவிகள் என்று சகோ. பிரன்ஹாமுக்கு படித்துக் காண்பிக்கிறார் - ஆசி). ஓ, வாத்தியக் கருவிகள். ஆர்கனையும் பியானோவையும் தவிர, சபையில் எத்தனை வாத்தியக் கருவிகள் இருக்கலாம்?
அது நரம்பு வாத்தியக் கருவிகள் அல்லது என்ன வாத்தியக் கருவிகள் உள்ளதோ, அதை பொறுத்தது. உங்களிடம் என்ன உள்ளதென்றோ, இதன் அர்த்தம் என்னவென்றோ எனக்குப் புரியவில்லை. ஆர்கனும் பியானோவும் சபைக்குச் சொந்தமானவை. பாடல் தலைவர் ட்ரம்பட், கார்னட் போன்ற வாத்தியக் கருவிகள் இருக்க வேண்டும் என்று பிரியப்பட்டால், சபைக்கு வருபவர் யாராகிலும் இந்த வாத்தியக் கருவிகளை வாசிக்க நேர்ந்தால்.... அவர்கள் இந்த வாத்தியக் குழுவில் வாசிக்க இசைந்தால், தர்மகர்த்தாக்களிடம் வாத்தியக் கருவிகளை வாங்கப் பணம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். அது தான் அவர்களுடைய கேள்வி என்று நினைக்கிறேன்.
வாத்தியக் கருவிகள் வாசிப்பவர்களிடம் சொந்த வாத்தியக் கருவிகள் இருக்குமானால், மிகவும் நல்லது. அவர்களிடம் சொந்த வாத்தியக் குழுவின் உறுப்பினராக ஆக அவர்கள் விரும்பினால், இங்கு எப்பொழுதாகிலும் வந்து எப்பொழுதாகிலும் ஒருமுறை வாசித்துச் செல்பவர் அல்ல. அவர் சபையின் வாத்தியக் குழுவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இன்று இங்கு வாசித்து நாளை வேறெங்கோ வாசித்து, அதற்கு அடுத்த நான் வேறெங்கோ வாசித்து, இப்படியாக எப்பொழுதாகிலும் ஒருமுறை இங்கு வந்து சிறிது வாசிக்கும் ஒருவருக்கு சபை ட்டிரம்பட் வாங்கித் தரக் கூடாது. இல்லை, ஐயா. அவர் இங்குள்ள வாத்தியக் குழுவைச் சேர்ந்திருந்தால், வாத்தியக் குழுவின் தலைவர் வாத்தியக் கருவியை வாங்கிக் கொடுக்க தர்மகர்த்தாக்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.
74டீக்கன்மார்களாகிய நாங்கள் ஜனங்களை பிரகாரத்தில் முன்பும் பின்பும்... தயவு செய்து விளக்குங்கள் (பில்லி பால் சகோ. பிரன்ஹாமுக்கு கேள்வியைப் படித்துக் காட்டுகிறார்: ''சபை ஆராதனைக்கு முன்பும் அதற்கு பின்பும் நாங்கள் ஜனங்களை பிரகாரத்தில் எவ்விதம் அமைதியாக வைத்திருப்பது?'' - ஆசி.) ஓ, சரி.
சகோதரரே, இதை நான் ஆலோசனையாக கூற விரும்புகிறேன். இது ஒரு பெரிய காரியம், இதை விவரிக்க நமக்கு அதிக நேரம் இருந்தால் நலமாயிருக்கும். ஏனெனில் இது. இது நமக்கு முக்கியம் வாய்ந்தது, பாருங்கள். இப்பொழுது, சபையானது ஒரு...
அவருக்கு விருப்பமானால்... ஜனங்கள் புரிந்து கொள்ள, என்றாகிலும் ஒரு இரவு கூட்டத்துக்கு முன்பு இந்த ஒலிநாடாவைப் போட விரும்பினால், இதைப் போடுங்கள். ஒலிநாடாவின் இந்த பாகத்தை மாத்திரம், முழு ஒலிநாடாவையும் அல்ல, இதை மாத்திரம். இந்த ஒலிநாடாவின் ஒரு குறிப்பிட்ட பாகத்தை ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக நீங்கள் கேட்க விரும்பும் போது, அந்த பாகம் வரும் வரைக்கும் ஒலிநாடாவை இயக்குங்கள். ஏனெனில், இது கேள்விகளைக் கொண்டதாயுள்ளது.
இப்பொழுது, நான் கூறினது போன்று, சபையின் டீக்கன்மார்கள் சபையின் போலீஸ்காரர்கள், சபை என்பது பொதுவாகக் கூடி நட்பு கொள்வதற்கும் களியாட்டுகளில் ஈடுபடுவதற்குமான இடமல்ல. சபை என்பது தேவனுடைய பிரகாரம். நாம் இங்கு வரும் காரணம்... நாம் ஒருவரையொருவர் சந்திக்க விரும்பினால், நான் உங்கள் வீட்டிற்கு வரலாம், அல்லது நீங்கள் என் வீட்டிற்கு வரலாம். அல்லது நீங்கள் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் சென்று ஒருவரையொருவர் சந்திக்கலாம். ஆனால் சகோதரரே, சபையில் ஓடியாடி விளையாடி, சம்பாஷணை நடத்துவது சரியல்ல. இங்கு நாம் வரும் போது, நமது மனதிலுள்ள அனைத்தையும் அகற்றி விட்டு வரவேண்டும். அவ்விதம் நாம் இங்கு வருவோமானால்....
75பல ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் என்ன செய்வது வழக்கம் என்பதை பாருங்கள். சகோதரி கெர்டி அப்பொழுது பியானோ வாசித்தாள். இங்கு நான் அக்காலத்தில் போதகராயிருந்த போது, நானே போதகர், டீக்கன், தர்மகர்த்தா எல்லாமாக ஒரே நேரத்தில் இருந்து, பாருங்கள். எல்லா வேலையும் ஒரே நேரத்தில் இருந்து, பாருங்கள். எல்லா வேலையும் செய்ய வேண்டியதாயிருந்தது. ஆனால் இப்பொழுது நீங்கள் அவ்விதம் செய்யவேண்டிய அவசியமில்லை, பாருங்கள், ஏனெனில் இவைகளைச் செய்ய உங்களுக்கு ஆட்கள் உள்ளனர். ஆனால்..... எனக்கு வாயிற்காப்போர் இருந்தனர். சகோ. சூவர்ட்டும் மற்றவர்களும் வாசல் கதவண்டையில் இருப்பார்கள். அவர்கள் புத்தகங்களை அங்கே வாசலருகில் நாற்காலியின் மேல் அல்லது வேறொதாவதின் மேல் அடுக்கி வைத்திருப்பார்கள். யாராகிலும் உள்ளே வரும்போது, அவர்களுடைய ''கோட்டை மாட்டும் இடத்தை அவர்களுக்குக் காண்பிப்பார்கள், அல்லது அவர்கள் உட்காருவதற்கு இருக்கைகளைக் காண்பித்து உதவுவார்கள். அவர்களிடம் ஒரு பாட்டுப் புத்தகத்தைக் கொடுத்து ஜெப சிந்தையில் இருக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்வார்கள். எல்லோரும் அமர்ந்து ஆராதனை துவங்கும் நேரம் வரைக்கும் அமைதியாக ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். துவங்கும் நேரம் வரும்போது, பியானோ இசைக்கும் சகோதரி கெர்டி எழுந்து சென்று இசையை துவங்குவார்கள். அப்பொழுது ஜனங்கள் ஒன்றாக சேருவார்கள்.
ஆர்கன் இசைப்பவள் அங்கு சென்று இனிய நல்ல இசையை இசைக்க வேண்டுமென்று உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். அவளால் வர முடியாமல் போனால், அருமையான, இனிய, புனிதமான இசைகொண்ட ஒலிநாடாவைப் போடுங்கள். எனவே ஜனங்களிடம் கூறுங்கள்.... ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தால், டீக்கன்மார்களில் ஒருவர் பீடத்திலுள்ள ஒலிபெருக்கியின் அருகில் சென்று, ''உஷ், உஷ், உஷ்'' என்று சொல்லட்டும். அவர், ''இங்குள்ள இந்த கூடாரத்தில் நீங்கள் வந்து ஆராதிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாம் சத்தம் போடாமல் இசையைக் கேட்போம். உங்கள் இருக்கைக்குச் சென்று, உட்கார்ந்து, பயபக்தியுடன் (பாருங்கள்?) ஜெபித்துக் கொண்டிருங்கள், அல்லது வேதத்தை வாசித்துக் கொண்டிருங்கள். இந்த பிரகாரத்தில் கர்த்தர் வாசம் செய்கிறார். எல்லாரும் பயபக்தியுடன் இருந்து ஆராதிக்க நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் ஆராதனைக்கு முன்பு இங்குமங்கும் ஓடிச் சென்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் ஒன்று கூடுங்கள். நீங்கள் கர்த்தரிடம் பேசவே இங்கு வந்திருக்கிறீர்கள். பாருங்கள், அமைதியாக ஜெபித்துக் கொண்டிருங்கள், அல்லது வேதத்தை வாசித்துக் கொண்டிருங்கள்'' என்று கூறட்டும்.
76நான் மார்பிள் சபைக்கு சென்றிருந்த போது... நார்மன் வின்சன்ட் பீல், அவரைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், பாருங்கள். நான் அங்கு சென்றிருந்தேன்... அவர் பெரிய மனோதத்துவ ஆசிரியர் என்று உங்களுக்குத் தெரியும். அவருடைய சபைக்கு நான் சென்றபோது, “என் கூடாரமும் இப்படி செய்தால் நலமாயிருக்கும்'' என்று எண்ணினேன். நீங்கள் உள்ளே பிரவேசிக்கும் போது அந்த டீக்கன்மார்கள் கதவினருகில் நின்று கொண்டிருப்பதைக் காணலாம். அவர்கள் ஞாயிறு பள்ளித்தாளை உங்கள் கையில் கொடுத்து உங்களை உள்ளே அழைத்துச் செல்கின்றனர். உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் மூன்று முறை ஆராதனை நடத்துகின்றனர். அது நானூறு அல்லது ஐந்நூறு பேர்களை மாத்திரமே கொள்ளும். நியூயார்க் ஒரு பெரிய இடம். அவரும் பிரபலமானவர். அவர்கள் ஒரு வகுப்பை பத்து மணிக்கும் மற்றொரு வகுப்பை பதினொன்று மணிக்கும் நடத்தினர் என்று நினைக்கிறேன். அதே பிரசங்கம் மறுபடியும் செய்யப்பட்டது, அதே ஆராதனை, அதே காதிதத்தாள். ஒரு ஆராதனை முடிந்தவுடனே சபையோர் வெளியே செல்வதற்கு ஐந்து நிமிடங்கள் அளிக்கப்பட்டன என்று நினைக்கிறேன்... இவர்கள் வெளியே செல்லும் வரைக்கும் யாருமே உள்ளே வர முடியாது. அதன் பிறகு டீக்கன்மார்கள் கதவைத் திறந்துவிட்டனர், அடுத்த ஆராதனைக்கு சபையோர் நிறைந்தனர். அவர்களுக்கு பழைய ”பெட்டி இருக்கைகள் இருந்தன. கதவைத் திறந்தவுடன் அவர்கள் அப்படி உள்ளே சென்று, இருக்கைகளில் (pews) அமர்ந்தனர். பழைய காலத்து இருக்கைகள். அந்த மார்பிள் சபை இருநூறு ஆண்டுகளாக இருந்த வருகிறதென்று நினைக்கிறேன்.
77ஒரு குண்டூசி கீழே விழுந்தால் அதன் சத்தத்தையும் நீங்கள் அந்த சபையில் கேட்கும் அளவுக்கு அது அமைதியாக இருந்தது. ஆர்கனில் முன்னிசை (prelude) இசைக்கப்படுவதற்கு முன்பு குறைந்தது அரைமணி நேரம் எல்லோரும் ஜெபத்தில் தரித்திருந்தனர். “இது எவ்வளவு நன்றாயுள்ளது” என்று நான் நினைத்துக் கொண்டேன். பிறகு அந்த போதகர்... அந்த முன்னிசை ஏறக்குறைய... அவர்கள் ''நீர் எவ்வளவு பெரியவர்'' என்னும் முன்னிசையை அல்லது வேறொதோ ஒரு பாடலை ஏறக்குறைய மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்கு ஆர்கனில் வாசித்தார்கள் என்று நினைக்கிறேன். அதை வாசிக்கத் தொடங்கினபோது, எல்லோரும் ஜெபம் செய்வதை நிறுத்திவிட்டு அந்த முன்னிசையை கேட்டுக் கொண்டிருந்தனர். பாருங்கள், அது ஜெபத்திலிருந்து முன்னிசைக்கு ஒரு மாற்றத்தை அளித்தது. அவர்கள் அதை வாசித்து முடிந்த பின்பு, பாடற்குழு, அதன் பிறகு சபையோரும் பாடற்குழுவும் சேர்ந்து ஒரு பாடலைப்பாடினர். அதன் பிறகு அவர்கள் ஞாயிறு பள்ளி வகுப்புக்கு ஆயத்தமாயினர். பாருங்கள்? பிறகு ஆராதனை முடிந்தது. அங்கு தெய்வீக வழிபாட்டைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. அதற்காகவே நாம் அங்கு செல்கிறோம்.
78நமது சபையும் அதை பின்பற்றினால் நலமாயிருக்கும் என்று நினைக்கிறேன். இதைக்கூற விரும்புகிறேன். நாம் அவ்விதம் செய்யப் போகிறோம். பாருங்கள்? அதை நாம் செய்வோம். யாராகிலும் செய்யும் ஒன்று. அது நல்லதாயிருக்குமானால், நாமும் அதைச் செய்வோம். பாருங்கள்? நல்ல காரியம் எதையும் நாம் தள்ளிவிட விரும்பவில்லை, அதை நாம் எப்படியும் செய்வோம். பாருங்கள்?நீங்கள் சென்று அங்கு நின்று கொள்ளுங்கள். அவர்கள் காலையில் தொடங்கினால், ஜனங்கள் இங்குமங்கும் செல்லத் தொடங்கினால், யாராகிலும் ஒருவர் டீக்கன்மார்களில் ஒருவர் - அங்கு சென்று, ''இங்குள்ள கூடாரத்தின் சட்டதிட்டம் என்னவென்றால்...'' என்று கூறட்டும்.
அவர்கள் அவ்விதம் இங்கு செய்கின்றனரா என்று எனக்குத் தெரியவில்லை, அவர்கள் செய்யக் கூடும். நான் இங்கு இருப்பதில்லை, பாருங்கள், ஆகையால் எனக்குத் தெரிவதில்லை. ஆராதனைகள் தொடங்குவதற்கு முன்பு இங்கு நான் வருவதில்லை.
அவர்கள் சபைக்குள் வந்து பேசத் தொடங்கினால் யாராகிலும் எழுந்து சென்று, ''உஷ், உஷ், உஷ், ஒரு நிமிடம் என்று சொல்ல வேண்டும். பாருங்கள்? ஒரு சகோதரியை அங்கு அனுப்பி இசை இசைக்கும்படி செய்யுங்கள். இசை இசைக்க யாரும் இல்லையென்றால், ஆர்கன் இசை பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாவைப் போடுங்கள். நாம் இப்பொழுது... இந்த கூடாரத்தில் ஒரு புதிய நியமம்கைக் கொள்ளப்படுகிறது. ஜனங்கள் உள்ளே பிரவேசித்த பிறகு, குசுகுசுவென்றோ, உரக்க பேசுவதோ கூடாது. பாருங்கள்?'' இன்னும் சில நிமிடங்களில் ஆராதனை தொடங்கும். அதுவரைக்கும் நீங்கள் வேதத்தைப் படியுங்கள், அல்லது தலைகுனித்து மெளனமாக ஜெபியுங்கள்'' என்று கூறுங்கள். சில முறை அவ்விதம் செய்தால், அவர்கள் எல்லோரும் கற்றுக் கொள்வார்கள். பாருங்கள்? பாருங்கள்.
79யாராகிலும் பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் கேட்கும்போது.... சில முறை அவ்விதம் செய்த பிறகும் சிறிது நேரம் கழித்து யாராகிலும் ஒருவர் பாருங்கள், ஒருவர் மாத்திரம் பேசிக் கொண்டிருந்து, மற்றவர் எவருமே பேசாமலிருந்தால், டீக்கன்மார்களில் ஒருவர் அவரிடம் நடந்து சென்று, ''ஆராதனையின் போது நீங்கள் ஆராதிக்க வேண்டும், பாருங்கள்? என்று சொல்ல வேண்டும். பாருங்கள்,'' பாருங்கள், இது பேசும் வீடல்ல, ஆராதனை செய்வதற்கான வீடு. புரிகின்றதா?
அவ்வளவு தான் என்று நினைக்கிறேன். தயவு செய்து விளக்குங்கள்... (ஆம், பார்ப்போம், ஆம்.) டீக்கன்மார்கள் எவ்விதம்... பிரகாரத்தில். ஆம், அவ்வளவு தான். அது உண்மை. அதுதான்.
80சரி. இதோ கடைசி கேள்வி:
சகோ. பிரன்ஹாமே, ஆராதனையின் துவக்கத்தில் எங்களுக்கு தருணம் இருந்த போது, நான் - நான்... புகா... அவர்களிடம், ''புகார்கள் வந்தன. இது மிகவும் சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ''என்னிடம் புகார்கள் வந்தன.'' இல்லையா? (பில்லி பால் 'ஆம்' என்று சொல்லிவிட்டு, சிறு எழுத்துக்களில் எழுதப்பட்ட கேள்வியைப் படிக்க உதவி செய்கிறார் - ஆசி) புகார்கள் வந்தன. ஆராதனையின் துவக்கத்தில் எங்களுக்கு.... (பார்ப்போம்).... எங்களுக்கு பாடல்கள், சாட்சிகள், ஜெபியுங்கள், ஜெப விண்ணப்பங்கள், விசேஷித்த பாடல்கள்... அதன் பிறகு... செய்திக்கு வரும்போது பதினொன்று மணி... அல்லது அதற்கு அதிகமாகவும் ஆகிவிடுகின்றது. இதன் விளைவால் வார்த்தைக்கு அதிக நேரம் இருப்பதில்லை. சிலர் அமைதியற்ற நிலை அடைந்து ஆராதனை முடியும் முன்பே போய் விடுகின்றனர். எத்தனை பாடல்கள் பாட வேண்டும், செய்தியை எத்தனை மணிக்குத் தொடங்க வேண்டும் என்பதைக் குறித்து விவரித்துக் கூறுங்கள். சில நேரங்களில் எங்களுக்கு ஜெப விண்ணப்பங்கள் இருந்து, அது சாட்சி கூட்டமாக முடிவடைகிறது. சில காரியங்கள்... அந்த நேரத்துக்கு சரியென்றுபடவில்லை.
81இப்பொழுது, இதை சரியாகப் படித்தேன் என்று நம்புகிறேன். இதை படிக்க பில்லி எனக்கு உதவி செய்தான். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கேட்கும்போது நீங்கள்... நமது மத்தியிலுள்ள யாராகிலும்... கூட்டத்தில், பின்பு எப்பொழுதாகிலும் இந்த ஒலிநாடாவைக் கேட்க நேரிட்டால், இந்த கேள்வியைப் படிக்க பில்லி எனக்கு உதவி செய்வது தான் இது. ஏனெனில் இது மிகவும் சிறியதாக எழுதப்பட்டிருந்ததால் என்னால் அதைப் படிக்க இயலவில்லை. அது என்னவென்று பொதுவாக அறிந்து கொண்டேன். அதாவது, ''ஆராதனை துவங்குவதற்கு முன்பு எத்தனை பாடல்களைப் பாட வேண்டும்? ஆராதனை எத்தனை மணிக்கு துவங்க வேண்டும்?''
முதலாவதாக நானே என் தவறை இங்கு அறிக்கையிட விரும்புகிறேன். நான் தவறு செய்யும்போது, ''நான் தவறு என்று ஒப்புக் கொள்ள விரும்புகிறேன். இதை நானே முன்னின்று செய்பவன் என்பதை அறிக்கையிட விரும்புகிறேன். ஏனெனில் இந்த நீண்ட ஆராதனைகளை நான் நடத்தினால், சபையும் அந்த பழக்கத்துக்கு ஆளானது, (பாருங்கள், ஆனால் அப்படியிருக்கக் கூடாது. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நான்... நான் .... “ஞாயிறு இரவு முதற்கொண்டு; இங்கு நான் ஒருவாரம் தங்க நேரிட்டால், என் பிரசங்கத்தை நான் முப்பது அல்லது நாற்பது நிமிடங்களுக்கு மேல் செய்யப் போவதில்லை'' என்று உங்கள் அனைவரிடமும் கூறினேன்.
82ஏனெனில் இதை நான் கண்டு கொண்டேன், அதாவது ஒரு பிரசங்கம் .... வல்லமையோடு செய்தி அளிக்கப்படும்போது, அது நல்ல பலனை அளிக்கிறது. ஆனால் நீங்கள் நீண்ட நேரம் பிரசங்கம் செய்தால், ஜனங்களைக் களைப்படையச் செய்து விடுகிறீர்கள், அவர்கள் அதை கிரகித்துக் கொள்வதில்லை. நான் நீண்ட நேரம் பிரசங்கம் செய்யும் காரணம். இதை நான் எப்பொழுதுமே அறிந்திருக்கிறேன். பாருங்கள்? மிகவும் வெற்றி கண்ட பேச்சாளர்கள் குறைந்த நேரம் பேசினவர்களே... இயேசு சொற்ப வார்த்தைகளைப் பேசுபவராயிருந்தார், அவருடைய பிரசங்கங்களை கவனியுங்கள். பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு நிகழ்த்தின பிரசங்கம் ஒருக்கால் பதினைந்து நிமிடங்களே இருந்திருக்கும். ஆனால் அவன் வல்லமையுடன் பிரசங்கித்தது. அதே இடத்தில் மூவாயிரம் ஆத்துமாக்களை தேவனுடைய ராஜ்யத்தில் சேர்த்தது. பாருங்கள்?
இந்த விஷயத்தில் நான் குற்றவாளியே. இவ்வாறு நான் செய்யக் காரணம், இதை நான் அறியாமல் இல்லை, ஆனால் நான் பிரசங்கத்தை ஒலிநாடாக்களில் பதிவு செய்கிறேன். இந்த ஒலிநாடாக்கள் வீடுகளில் மணிக்கணக்காக போட்டு கேட்கப்படும். ஆனால் வரும் ஞாயிறன்று, இதை நான் செய்த காரணத்தை; வரப்போகும் இந்த ஞாயிறன்று இவைகளை நான் செய்த காரணத்தை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதை இப்பொழுதே இந்த ஒலிநாடாவில் கூறிவிடுகிறேன். இதை நான் செய்யக் காரணம் இந்த மணி நேரத்தின் செய்திக்காக நான் கொண்டிருந்த மிகுந்த பாரமே. அதை வெளியே அனுப்பிவிட வேண்டுமென்று முனைந்தேன். இப்பொழுது புத்தாண்டு தொடங்கி என் கூட்டங்களில் நான் முப்பது நிமிடங்கள் மாத்திரமே எடுத்துக் கொள்வேன். நான் எங்கு சென்றாலும். நான் கடிகாரத்தை, முப்பது நிமிடங்களுக்கு பிறகு மணி அடிக்கும்படியாக அதை பொருத்திக் கொண்டு, அல்லது மிஞ்சினால் நாற்பது நிமிடங்களுக்கு அதிகமாக இல்லை; அந்த செய்தியை அந்த நேரத்துக்குள் இருதயத்தில் ஊடுருவும்படியாக பிரசங்கித்து, பீட அழைப்பை.... அல்லது நான் என்ன செய்யப்போகிறேனா அதை, ஜெப வரிசையை அழைக்கப் போகிறேன். நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்போவதில்லை. ஏனெனில் அது ஜனங்களைக் களைப்படையச் செய்கிறது, அது உங்களுக்குத் தெரியும்.
83ஆனால் இங்கு பாருங்கள், இந்த ஆண்டு, எழுந்து வெளியே நடந்து சென்ற ஜனங்களின் எண்ணிக்கை ஒரு டஜன் இல்லை என்று நினைக்கிறேன், நான் ஜனங்களை சில சமயங்களில் இரண்டு மூன்று மணி நேரம் பிடித்து வைத்திருக்கிறேன். பாருங்கள்? அது உண்மை. ஏனெனில் உலகம் பூராவும் செல்லும் பிரசங்க ஒலிநாடாக்களை நாம் இங்கு தயாரிக்கிறோம். அங்குள்ள ஜனங்கள் மணிக் கணக்காக உட்கார்ந்து அதைக் கேட்கின்றனர்; ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆப்பிரிக்கா, ஆசியா, இன்னும் மற்ற இடங்களில்லுள்ள போதகர்களும் மற்றவர்களும், பாருங்கள், அதைக் கேட்கின்றனர்.
ஆனால், பாருங்கள், பிரகாரத்துக்கும், சபைக்கும்... அது பரவாயில்லை. இங்கு நீங்கள் பிரசங்க ஒலிநாடாவை தயாரிக்க நினைத்து, உங்களிடம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய ஒலிநாடா இருக்குமானால், அதில் இரண்டு மணி நேரம் செய்தியை பதிவு செய்யுங்கள்; ஆனால் ஏதாவது ஒரு நோக்கத்துக்காக நீங்கள் பிரசங்க ஒலிநாடாவை தயாரிக்கவில்லை என்றால், செய்தியை சுருக்கிக் கொள்ளுங்கள். ஏன் என்று கூறுகிறேன், சிலர் வேகமாக திருப்தி கொள்வார்கள், ஆனால் சிலர் இப்படிப்பட்ட நீண்ட பிரசங்கங்களில் மட்டுமே திருப்தி கொள்வார்கள், எனவே நீங்கள் இவ்விரண்டிற்கும் இடையே உள்ள நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
84இப்பொழுது, சில நேரங்களில், நாம் சாட்சி கூட்டத்தை நீட்டி நமது ஆராதனைகளை பாழாக்கி விடுகிறோம், நானும் கூட இவ்விதம் செய்து, அதற்கு குற்றவாளி என்பதை அறிந்திருக்கிறேன். நாங்கள் தெருக்கூட்டம் முன்பு நடத்தினபோது, ஒரு வயோதிப சகோதரனிடம் ஜெபம் செய்யக் கேட்டுக் கொள்வோம். அவர் நகராண்மைத் தலைவருக்கும், மாகாண ஆளுநருக்கும், நாட்டின் ஜனாதிபதிக்கும், சுற்றியுள்ள போதகர்களுக்கும், அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் சொல்லி ஜெபம் செய்வார், பிறகு மருத்துவமனையிலுள்ள சகோதரி ஜோன்ஸக்காக, இப்படி பலருக்காக, கூட்டத்திற்கு வந்த தெருவிலுள்ள ஜனங்கள் நடந்து சென்று விடுவார்கள். பாருங்கள். பாருங்கள், அவர் அவர்களைக் களைப்படையச் செய்து விடுவார். நல்லது, ஒரு ஜெபம் மட்டுமே...
பாருங்கள், முக்கியமான காரியம் என்னவெனில், உங்கள் ஜெபம் அந்தரங்கத்தில் செய்யப்பட வேண்டும் - உங்கள் முக்கியமான, நீண்ட ஜெபம். உங்கள் ஜெபம் அனைத்தும்... நீங்கள் அறைக்குச் சென்று கதவையடைத்துக் கொள்ளுங்கள், அங்கு தான் நீங்கள் பகல் முழுவதும், இரவு முழுவதுவும், அல்லது இரண்டு மணி நேரம் ஜெபிக்க வேண்டும். ஆனால் இங்கு, உங்களிடம் ஜனங்களின் கவனம் உள்ளபோது, சுருக்கமாக, ஜெபம் செய்யுங்கள். உங்கள் ஆராதனை அனைத்தையும்.... பெரும்பாலான உங்கள் ஆராதனை நேரத்தை அந்த வார்த்தையை பிரசங்கிப்பதில் செலவிடுங்கள். அது தான் முக்கியமான காரியம்! அந்த வார்த்தையை உங்களால் கூடுமானவரைக்கும் ஊடுருவும் வல்லமையுடன் பேசி, பாருங்கள், ஜனங்களுக்கு வார்த்தையை எடுத்துரையுங்கள்.
85இப்பொழுது, இதுவே நான் கூறும் ஆலோசனை. இப்பொழுது, இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இந்த குற்றத்தை நானே செய்திருக்கிறேன் என்று அறிக்கையிட்டேன். நான் ஏன் இதை செய்தேன் என்றும் உங்களுக்கு எடுத்துக் கூறினேன். வெளிநாடுகளில் எல்லாவிடங்களுக்கும் அனுப்ப நான் இரண்டு மணி நேரம் பிரசங்கிக்கப்பட்டு ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுவதை மாதிரியாக எடுத்துக் கொண்டு அதை பின்பற்றக் கூடாது.
இப்பொழுது, இதுவே நீங்கள் கடைபிடிக்கும் ஒழுங்காக இருக்க வேண்டும். ஒரு உதாரணத்தை அளிக்க விரும்புகிறேன். நான் ஒரு ஆலோசனை கூறினால் பரவாயில்லையா? சபையானது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டு, சபையோர் உள்ளே வரவேண்டும். பாடல்கள் இசைக் கருவியில் வாசிக்கப்படட்டும். எல்லோரும் தொழுது கொள்ள இங்கு வரட்டும், ஒருவரையொருவர் சந்திக்க அனுமதிக்காதீர்கள். ''நீங்கள் வெளியே செல்லுங்கள். ஒருரையொருவர் இங்கு சந்திக்காதீர்கள். சந்திக்க விரும்பினால், உங்களுக்கு சபைக்கு வெளியே உள்ள ஸ்தலம் முழுவதும் உள்ளது. ஆனால் இது தேவனுடைய பிரகாரம், இது சுத்தமாக வைக்கப்படட்டும்,'' என்று கூறுங்கள். இங்கு கர்த்தருடைய ஆவி நம்முடன் இடைபடுமானால், அந்த ஆவியை நாம் காத்துக் கொள்வோம். பாருங்கள்? அது அசைவாடிக் கொண்டிருக்கும். நீங்கள் காத்துக் கொள்ளவில்லையென்றால், அது போய்விடும். அது நிச்சயமாக போய்விடும். அதை நாம் காத்துக் கொள்வோம், அது நம்முடைய கடமை. அதற்காவே இன்றிரவு நான் இங்கு வந்திருக்கிறேன். இவைகளை ஒழுங்கின்படி கடைபிடிப்போம்.
86இப்பொழுது பாருங்கள், இதைக் கூற விரும்புகிறேன். வழக்கமாக, நாம் விசேஷித்த பிரசங்கம் செய்தாலொழிய... ஒரு செய்தியை நீங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்யப் போவதாக அவர்களிடம் கூறுங்கள். பாருங்கள்? சகோ. நெவிலிடம் ஒரு செய்தி இருக்கும் பட்சத்தில்... அந்த செய்தியை ஒலிநாடாவில் பதிவு செய்து அவர் ஜனங்களுக்கு அனுப்ப விரும்பினால், ''அடுத்த ஞாயிறு இரவன்று நாங்கள் இரண்டு மணி நேரம் ஒலிநாடாவில் செய்தியை பதிவு செய்யப் போகிறோம், ''மூன்று மணி நேரம் அல்லது எதுவானாலும், ''அடுத்த ஞாயிறு இரவு'' என்று ஜனங்களுக்கு அறிவித்து விடுங்கள். அப்பொழுது அவர்கள் அறிந்து கொள்வார்கள். அதன் பிறகு ஜனங்கள் வரும் போது, “இன்றிரவு நாங்கள் ஒரு செய்தியை ஒலிநாடாவில் பதிவு செய்யப் போகிறோம். இங்கு என்னிடம் ஒரு செய்தி உள்ளது. அதை ஒலிநாடாவில் பதிவு செய்து அனுப்ப நான் ஏவப்படுகிறேன். நான்... இந்த செய்தியை வெளியே அனுப்ப நான் ஏவப்படுகிறேன். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படும். இது இரண்டு மணி நேரம் எடுக்கும், அல்லது மூன்று மணி நேரம் அல்லது எதுவானாலும், அதை கூறி விடுங்கள்.
ஆனால், வழக்கமாக, வர்த்தகரின் கூட்டங்களைப் போன்ற இடங்களுக்கு செல்லும்போது நான் செய்வது போல், அல்லது ஜெபவரிசை அமைக்கவிருக்கும் கூட்டங்களில் நான் செய்வதுபோல; வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதற்கு முன்பு அன்றிரவு நான் மூன்று மணி நேரம் செய்தி ஒன்றை அளித்தால், அது என்னை என்ன நிலையில் ஆழ்த்தி விடும் என்று பாருங்கள். பாருங்கள்? அடுத்த நாள் இரவு சபையோரில் பாதி பேர் மாத்திரமே வருவார்கள். பாருங்கள்? ஏனெனில் அவர்களால் முடியாது, அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், மற்றவைகளைச் செய்ய வேண்டும்.
87இதை ஆலோசனையாகக் கூறுகிறேன். வழக்கமாக நேற்றிரவு சகோ. நெவில் பிரசங்கித்த போது கவனித்தேன். இப்பொழுது, நானறிவேன் நாமெல்லோரும்.... அது திடுக்கிடச் செய்யும் ஒரு செய்தி. நான் குறிப்புகள் எழுதிக் கொண்டேன், அது இங்கு என் சட்டைப்பை, பாக்கெட்டில் உள்ளது, அதை என் செய்திகளில் உபயோகிக்கலாம். அது உண்மை. தப்பிக்க வழி, பாருங்கள், அது ஒரு அற்புதமான செய்தி. அதை அவர் எவ்வளவு வேகமாக முடித்து விட்டார், பார்த்தீர்களா? பாருங்கள், ஏறக்குறைய முப்பத்தைந்து நிமிடங்கள், பாருங்கள், அதை முடித்து விட்டார். பாருங்கள்? அது மிகவும் நல்லது. சகோ. நெவிலின் செய்திகள் வழக்கமாக அவ்விதமாகவே உள்ளன. பாருங்கள், அது நீண்ட செய்தியல்ல. பாருங்கள்? ஆனால் உங்கள் கூட்டத்தை நீங்கள் எங்கு கொன்றுபோட்டு விடுகிறீர்கள் என்றால், செய்திக்கு வருவதற்கு முன்பு உள்ள நீண்ட ஆராதனையே. பாருங்கள்?
இப்பொழுது, நீங்கள் அவ்விதம் செய்யும் போது... இப்பொழுது, எனக்குத் தெரியும், இப்பொழுது பாருங்கள், உங்கள் தர்மகர்த்தாக்களையோ, டீக்கன்மார்களையோ அல்லது போதகரையோ அவமானப்படுத்த இதை நான் கூறவில்லை. ஆனால் உண்மை எதுவோ அதையே உங்களிடம் கூறுகிறேன். இப்படித்தான் அது இருக்க வேண்டும். இப்பொழுது, நீங்கள்... அதை செய்வது எதுவென்றால், இப்பொழுது, நீங்கள் அனைவரும் நல்ல சுபாவம் படைத்தவர்கள். அப்படி இல்லாமல் போனால் நான், ''சகோ. இன்னார் இன்னார் நல்ல சுபாவம் படைத்தவர் அல்ல, மற்றவர் அனைவரும் நல்ல சுபாவம் கொண்டவர்கள். அவருக்காக நாம் அனைவரும் ஜெபிப்போம்'' என்று கூறியிருப்பேன். ஆனால் நீங்கள் நல்ல சுபாவம் கொண்டவர்கள். உங்களுக்கு நீடிய பொறுமை, சாந்த குணம், அமைதியான குணம் போன்றவை உள்ளன. ஆனால் அதன் காரணமாக பெண்மைத்தனம் படைத்தவர்களாய் இருக்க வேண்டாம்.
88இயேசு நல்ல சுபாவம் படைத்தவராயிருந்தார். ஆனால் தருணம் வந்தபோது, அவர், “என்னுடைய பிதாவின் வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறதே, நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்,'' என்றார் பாருங்கள்? அவர் எப்பொழுது பேச வேண்டும், எப்பொழுது பேசாதிருக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தார். அதைத்தான் நாமும் செய்ய வேண்டும். பாருங்கள்? இயேசுவைப் போல் எவருமே இருந்ததில்லை. அவர் தேவன். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், அவர் சபையிலுள்ள டீக்கன் உத்தியோகத்தை அவர் வகித்தார். அவர் சில கயிறுகளைப் பின்னினார். அவர் இனிமையாகப் பேசி அவர்களை வெளியே அனுப்பவில்லை, அவர் காத்திருக்க அவர்களை சாட்டையால் அடித்து தேவனுடைய வீட்டிலிருந்து வெளியே துரத்தினார் (பாருங்கள்?). அவர் டீக்கனின் உத்தியோகத்தை அப்பொழுது வகித்து, டீக்கன்மார்களாகிய உங்களுக்கு உதாரணமாயிருந்தார். பாருங்கள், அவரே உங்களுக்கு மாதிரி. ''என்னுடைய பிதாவின் வீடு ஜெபவீடு என்று எழுதியிருக்கிறதே. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், இயேசு அங்கு டீக்கனாக இருந்தார், அது உங்களுக்குத் தெரியும். அவர் டீக்கனின் பாகத்தை அப்பொழுது வகித்தார்.
அவர் போதகரின் பாகத்தை வகித்த போது என்ன கூறினார்? “குருடரான பரிசேயரே, குருடருக்கு வழி காட்டும் குருடர்களே” என்றார். பாருங்கள், அப்பொழுது அவர் போதகரின் பாகத்தை வகித்தார்.
நடக்கப் போவதை அவர் அவர்களுக்கு முன்னுரைத்த போது, அவர் தீர்க்கதரிசியின் பாகத்தை வகித்தார். பாருங்கள்?
வரிப்பணம் செலுத்தப்பட வேண்டும் என்னும் நிலை ஏற்பட்ட போது, அவர் தர்மகர்த்தாவின் பாகத்தை வகித்து, “பேதுருவே, நீ போய் ஆற்றில் தூண்டிலைப் போடு. நீ பிடிக்கும் முதல் மீனின் வாயில் ஒரு நாணயம் இருக்கும். அதை எடுத்து உன் நியாயமான கடன்களை அவர்களுக்கு செலுத்திவிடு என்றார். அவர் ''இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்'' என்றும் கூறினார்.
89அவர் ஒருங்கே போதகர், தீர்க்கதரிசி, தர்மகர்த்தா, டீக்கனாக இருந்தார். அவர் நிச்சயமாக இருந்தார்! எனவே பாருங்கள், அவர் என்ன செய்தாரோ அதுவே பிரன்ஹாம் கூடாரத்துக்கு உதாரணமாக அமைந்திருக்கட்டும். இந்த ஜெப வீடு எல்லா வகையிலும், எல்லா உத்தியோகத்திலும், எல்லா விதங்களிலும், எவ்வித ஒப்புரவாகுதலுமின்றி அவருக்கு கனத்தைச் செலுத்தும் வீடாக இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். இங்கு சாந்த குணம், இனிமை, தயவு காணப்பட வேண்டும். இருப்பினும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கடமையைச் சரிவர செய்யக்கடவன். பாருங்கள்? அவ்விதமாக இருக்க வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். அவர் தயங்கவேயில்லை. எது எதுவென்று நேரடியாக கூற வேண்டிய தருணம் வந்த போது அவர் கூறினார். சாந்த குணம் காண்பிக்க வேண்டிய நேரம் வந்தபோது, அவர் சாந்த குணம் காண்பித்தார். அவர் இனியவராயும், தயவுள்ளவராயும், புரிந்து கொள்ளும் தன்மையுடையவராயும் இருந்தார். ஆனால் அதே சமயத்தில் அவர் கண்டிப்பாக இருந்தார். எல்லாமே அவருக்கு கிரமமாக செய்யப்பட வேண்டும். அவர் அதை உங்களுக்கு திருஷ்டாந்தமாக செய்து காண்பித்தார். பரிசுத்த ஆவியானவர் அந்த கருத்தை இப்பொழுது தான் எனக்களித்தார். இதற்கு முன்பு, அவர் டீக்கனாக இருந்தார் என்பது என் சிந்தனையில் எழவில்லை. அவர் டீக்கனாக இருந்தார். பாருங்கள்? அவர் டீக்கனின் உத்தியோகத்தை வகித்தார்.
90இதைக்கூற விரும்புகிறேன். உங்கள் ஆராதனை ஏழரை மணிக்கு தொடங்கினால், உங்கள் சபையை அரை மணி நேரத்துக்கு முன்பு, ஏழு மணிக்கே திறந்து விடுங்கள். பியானோ இசைப்பவர்... ஆர்கன் இசைப்பவர்களிடம் கூறுங்கள்... அவளுக்கு நீங்கள் சம்பளம் கொடுக்கிறீர்களா? நீங்கள் ஆர்கன் இசைப்பவளுக்கு சம்பளம் கொடுக்கிறீர்களா? அவளுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறதா, அந்த பியானோ இசைப்பவளுக்கு. அவள் இலவசமாக அதை செய்கிறாள். அவளை தயவாய் கேட்டுக் கொள்ளுங்கள். அவள் சம்பளம் பெறவிரும்பினால், அவளுக்கு சம்பளம் ஏதாவது கொடுங்கள். ஆராதனை தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு வரும்படி அவளிடம் கூறுங்கள். அவள், ''என்னால் முடியாது'' என்று சொல்லிவிட்டால், அவளை இங்கு அழைத்து வந்து, இனிமையான ஆர்கன் இசையை ஒலிநாடாவில் பதிவு செய்து கொள்ளுங்கள். பாருங்கள்? அது.... ஒலிநாடாவைப் போடுங்கள்... அவள் ஒவ்வொரு முறையும் இங்கு இருக்க வேண்டியதில்லை, உங்கள் ஒலிநாடாவை போடுங்கள். பாருங்கள்? டீக்கன்மார்களில் ஒருவர், அல்லது வாயிற்காப்போன், அந்த ஒலிநாடாவைப் போடட்டும். ஜனங்கள் உள்ளே வரும்போது, அந்த ஒலிநாடா இயங்கிக் கொண்டிருக்கட்டும். பாருங்கள்? இதைச் செய்ய டீக்கன்மார்கள் இங்கு இல்லையென்றால், தர்மகர்த்தாக்கள், அல்லது வேறுயாராகிலும் அதை செய்யட்டும். அவர்கள் அதை அரை மணி நேரம் இயக்கட்டும்.
ஆனால் சரியாக ஏழரை மணிக்கு, சபை கட்டிடத்தின் மேலுள்ள மணி ஒலிக்கட்டும். பாருங்கள்? மணி இப்பொழுதும் அங்குள்ளதா? ஆம். சரி. உங்கள் மணி சரியாக ஏழரை மணிக்கு ஒலிக்கட்டும். அதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் சபையில் மேலும் கீழும் நடந்து சென்று ஜோன்ஸ் குடும்பத்தாரிடமும் மற்றவர்களிடம் கைகுலுக்கக் கூடாது என்பதே. பாடல் தலைவர் அவர் வேலையை செய்யட்டும். அங்கு பாடல் தலைவர் இல்லையென்றால், டீக்கன்மார்கள்.... அல்லது.... மணி ஒலிக்கும்போது பாடல்களை முன்னின்று நடத்த யாரையாகிலும் ஆயத்தம் செய்யட்டும். ''இப்பொழுது நாம் பாடல் புத்தகத்தில் இந்த எண்ணுக்கு திருப்புவோம்'' பாருங்கள்? அது சரியாக ஏழரை மணிக்கு தொடங்கட்டும்.
91சரி, அதன் பிறகு சபையோர் ஒரு பாடலை பாடட்டும், வேண்டுமானால், சபையோர் இன்னும் ஒரு பாடலும் பாடலாம். அதன் பிறகு ஜெபம் செய்ய நீங்கள் முன்கூட்டியே அறிவித்த ஒருவர் (உங்களால் முடிந்தால்) ஜெபத்தில் நடத்தட்டும். போதகர்... போதகர் அங்கிருக்கக் கூடாது, பாடல் தலைவர் அதை செய்யவேண்டும். அது சகோதரன் காப்ஸ் என்று நினைக்கிறேன், பாருங்கள். என்ன செய்ய வேண்டுமென்று அவருக்குத் தெரியும். அவர் யாரிடமாவது முன்கூட்டி அறிவித்து... அல்லது அவரே ஜெபத்தில் நடத்தலாம். ஜெபம் செய்யும்போது, சபையோர் நிற்கும்படி கூறுங்கள், பாருங்கள், அவர்கள் எழுந்து நிற்கட்டும். யாராகிலும் ஒருவர் ஜெபத்தில் நடத்தட்டும். இப்பொழுது, நீங்கள் கவனமாயிராவிட்டால்.....
எல்லோரும் தேவனுடைய வீட்டுக்கு வந்து ஜெபிக்கவேண்டும் என்று நாம் விசுவாசிக்கிறோம். அது ஜெபவீடு. ஆனால் நீங்கள் அந்த பிரகாரத்தில் இருக்கும் போது, உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள். பாருங்கள்? ஜெபத்திற்கென நீங்கள் அழைப்பவர் யாராகிலும் பதினைந்து இருபது நிமிடங்கள் எடுத்துக்கொண்டால், உங்கள் நேரம் ஓடிவிடும்.
92உங்கள் பாருங்கள், உங்கள் ஜெபம் வீட்டில் செய்யப்பட வேண்டும். இயேசு,
'நீ ஜெபம் பண்ணும்போது, மாயக்காரரைப் போல் நின்று கொண்டு... நீண்ட ஜெபம் பண்ணி, இதை, அதை, மற்றதை கூறாதே. அவர்கள் மனுஷர் காணும்படியாக அவ்விதம் செய்கிறார்கள். நீ ஜெபம் பண்ணும்போது... உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து இரகசிய அறைக்குள் கதவைப்பூட்டி, உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாக உனக்குப் பலனளிப்பார்“ என்றார்.
இப்பொழுது, அவ்விதமாகவே அந்தரங்க ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும். அவ்விதம் செய்யவே அவர் கூறினார்.
ஆனால் நீங்கள்; யாராகிலும் ஜெபம் பண்ண வரும்போது, பாடல் தலைவர், ''சரி...'' என்று கூறட்டும். முதலாம் பாடல் பாடி முடிந்த பின்பு, யாராகிலும் ஒருவர் ஜெபம் செய்யட்டும் - சுருக்கமான ஜெபம். அங்கு நின்று கொண்டு ஆளுநர்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஜெப விண்ணப்பங்கள் ஏதாகிலும் இருக்குமானால், அதை தெரியப்படுத்துங்கள். அதை எழுதி, ''இதோ என் ஜெப விண்ணப்பம்'' என்று அனுப்புங்கள். “இன்றிரவு, நாம் ஜெபிக்கும் இந்த நேரத்தில், சகோதரி இன்னார் இன்னாரை, மருத்துவமனையிலுள்ள சகோ. இன்னார் இன்னாரை, இன்னார் இன்னாரை, இன்னார் இன்னாரை மற்றும் இன்னார் இன்னாரை நினைவு கூருவோம். நீங்கள் ஜெபிக்கும்போது, உங்கள் ஜெபத்தில் இவர்களை நினைவு கூருங்கள். சகோ. ஜோன்ஸ், எங்களை இப்பொழுது ஜெபத்தில் நடத்துவீரா? நாம் எழுந்து நிற்போம்.'' பாருங்கள்? ஜெப விண்ணப்பங்கள் மேடையின் மீதுவைக்கப்பட வேண்டும். அவர்களிடம் அதைப்பற்றி கூறுங்கள், அவர்களிடம் அதைப்பற்றி கூறுங்கள், அவர்களுக்கு அந்த பழக்கம் வரட்டும். ”உங்களுக்கு ஜெப விண்ணப்பம் இருக்குமானால், அதை எழுதி இங்கு வையுங்கள். நீங்கள் அதை பேசி தெரிவிக்கும்படி செய்யாதீர்கள். இப்பொழுது உங்களுக்கு ஜெப விண்ணப்பம் இருந்தால், அதை எழுந்து தெரிவியுங்கள்...'' என்று கூறுவீர்களானால், முதலாவதாக, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று, “தேவனுக்கு மகிமை! உங்களுக்குத் தெரியுமா...'' என்று தொடங்கி, சில நேரங்களில் அரை மணிநேரம் எடுத்துக்கொண்டு அதன் பிறகு உட்காருகின்றனர். பாருங்கள்?
நாமே இந்த சபைக்கு பொறுப்பாளிகள், மற்றவர் அல்ல. இது தேவனுக்கு நாம் கொண்டுள்ள பொறுப்பு. நீங்கள் வகிக்கும் இந்த உத்தியோகங்கள் தேவனிடம் உங்களை பொறுப்பாளிகளாகச் செய்கிறது. பாருங்கள்? இன்றிரவு இங்கு நான் நின்று கொண்டு இதைக்கூறக் காரணம், தேவனுக்கு எனக்குள்ள பொறுப்பே. இதை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பு. பாருங்கள்?
93இப்பொழுது, அப்படி ஏதாவதொன்று.... யாராகிலும் ஒருவர் ஜெபத்தில் நடத்தட்டும், அது நல்லது. அவர்கள் ஜெபத்தில் நடத்திவிட்டு, பிறகு சென்று உட்கார்ந்து கொள்ளட்டும்.
உங்களுக்கு விசேஷித்த... இதைக்கூறி, ஆராதனையை நீட்ட விரும்பவில்லை... யாருக்காகிலும் விசேஷித்த பாடல்கள் பாட விருப்பம் இருக்கக் கூடும். சபையில் இவ்வாறு அறிவியுங்கள். “விசேஷித்த பாடல்கள் பாட விரும்புவோர், ஆராதனை தொடங்குவதற்கு முன்பு பாடல் தலைவரிடம் தெரியப்படுத்துங்கள்.'' அதைக் குறித்துக் கொண்டு.... ''சகோதரனே, நான் வருந்துகிறேன். எனக்குப் பிரியம் தான்.... அதை செய்ய எனக்கு நிச்சயம் பிரியம். ஆனால் இன்றைய இரவுக்கான விசேஷித்த பாடல்கள் ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டது. ஒரு குறிப்பிட்ட இரவு நீங்கள் வருவீர்கள் என்று கூறினால், அன்றைய நிகழ்ச்சி நிரவில் உங்கள் பெயரை சேர்த்துக் கொள்கிறேன். பாருங்கள், இன்றைக்கான நிகழ்ச்சி நிரல் எழுதப்பட்டுவிட்டது'' என்று கூறுங்கள்.
94சகோ. காப்ஸ் அல்லது பாடல் தலைவர் யாராகிலும் பாடல் தலைவர் ஒருவர் இருக்க வேண்டும், அது யாராயிருந்தாலும் பரவாயில்லை. போதகர் அங்கு நின்று கொண்டு .... பாடல்களை அறிவித்து அதிக பொறுப்புகளை வகிக்க வேண்டாம். அவர் போதகர், பாருங்கள், பாடல் தலைவர் அங்கு நின்று கொண்டு பாடல்களை நடத்தட்டும். அது அவருடைய வேலை.
போதகரின் வேலை பிரசங்கம் செய்வது, பாருங்கள், பாடல்களை நடத்துவதல்ல. அவர் பாடல்களை நடத்தக்கூடாது, பாடல் தலைவர் பாடல்களை நடத்த வேண்டும். போதகர் செய்தியை அளிக்கும் பொறுப்பை பெற்றுள்ளவர். அவருடைய நேரம் வரும்போது, அவர் அலுவலகத்திலிருந்து அல்லது வேறெதாவது இடத்திலிருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவராய் புத்துணர்ச்சியுடன் வரவேண்டும். பாடல்கள் பாடும்போது, அவர் மேடையின்மேல் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர் அங்கே அலுவலகத்தில், அல்லது இங்கே எங்காவது ஓரிடத்தில் தங்கியிருக்கட்டும். அறைகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகள் (intercoms) ஆராதனையில் நடந்து கொண்டிருப்பதை அவரிடம் கொண்டு வரும். பாருங்கள்? நேரம் வரும்போது, அவர் கடைசி பாடலைக் கேட்கும் போது... மூன்றாவது பாடலாக ஒரு விசேஷித்த பாடல், உதாரணமாக தனியாகப்பாடுதல், அல்லது இரண்டு பேர் பாடுதல், பாடப்படும் போது. பாருங்கள்?
சபையோர் இரண்டு பாடல்களைப் பாடுகின்றனர், ஜெபம், காணிக்கை (நீங்கள் எடுப்பீர்களென்றால்). ஒவ்வொரு மனிதனும் தன் வேலையில் நிலை கொண்டிருக்கட்டும். இந்த கடைசி பாடலை நாம் இப்பொழுது பாடும்போது, மாலை காணிக்கை எடுக்க வாயிற்காப்போர் முன் வாருங்கள்'' என்று கூறுங்கள். பாருங்கள்? முதலாம் பாடல் பாடி முடிந்தவுடன், வாயிற்காப்போர் தங்கள் இடங்களில் நின்று கொண்டிருக்கின்றனர். சரி, இப்பொழுது நாம் ஜெபம் செய்யப்போகிறோம்'' என்று அறிவியுங்கள். “நாம் இன்னார் இன்னார், இன்னார் இன்னாரை நினைவுகூர விரும்புகிறோம்'' என்று சொல்லி அந்த பெயர்களைப் படியுங்கள். ''சரி, எல்லோரும் எழுந்து நில்லுங்கள். சகோதரனே, எங்களை ஜெபத்தில் நடத்துவீரா?'' பிறகு அது முடிந்து விடுகிறது.
95பிறகு அவர்கள் இரண்டாம் பாடலைப் பாடும்போது, அல்லது நீங்கள் எவ்விதமாகப் பாடினாலும்... நீங்கள் காணிக்கை எடுக்க விரும்பினால், காணிக்கை எடுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள்... அல்லது முதலில் பாடல், அதன் பிறகு மாலை காணிக்கை, பிறகு இரண்டாம் பாடல், இப்படியாக நடத்துங்கள். பிறகு உங்கள் கடைசி பாடல்.... உங்கள் கடைசி பாடல், பாருங்கள், போதகருக்கு அழைப்பாக அமையட்டும். கடைசி பாடல் பாடி முடிந்தவுடன், ஆர்கன் மாத்திரம் இசைத்துக் கொண்டிருக்கட்டும். அப்பொழுது போதகர் வருகிறார். பாருங்கள், எல்லாமே ஒழுங்காக அமைந்துள்ளது, எல்லோருமே அமைதியாயுள்ளனர். வேறொன்றுமே அங்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு டீக்கனும் தன் இடத்தில் நின்று கொண்டிருக்கிறார். போதகர் அங்கு நின்று கொண்டிருக்கிறார்.
அவர் உள்ளே வந்து, சபையோருக்கு வாழ்த்துதல் கூறி, வேதாகமத்தை திறந்து, “இன்றிரவு நாம் வேதாகமத்திலிருந்து ஒரு பாகத்தை வாசிக்கப் போகின்றோம். ''பாருங்கள், அவ்வாறு கூறி அந்த பாகத்தை எடுத்த பின்பு, ''தேவனுடைய வார்த்தைக்கு மரியாதை செலுத்தும் வகையில், வேத வசனத்தைப் படிக்கும்போது நாம் எழுந்து நிற்போம்,'' என்று சொல்வது நல்லது. பாருங்கள், ”இன்றிரவு நான் சங்கீதங்களின் புத்தகத்திலிருந்து படிக்கிறேன்'' அல்லது எந்த பாகமோ அதை அறிவியுங்கள். அல்லது வேறு யாராகிலும், பாடல் தலைவரோ அல்லது உங்களுடன் இருக்கும் கூட்டாளி எவராகிலும் வேத பாகத்தை வாசிக்கலாம். ஆனால் நீங்கள் அதை வாசித்தால் மிகவும் நல்லது. அதை படித்த பின்பு, பிரசங்கத்துக்கான உங்கள் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். பாருங்கள்? அவ்வளவு நேரம், நீங்கள் மொத்தம் முப்பது நிமிடங்கள் செலவழித்திருப்பீர்கள். அப்பொழுது ஏறக்குறைய எட்டு மணி ஆயிருக்கும்.
96எட்டு மணி தொடங்கி ஏறக்குறைய எட்டே முக்கால் மணி வரை முப்பது நிமிடங்களிலிருந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை பரிசுத்தஆவி உங்களுக்கு அளிக்கும் விதமாக (பாருங்கள்?) வார்த்தையைப் பிரசங்கியுங்கள். அபிஷேகத்தின் கீழ் அவர் என்ன செய்யக் கூறுகிறாரோ, அதே விதமாக அதை சபையோருக்கு அளியுங்கள்.
அதன் பிறகு பீட அழைப்பைக் கொடுங்கள். ''சபையிலுள்ள யாராகிலும் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்பினால், பீடத்தண்டை வரும்படி உங்களை அழைக்கிறோம், எழுந்து நில்லுங்கள்,'' என்று கூறுங்கள். பாருங்கள்?
யாரும் எழுந்து நிற்காவிட்டால், ''ஏற்கனவே மனந்திரும்பி, பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம்பெற்றுக்கொள்ள தங்களை ஞானஸ்நானத்துக்கு ஒப்புக் கொடுக்க விரும்புவோர் யாராகிலும் உண்டா? நீங்கள் வர விரும்பினால், உங்களுக்கு இப்பொழுது நாங்கள் தருணம் அளிக்கிறோம். ஆர்கன் இசைத்துக் கொண்டிருக்கும் போது, வாருங்கள்,'' என்று சொல்லுங்கள். பாருங்கள்?
யாரும் வராமல்போனால், “பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமலிருந்து, அதைப் பெற்றுக் கொள்ள நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று விருப்பமுடையோர் இன்றிரவு யாராகிலும் உண்டா?'' என்று கேளுங்கள். ஒருக்கால் யாராகிலும் வரக்கூடும். அப்பொழுது இரண்டு அல்லது மூன்று பேர் அவர்கள் மேல் கைகளை வைத்து அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்களை அங்குள்ள அறைகளில் ஒன்றுக்கு அனுப்பிவிடுங்கள், யாராகிலும் ஒருவர் அவர்களுடன் கூடசென்று, பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக் கொள்வது என்பதைக் குறித்து உபதேசிக்கட்டும். சபையோர் இவர்களிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
97கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புவோர் யாராகிலும்... ஜெபித்துக் கொள்ள பீடத்தண்டை நின்றிருந்தால் நீங்கள்... அவர்களுக்காக ஜெபியுங்கள். ஜெபிக்கும் தருணத்தில், உங்கள் தலைகளை இப்பொழுது வணங்குங்கள். நாங்கள் ஜெபிக்க போகின்றோம்'' என்று சொல்லுங்கள். ''நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?'' என்று அவர்களைக் கேளுங்கள்.
ஏதாகிலும் ஒரு வகையில் சபையோரைத் தாமதப்படுத்தும் ஒரு சிறு காரியம் நடக்க வேண்டுமென்றால், அவர்களை ஜெப அறைக்கு அனுப்பிவிடுங்கள், நீங்களும் அவர்களுடன் செல்லுங்கள், அல்லது வேறு யாரையாகிலும் அனுப்புங்கள். சபையோர் தொடர்ந்து ஆராதனையில் பங்கு கொள்ளட்டும். பாருங்கள், அவ்விதம் செய்வதனால், நீங்கள் எவ்வகையிலும் அவர்களைத் தாமதப்படுத்த மாட்டீர்கள். பாருங்கள்?
அதன் பிறகு... அதற்கு முன்பு.... இன்னும் சில நிமிடங்களில் யாரும் வராமல்போனால், ''வியாதிக்காக எண்ணெய்ப்பூசி ஜெபம் செய்யப்பட விரும்புவோர் யாராகிலும் உண்டா? நாங்கள் வியாதியஸ்தருக்காக இங்கு ஜெபிக்கிறோம்,'' என்று அறிவியுங்கள்.
''சகோ. நெவில், உங்களைத் தனியாக காண விரும்புகிறேன்''... ''நல்லது, என்னை அலுவலகத்தில் வந்து காணுங்கள். டீக்கன்மார்களில் ஒருவர் இந்த விஷயத்தை கவனித்துக் கொள்வார்கள்.'' பாருங்கள்? ''சகோதரனே, உங்களிடம் சிலவற்றை கூறவேண்டும்.'' ''நல்லது, டீக்கன்மார்களில் ஒருவர் உங்களை அலுவலகத்துக்கு அழைத்து வருவார், நாம் ஆராதனை முடிந்தவுடனே உங்களை சந்திக்கிறேன்.''
98“இப்பொழுது ஆராதனையை முடிக்க நாம் எழுந்து நிற்போம்.'' பாருங்கள், முழுவதுமே ஒன்றே முக்கால் மணி நேரத்துக்கு மேல் எடுக்காது. பாருங்கள்? பாருங்கள், ஒன்றரை மணி நேரத்தில் உங்கள் ஆராதனை முடிந்து விடுகிறது. நீங்கள் ஒரு செய்தியை வேகமாக ஊடுருவும் வல்லமையோடு பேசுகிறீர்கள். நீங்கள் அவ்விதம் செய்யும்போது, எல்லோருமே திருப்தியடைந்தவர்களாய் நல்லுணர்வுடன் வீடு திரும்புகின்றனர். பாருங்கள்? நீங்கள் அவ்விதம் செய்யாமல்போனால், பாருங்கள், நீங்கள்.... பாருங்கள், நீங்கள் நல்லெண்ணத்துடன் தான் செய்கிறீர்கள். பாருங்கள், ஆனால் பாருங்கள்....
பாருங்கள், நான் இந்த மேடையின் மேலும், உலகம் முழுவதிலும் ஏறக்குறைய முப்பத்து மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்திருக்கிறேன். இந்த நீண்ட காலத்தில் நிச்சயமாக சிறிதளவாவது கற்றுக்கொள்ள முடியும். பாருங்கள்? அவ்விதம் கற்றுக்கொள்ளாமல் போனால், இதை விட்டு விலகுவது நலம். எனவே, பாருங்கள், இதை நான் கண்டு கொண்டேன். நீங்கள் பரிசுத்தவான்களுடன் மாத்திரம் தொடர்பு கொள்ள நேரிட்டால், வேண்டுமானால், இரவு முழுவதும் கூட அதில் நிலைத்திருக்கலாம். ஆனால் நீங்கள்.... பாருங்கள், அவர்களுடன் மாத்திரம் நீங்கள் ஈடுபடுவதில்லை, வெளியிலுள்ள மற்றவர்களையும் நீங்கள் பிடிக்க முயல்கிறீர்கள். அவர்களை பிடிக்க நீங்கள் அவர்களுடைய ஊழியத்தில் பணிபுரிய வேண்டும். பாருங்கள்? அவர்களை இங்கு கொண்டு வந்து, வார்த்தை அவர்களுக்கு அளிக்கப்பட்டால், பாருங்கள், குறை சொல்ல ஏதுவிராது. ஏதாவது ஒன்றிற்காக அவர்கள் உங்களைக் காண விரும்பினால், அவர்களை அலுவலகத்துக்கு கொண்டு வாருங்கள். அதற்காக சபையோரைப் பிடித்து வைக்க வேண்டாம்.
99பிறகு, உங்களுக்குத் தெரியுமா, ஜனங்கள் எழுந்து, ''நல்லது, நான் சொல்லுகிறேன், ஒரு நல்ல சாட்சி கூட்டம் வைக்கலாம்'' என்பார்கள். பாருங்கள்? இதை குற்றப்படுத்துவதாக எண்ண வேண்டாம், உங்களிடம் உண்மையையே எடுத்துரைக்கிறேன். பாருங்கள்? நான் கண்டது என்னவெனில்... இந்த சாட்சி கூட்டங்கள்... சில நேரங்களில் நன்மையைக் காட்டிலும் அதிக தீங்கு விளைவிக்கின்றன. பாருங்கள், அவை உண்மையில் அவ்விதம் செய்கின்றன.
எழுப்புதல் கூட்டத்தின்போது யாருக்காகிலும் ஒரு சூடான சாட்சி இருந்தால்; எழுப்புதல் கூட்டம் ஒன்று நடக்கிறதென்று வைத்துக் கொள்வோம், அதில் யாராகிலும் இரட்சிக்கப்பட்டு ஓரிரண்டு வார்த்தைகளைக் கூறவிரும்பினால், நல்லது தேவனுக்கு ஸ்தோத்திரம், அவன் தன் ஆத்துமாவிலுள்ள பாரத்தைக் கூறி தீர்த்துக் கொள்ளட்டும். பாருங்கள், அவன்.... அவன் அதைச் செய்ய விரும்பினால்; ''கர்த்தர் எனக்கு செய்த நன்மைக்காக அவருக்கு நன்றி கூற விரும்புகிறேன். சென்ற வாரம் அவர் என்னை இரட்சித்தார். தேவனுடைய மகிமையினால் என் இருதயம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தேவனுக்கு ஸ்தோத்திரம்'' என்று சுருக்கமாக சொல்லி உட்கார்ந்து கொள்ளலாம். ஆமென் அது நல்லது, அதை செய்யுங்கள். பாருங்கள், அதனால் பரவாயில்லை.
100ஆனால் நீங்கள், ''வாருங்கள், அடுத்தது யார்? அடுத்தது யார்? நாம் ஒரு சாட்சியைக் கேட்போம், நாம் ஒரு சாட்சியைக் கேட்போம்'' என்று நீட்டிக் கொண்டே போனால், அதற்கென்று ஒரு குறிப்பிட்ட இரவு கூட்டத்தை ஒதுக்கிவைத்து விடுங்கள். “இன்றிரவு.... அடுத்த புதன் இரவு, ஜெபக் கூட்டத்துக்குப் பதிலாக சாட்சி கூட்டம் இருக்கும்'' என்று அறிவியுங்கள். சாட்சிகளைக் கூற அவர்கள் கூட்டத்துக்கு வரும்போது, வேதத்தில் ஒரு பாகத்தைப் படித்து, ஜெபம் செய்து, அதன் பிறகு, ''இது சாட்சிக் கூட்டமாக இருக்குமென்று ஏற்கனவே உங்களுக்கு அறிவித்தோம்'' என்று கூறுங்கள். ஜனங்கள் ஒரு மணிநேரம் அல்லது நாற்பது நிமிடங்கள், அல்லது முப்பது நிமிடங்கள் - அது எதுவானாலும் - தொடர்ந்து சாட்சி உரைக்கட்டும். நான் கூறுவது விளங்குகிறதா? நீங்கள் இந்த முறையைக் கடைபிடித்தால், அது சபையோருக்கு உதவியாயிருக்கும், எல்லாவற்றிற்கும் உதவியாயிருக்கும்.
101இப்பொழுது, நேரமாகி விட்டது, எனவே... சகோதரனே, சகோதரர்களே, இது எனக்கு தெரிந்த மட்டும் சிறந்த பதில்கள். உங்கள் இருதயத்தில் எழுந்த கேள்விகளுக்கு இவை எனக்குத் தெரிந்த வரைக்கும் சிறந்த பதில்கள். இப்பொழுது முதல் என்ன செய்வதென்று உங்களுக்குத் தெரியும். உங்கள் மனதில் சந்தேகங்கள் எழுந்தால், இந்த ஒலிநாடாவிடம் வாருங்கள்... இதைப்போட்டு கேளுங்கள். அது டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், யாராயிருந்தாலும், இந்த ஒலிநாடாவைப் போட்டுக் கேளுங்கள். சபையோர் கேட்க விரும்பினால், அவர்களுக்கும் இந்த ஒலிநாடாவைப் போடுங்கள். இது எனக்குத் தெரிந்த வரைக்கும், எய்த் அண்டு பென தெருவிலுள்ள இந்த கூடாரத்துக்கு தேவனுடைய சித்தமாக உள்ளது. சகோதரரே, இதை பரிசுத்த ஆவியின் வழிநடத்தலுடன் தயவாயும் அன்புடனும் கடை பிடித்து, உங்கள் கிருபையை ஜனங்களுக்கு முன்பாக காண்பித்து நீங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அறியச் செய்ய உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கிறிஸ்தவர்கள் என்றால் எல்லாவிடங்களிலும் தள்ளப்படக்கூடிய குழந்தை என்று அர்த்தமல்ல. அது அன்பினால் நிறைந்த மனிதனை, தேவன் பேரிலும் சபையோர் பேரிலும் நிறைந்த அன்பைக் கொண்ட மனிதனைக் குறிக்கிறது. நான் கூறுவது புரிகிறதா?
102வேறெதாகிலும் கேள்வி உண்டா ?ஒலிநாடா முடியப்போகிறது. ஒருவர் எனக்காக அங்கு காத்துக் கொண்டிருக்கிறார். அவர் எந்த நேரத்தில் இங்கு வருவதாக கூறப்பட்டது? (பில்லி பால், இப்பொழுதே'' என்கிறார் - ஆசி.) இப்பொழுதே. அவரே இங்கு வருகிறாரா? (நான் அவரை அழைத்துக் கொண்டு வர வேண்டும்'' என்கிறார் - ஆசி.) சரி, ஐயா.
வேறு கேள்விகள் எதுவுமில்லை என்றால் நாங்கள் போகின்றோம். சரி, நாம் முடித்துவிடலாம். ஆம். என்ன சகோ. காலின்ஸ்? (இந்த ஒலிநாடாவை அணைத்து விடலாம்'' என்று சகோ. காலின்ஸ் கூறுகிறார் -ஆசி). சரி (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி).
103நல்லது, சகோதரரே, இன்றிரவு உங்களுடன் இருந்ததற்காக மகிழ்ச்சி யடைகிறேன். சகோ. நெவிலுக்கும், டீக்கன்மார்களுக்கும், தர்மகர்த்தாக்களுக்கும், ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளருக்கும், உங்கள் எல்லோருக்கும் என் பாராட்டுதலைக் தெரிவித்துக் கொள்கிறேன். தேவனுடைய இராஜ்யத்துக்கென்று இந்த ஒழுங்குகளைக் கடைபிடிக்க தேவன் உங்களுக்கு உதவி செய்வார் என்று நம்புகிறேன். இதை நான் கூறக்காரணம், நீங்கள் குழந்தை பருவத்திலிருந்து வளர்ந்த வயது வந்தவர் பருவத்தை அடைந்து விட்டீர்கள். நீங்கள் குழந்தையாயிருந்த போது, குழந்தையைப் போல் பேசினீர்கள், குழந்தையைப் போல் புரிந்து கொண்டீர்கள். இப்பொழுது நீங்கள் புருஷராகி விட்டீர்கள். எனவே தேவனுடைய வீட்டில் நாம் வயது வந்தவர் போல நடந்து கொண்டு, நமது உத்தியோகங்களை, ஒவ்வொரு உத்தியோகத்தையும் கனப்படுத்துவோம். தேவன் நமக்கு அளித்துள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நாம் ஒழுங்கில் அமைத்து, நமது வரங்களினாலும் உத்தியோகங்களிலும் தேவனை கனப்படுத்துவோமாக.
ஜெபம் செய்வோம்:
104பரலோகப் பிதாவே, ஜெபர்ஸன் வில்லிலுள்ள இந்த சபையில் கர்த்தருடைய வேலையைச் செய்வதற்கென வெவ்வேறு உத்தியோகங்களை வகிக்கும் இந்த மனிதர் இன்றிரவு ஒன்று கூடியுள்ளதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவனே, உமது கரம் அவர்கள் மேல் தங்கியிருந்து, அவர்களுக்கு உதவி செய்து அவர்களை ஆசீர்வதிப்பீராக. தேவனுடைய ராஜ்யத்தின் மேன்மைக்காவே இவை செய்யப்படுகின்றன என்பதை சபையோரும் மக்களும் அறிந்து கொள்வார்களாக. நாங்கள் தேவனுடைய ஆவியை அறிந்து கொண்டவர்களாய், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளும் மக்களாக இருப்போமாக. பிதாவே, இதை அருளும். உமது ஆசீர்வாதங்களுடன் எங்களை அனுப்பும். பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் மேல் கவனமாயிருந்து, எங்களை வழி நடத்திப் பாதுகாப்பாராக. எங்கள் கடையில் நாங்கள் எப்பொழுதும் விசுவாசமுள்ளவர்களாய் காணப்படுவோமாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.